ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு
ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு (Oceania Football Confederation (OFC)) என்பது ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது நியூசிலாந்து, தொங்கா, பிஜி மற்றும் பசிபிக் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓசியானியா பிராந்தியத்தின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். ஓசியானியா பகுதியில் கால்பந்து விளையாட்டைப் பிரபலப்படுத்துவதும், பிராந்தியக் கால்பந்து சங்கங்களுக்கிடையேயான போட்டிகளை நடத்துவதும், கால்பந்து உலகக்கோப்பைக்குத் தகுதிப் போட்டிகளை நடத்துவதும் இக்கூட்டமைப்பின் பணிகளாகும். பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு பிராந்திய கூட்டமைப்புகளில் ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பே உறுப்பினர் சங்கங்களின் எண்ணிக்கையில் மிகச்சிறியதும், பெரும்பாலும் தீவு நாடுகளால் ஆனதும் ஆகும். மேலும், இப்பிராந்தியத்தில் கால்பந்து அவ்வளவாக பிரபலமான விளையாட்டு இல்லை. ஆகையால், உலக அளவிலான கால்பந்து விளையாட்டில் இதன் தாக்கம் குறைவே. பெரும் பெயர் பெற்ற கால்பந்துக் கழகங்களில் விளையாடும் அளவுக்கு வீரர்களும் இக்கூட்டமைப்பில் இல்லை. 2006-ஆம் ஆண்டு ஆத்திரேலியா இக்கூட்டமைப்பிலிருந்து விலகி ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் இணைந்த பிறகு நியூசிலாந்தே இக்கூட்டமைப்பில், பெரிய கால்பந்துச் சங்கமாக இருக்கிறது. ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு நவம்பர் 15, 1966, அன்று தோற்றுவிக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் தலைமையகம் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் அமைந்துள்ளது. மேலும் பார்க்க
குறிப்புதவிகள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia