44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு
44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44-th Chess Olympiad), சென்னை 2022 2022 சூலை 28 முதல் ஆகத்து 9 வரை இந்தியாவில், சென்னையில் நடைபெற்றது.[1][2][3] பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) இப்போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது. திறந்தநிலைப் போட்டிகளும்,[note 1][4] பெண்களுக்கான போட்டிகளும், சதுரங்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வு தொடக்கத்தில் உருசியாவில் காந்தி-மான்சீசுக்கு நகரில் இடம்பெறுவதாக இருந்து, பின்னர் மாஸ்கோவில் 2020 ஆகத்து மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.[5][6] இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.[7] பின்னர் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.[8] இதுவே இந்தியாவில் நடந்த முதலாவது சதுரங்க ஒலிம்பியாடு ஆகும்.[9] பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,737 ஆகும், இதில் 937 பேர் திறந்தநிலையிலும், 800 பேர் பெண்கள் போட்டியிலும் கலந்து கொண்டனர்.[10][11] பதிவு செய்யப்பட்ட அணிகளின் எண்ணிக்கை 186 நாடுகளில் இருந்து 188 அணிகள் திறந்தநிலையிலும்,[12] 160 நாடுகளில் இருந்து 162 பெண்கள் அணிகளும் பங்குபற்றின.[13] சதுரங்க ஒலிம்பியாது சென்னையில் செரட்டனின் போர் பாயிண்ட்சு மாநாட்டு மையத்திலும், தொடக்க, நிறைவு விழாக்கள் சவகர்லால் நேரு அரங்கத்திலும் நடைபெற்றன.[14] இந்த நிகழ்வின் தலைமை நடுவர் பிரான்சின் லாரன்ட் பிரேட் ஆவார்.[15] திறந்தநிலைப் போட்டிகளில் உசுபெக்கிசுத்தான் அணி தங்கப் பதக்கத்தை வென்றது, இது சதுரங்க ஒலிம்பியாடுகளில் அவர்களின் முதலாவது பதக்கமாகும், அதே நேரத்தில் பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கத்தை வென்றது. இது அவர்களது இரண்டாவது தங்கப் பதக்கமாகும் (முன்னர் 2006 இல் வென்றது). ஆங்கிலேய வீரர் டேவிட் ஹோவெல், திறந்த நிகழ்வில் 2898 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் சாத்தியமான 8 புள்ளிகளில் 7½ புள்ளிகளைப் பெற்று,[16] தனிப்பட்ட வீரருக்கான அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.[17] போலந்து வீராங்கனை ஒலிவியா கியோல்பாசா, பெண்கள் நிகழ்வில் 2565 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் சாத்தியமான 11 புள்ளிகளில் 9½ புள்ளிகளைப் பெற்று,[18] தனிநபருக்கான அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.[19] இந்த ஒலிம்பியாடு போட்டிகளின் போது, 93வது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் மாநாடும் நடந்தது, இதன்போது உருசியாவின் ஆர்க்காதி துவர்க்கோவிச் மாநாட்டின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், விசுவநாதன் ஆனந்த் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[20][21] ஏலச் செயல்முறை43 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 2019 சதுரங்க உலகக் கோப்பை போட்டிகளுக்கான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் ஏலச் செயல்முறை 2015 ஆம் ஆண்ட்டின் பிற்பகுதியில் தொடங்கியது. நிகழ்வை நடத்த ஆர்வமுள்ள ஒவ்வொரு நகரமும் 31 மார்ச் 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதிக்குள் தங்கள் ஏலத்தை பிடே அமைப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் கையேட்டின் ஒலிம்பியாடு விதிமுறைகளுக்கு இணங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாட்டாளரால் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் விதிகள் 4.1, 4.2 மற்றும் 4.3 ஆகியவற்றின் படி ஏற்பாட்டுக் குழு, நிதி மற்றும் வசதிகள் மற்றும் உதவித்தொகை வழங்குதல் தொடர்பான நடைமுறைகளும் இதில் அடங்கும்.[22][23] காண்டி-மான்சிசுக்கு நகரம் மட்டுமே சதுரங்க ஒலிம்பியாடு நடத்த ஏலம் கேட்டிருந்தது. அர்செண்டினா மற்றும் சுலோவாக்கியாவின் தேசிய கூட்டமைப்புகளும் ஆரம்ப ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.[24] 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாகுவில் நடந்த 87 ஆவது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலியும்சினோவ் ஏலத்திற்கு ஒப்புதல் அளித்தார்.[25][26] மார்ச் 15, 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இந்தியாவின் சென்னை இந்த நிகழ்வின் புதிய நிகழிடமாக இருக்கும் என்று பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு அறிவித்தது.[3] நிகழ்வுதொடக்க விழாஒலிம்பியாதின் தொடக்க நிகழ்வு 2022 சூலை 28 19:00 இ.சீ.நே மணிக்கு சவகர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விழாவைத் தொடக்கி வைத்தார்.[27] விழாவின் போது நரேந்திர மோடி பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் பற்றி குறிப்பிட்டார்.[28] [29] பங்குபற்றிய அணிகள்திறந்த போட்டிகளில் 186 தேசியக் கூட்டமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய 188 அணிகள் விளையாடின. இது ஒரு புதிய சாதனை ஆகும். போட்டிகளை நடத்திய இந்தியா மூன்று அணிகளைக் களமிறக்கியது. பெண்களுக்கான சுற்றுப் போட்டியில் 160 கூட்டமைப்புகளைச் சேர்ந்த 162 அணிகள் பங்கேற்றன. நெதர்லாந்து அண்டிலிசு, 2010 முதல் இல்லாத நிறுவனமாக இருந்தாலும், இந்தப் பெயரில் அணிகளைக் களமிறக்க அனுமதிக்கப்பட்டது.[30]
போட்டி விதிமுறைகளும் நாட்காட்டியும்அனைத்துப் போட்டிகளுக்குமான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாகும், 40வது நகர்வுக்குப் பிறகு ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடிகளாக கூடுதல் 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும். ஆட்டத்தின் போது எந்த நேரத்திலும் ஒரு வீரர் ஒப்புதலின் பேரில் சமநிலை வழங்க அனுமதிக்கப்படுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படும், இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடும். ஒவ்வொரு அணியும் ஒரு இருப்பு வீரரைப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறது.[31] ஒவ்வொரு சுற்றிலும் வென்ற ஆட்டப் புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற்றால், சமன்முறிவைப் பயன்படுத்துவதன் மூலம் முடிவு தீர்மானிக்கப்படுகிறது: 1. சோன்போர்ன்-பெர்கர் அமைப்பு; 2. எடுத்த மொத்தப் போட்டிப் புள்ளிகள்; 3. எதிரணியின் போட்டிப் புள்ளிகளின் கூட்டுத்தொகை, குறைந்த ஒன்றைத் தவிர்த்து.[31] தொடக்க நிகழ்வு சூலை 28 19:00 இசீநே மணிக்கு இடம்பெற்றது, இறுதி நிகழ்வு ஆகத்து 9 இல் 16:00 மணிக்கு இடம்பெற்றது. சுற்றுப் போட்டிகள் சூலை 29 இல் தொடங்கி ஆகத்து 9 இல் நிறைவடைந்தன. அனைத்துச் சுற்றுகளும் 15:00 மணிக்கு ஆரம்பமாயின. இறுதிச் சுற்று 10:00 மணிக்கு ஆரம்பமானது. ஆறாவது சுற்றுக்குப் பின்னர் ஆகத்து 4 ஓய்வு நாளாகும்.[32]
அணிகளும் பெற்ற புள்ளிகளும்திறந்த பிரிவு![]() போட்டியின் திறந்த பிரிவில் 186 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் போட்டியிட்டன. போட்டியை நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளைக் களமிறக்கியது.[12] பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் தரப்பட்டியலில் முதல் பத்து வீரர்களில் ஐவர் திறந்த பிரிவில் போட்டியிட்டனர். உலக வாகையாளர் மாக்னசு கார்ல்சன் நோர்வேக்காக விளையாடினார்.[33] முன்னாள் உலக வாகையாளர் விசுவநாதன் ஆனந்த் இம்முறை விளையாடவில்லை, அதற்குப் பதிலாக இந்திய அணிக்கு வழிகாட்டியாக இருக்க முடிவு செய்தார்.[34] உருசியா இப்போட்டியில் விளையாடத் தடை செய்யப்பட்டிருந்ததாலும், சீனா போட்டிகளில் இருந்து விலகியதாலும் 2023 உலக சதுரங்க வெற்றியாளர் போட்டியில் விளையாடவிருக்கும் இயான் நிப்போம்னிசி, டிங் லிரென் ஆகியோர் ஒலிம்பியாடில் விளையாடவில்லை.[35][36] உருசியாவும் சீனாவும் இல்லாத நிலையில், 2771 என்ற சராசரி மதிப்பீட்டில் அமெரிக்கா தெளிவான வெற்றியாளராகப் பார்க்கப்படது, இது 2018 பத்தூமி ஒலிம்பியாது அணியின் சராசரியை விட ஒரு மதிப்பீடு புள்ளி குறைவானதாகும்.[37] போட்டி நடத்தும் நாடான இந்தியா, போட்டிக்கு முந்தைய சராசரி மதிப்பீடு 2696 உடன் இரண்டாவது வலிமையான அணியைக் கொண்டிருந்தது, இதில் விதித் சந்தோசு குச்ராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணன், அர்ச்சூன் எரிகாய்சி, எசு. எல். நாராயணன், கிருஷ்ணன் சசிகிரண் ஆகியோர் விளையாடினர்.[38][39] நார்வே அணியில் மாக்னசு கார்ல்சன் விளையாடியதால் அதன் சராசரியாக 2692 மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[40][41] செருமனி, உசுபெக்கிசுத்தான் அணிகளும் மற்றும் குறிப்பாக இந்தியாவின் இரண்டாவது அணியான ர. பிரக்ஞானந்தா, நிகால் சரின், குகேஷ் ஆகியோரின் இளம் அணிகளும் ஆச்சரியத்தைத் தரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.[37][40] திறந்த நிகழ்வின் முடிவுகள்![]() திறந்த நிகழ்வில் உசுபெக்கிசுத்தான் 19 ஆட்டப் புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைப் பெற்றது. எட்டு வெற்றிகளுடனும், மூன்று வெற்றி-தோல்வியற்ற போட்டிகளும் இவர்கள் இத்தொடரின் தோற்கடிக்கப்படாத அணியாகத் திகழ்கிறது.[42] வெள்ளிப் பதக்கம் வென்ற ஆர்மேனியாவும் 19 புள்ளிகளைப் பெற்றது, ஆனால் 9-ஆவது சுற்றில் உசுபெக் அணியிடம் தோற்றதால் சமன்முறிவை இழந்தது.[43][44] 16 வயதான குகேஷ் டியின் வலுவான ஆட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது, குகேசு முதல் எட்டு சுற்றுகளில் தொடர்ந்து எட்டு ஆட்டங்களிலும் வென்றார், ஆனால் உசுபெக் அணியுடனான அவர்களின் போட்டியில் நோதிர்பெக் அப்துசத்தோரோவிடம் தோல்வியடைந்தார், இது இரண்டாம் இந்திய இறுதி நிலையைத் தீர்மானித்தது.[43][45] மூன்று அணிகள் 17 ஆட்டப் புள்ளிகளைப் பெற்றன (ஒவ்வொன்றும் ஏழு வெற்றிகள், மூன்று சமன்கள், ஒரு தோல்வி): 1-ஆவது இந்திய அணி நான்காவதாகவும், அமெரிக்கா ஐந்தாவதாகவும், மல்தோவா ஆறாவதாகவும் வந்தன.[42] மூன்று தோல்விகளை சந்தித்த பேபியானோ கருவானா, போட்டியில் ஒரே ஒரு ஆட்டத்தை மட்டுமே வென்ற லெவோன் அரோனியன் ஆகியோரின் மந்தமான செயல்திறன் காரணமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அணி பதக்கம் வெல்லத் தவறியது.[43] அதிக மதிப்பெண் பெற்ற தனிநபர் வீரராக டேவிட் ஹோவெல் (இங்கிலாந்து) விளையாடினார், அவர் 2898 செயல்திறன் மதிப்பீட்டுடன் சாத்தியமான 8 புள்ளிகளில் (ஏழு வெற்றிகள் மற்றும் ஒரு சமன்) 7½ புள்ளிகள் எடுத்தார்.[16] 2867 செயல்திறன் மதிப்பீட்டுடன் சாத்தியமான 11 இல் 9 மதிப்பெண் பெற்ற இந்தியா-2-இன் குகேஷ், 2774 செயல்திறன் மதிப்பீட்டுடன் 10க்கு 7½ மதிப்பெண் பெற்ற இந்தியா-2-ன் நிகால் சரின், உசுபெக்கித்தானின் சகோங்கிர் வாகிதோவ் ஆகியோருக்கும் தனிப்பட்ட தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.[46]
போட்டியில் குறைந்தது எட்டு ஆட்டங்களில் விளையாடிய வீரர்களுக்கான செயல்திறன் மதிப்பீடுகளின்படி அனைத்து பலகைப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மூன்றாவது குழுவில் டேவிட் ஹோவெல் 2898 மதிப்பீட்டில் சிறந்த செயல்திறனைக் கொண்டிருந்தார்.[47]
பெண்களுக்கான நிகழ்வுபெண்கள் போட்டியில் 160 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 162 அணிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளன. போட்டியை நடத்தும் நாடான இந்தியா, மூன்று அணிகளை களமிறக்கியது.[13] 2022 சூலையில் வெளியிடப்பட்ட பிடே தரவரிசைப் பட்டியலின்படி, பெண்கள் போட்டியில் பத்து முன்னணி வீரர்களில் மரியா முசீச்சுக், அன்னா முசீச்சுக், நானா சக்னீத்செ மட்டுமே பங்கேற்கின்றனர். உலகின் அதிக தரமதிப்பீடு பெற்றவரான கூ யிஃபான், தற்போதைய மகளிர் உலக வாகையாளர் சூ வெஞ்சூன், முன்னாள் மகளிர் உலக வாகையாளர் டான் சோங்கி ஆகியோர் சீனாவின் விலகல் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை, அதேவேளை முன்னாள் மகளிர் உலக வாகையாளர் அலெக்சாண்ட்ரா கொசுத்தெனியூக், முதல் பத்து தரவரிசையில் உள்ள அலெக்சாண்ட்ரா கரியாச்கினா, கத்தரீனா லாக்னோ ஆகியோர் உருசியாவின் இடைநீக்கம் காரணமாக விளையாடவில்லை. முன்னாள் மகளிர் உலக வாகையாளர் அன்னா உசெனினா தனது சொந்த நாடான உக்ரைனுக்காக விளையாடுகிறார்.[48] கடந்த 11 ஒலிம்பியாடுகளில் ஒன்பதில் தங்கப் பதக்கத்தை வென்ற உருசியாவும் சீனாவும் இல்லாததால், போட்டி நடத்தும் நாடான இந்தியா 2486 என்ற சராசரி மதிப்பீட்டில் முதல் தரவரிசையில் உள்ளது. இந்த அணியில் கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி ஆகியோரும், வைசாலி இரமேசுபாபு, தானியா சாச்தேவ், பக்தி குல்கர்ணி ஆகியோரும் முதல் பலகைகளில் உள்ளனர்.[13] பெண்கள் பிரிவின் முடிவுகள்உக்ரைன் ஏழு வெற்றிகளுடனும் நான்கு சமநிலைகளுடனும், 18 ஆட்டப் புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இது அவர்களின் இரண்டாவது வெற்றியாகும், முன்னதாக 2006 இல் வென்றிருந்தது.[49] ஜார்ஜியா 18 ஆட்டப்புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், மோசமான சமன் முறிவைக் கொண்டிருந்ததால், வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது. முதலாவது இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. ஏழு சுற்றுகளுக்குப் பிறகு இரண்டு புள்ளிகளுடன் போட்டியில் முன்னணியில் இருந்த இந்திய அணி, ஒன்பதாவது சுற்றில் போலந்திடமும், பதினொராவது சுற்றில் அமெரிக்காவிடமும் தோற்று, 17 ஆட்டப்புள்ளிகளைப் பெற்றது.[45][50] அமெரிக்காவும் கசக்கசுத்தானும் இந்தியாவைப் போலவே 17 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், பலவீனமான சமன்முறிவுகளைக் கொண்டிருந்ததால் அவை முறையே நான்காவதும், ஐந்தாவதும் இடங்களைப் பிடித்தன.[49] பெண்களுக்கான போட்டியில் போலந்தைச் சேர்ந்த ஒலிவியா கியோலாபாசா அதிகபட்ச தனிநபர் புள்ளிகளைப் பெற்றிருந்தார். அவர் சாத்தியமான 11 புள்ளிகளில் (ஒன்பது வெற்றிகள், ஒரு சமன், ஒரு தோல்வி), 2565 செயல்திறன் மதிப்பீட்டில் 9½ புள்ளிகளை எடுத்தார்.[18][19] தனிப்பட்ட தங்கப் பதக்கங்களை சுவீடனின் பியா கிராம்லிங் (11 இல் 9½ புள்ளிகள், பலகை ஒன்றில் 2532 மதிப்பெண்கள்), ஜார்ஜியாவின் நினோ பாட்சியாசுவிலி (10 இல் 7½, பலகை இரண்டில் 2504 மதிப்பீடு செயல்திறன்), மங்கோலியாவின் பாட்-எர்டென் முங்குன்சுல் (நான்காவது பலகையில் 2460 மதிப்பெண்கள், 10க்கு 7½), செருமனியின் சனா சினைடர் (2414 மதிப்பீடு செயல்திறன், 10க்கு 9) ஆகியோர் பெற்றனர்.[51]
போட்டியில் குறைந்தது எட்டு ஆட்டங்களில் விளையாடிய வீராங்கனைகளுக்கான செயல்திறன் மதிப்பீடுகளின்படி அனைத்து பலகைப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மூன்றாவது குழுவில் ஒலிவியா கியோல்பாசா 2565 மதிப்பீட்டில் சிறந்த செயல்திறனைக் கொண்டிருந்தார்.[51]
கவலைகளும் சர்ச்சைகளும்உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகள்பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையில் செயல்படும், ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாளன்று பரிந்துரைகளை வெளியிட்டது. உருசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் இணக்கமற்ற காரணத்தால் வரவிருக்கும் நான்கு ஆண்டு காலத்தில் முக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்தது.[52] சில நாட்களுக்குப் பிறகு, உருசிய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவு, உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சதுரங்க ஒலிம்பியாடு உட்பட திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் உருசியா நடத்தும் என்றும் அறிவித்தார்.[53] நவம்பர் 28 அன்று, உலக சதுரங்க வெற்றியாளர் போட்டி மற்றும் சதுரங்க ஒலிம்பியாடு ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையொப்பமிடப்பட்டுள்ளன என்று உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு பிடே அமைப்பு அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. ஒவ்வொரு நிகழ்வையும் ஒழுங்கமைக்க ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே நடைமுறையில் என்றும் அதனால் இரண்டு போட்டிகளும் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட விதிவிலக்குகளின் கீழ் வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கோவிட்-19 பெருந்தொற்றுமார்ச் 24, 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் நாளன்று பிடே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில் பெருகி வரும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் மக்களின் வாழ்க்கையில் நோய் தாக்கத்தின் விளைவாக 2021 ஆம் ஆண்டு கோடையில் நடைபெறவிருந்த சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் ஒத்திவைக்கப்படும் ஏன்றும் அவை மீண்டும் திட்டமிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது,[7][54] உருசிய உக்ரைன் போர்உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் காரணமாக, FIDE 26 பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் நாளன்று உருசியாவில் போட்டிகள் நடைபெறாது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. கூடுதலாக, குறைபாடுகள் உள்ளவர்களுக்கான முதல் சதுரங்க ஒலிம்பியாடு தொடக்க விழா போட்டிகளும் மாசுகோவில் நடக்கவிருந்த 93 ஆவது பிடே கூட்டமைப்பின் கூட்டமும் மாற்றப்பட்டன.[8] இதனையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia