ஓணான் கொத்திக் கழுகு
ஓணான் கொத்திக் கழுகு (Short-toed Snake Eagle) இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகளில் பெரியதாக உள்ளது. இதன் குடும்பப்பெயர் அசிபித்ரிடே என பிரிக்கப்பட்டுள்ளது. இப்பறவைகள் இரவிலும் பகலிலும் தமது இரையைப்பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டவை. இவற்றைப்போல் பூனைப் பருந்து இதன் குணங்களைக் கொண்டுள்ளது.மேற்கு ஐரோப்பா கண்டப் பகுதியில் அமைந்துள்ள கிரேக்கப் பகுதிகளிலும் இவ்வகையான பறவைகளைக் காணமுடிகிறது. பழைய உலகப்பறவைகள் வரிசையில் குறிப்பிடப்படும் இப்பறவைகள் நடுநிலக் கடல் பகுதிகளில் அமைந்துள்ள உருசியா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியத் துணைக்கண்டம், மேலும் இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களிலும் பரவியுள்ளது. வாழ்விடம்இப்பறவைகள் நடுநிலக் கடல் பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பா, முதல் ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிவரை செப்டம்பர் முதல் அக்டோபர் வரை வலசை வருகின்றன.[2] பின்னர் இவை ஏப்ரல் அல்லது மே மாதவாக்கில் திரும்பிச்செல்லுகின்றன. மத்தியப்பகுதி மற்றும் தூரக்கிழக்குப் பகுதியில் கூடுகட்டி வாழுகின்றன.[3] ஐரோப்பா பகுதியில் பல இடங்களில் இவற்றைப்பார்க்க முடிகிறது. 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்துப் பகுதி மற்றும் சில்லித்தீவுகளிலும் பார்த்ததாகப் பதிவாகியுள்ளது.[4] பெரும்பாலும் வரண்ட இலையுதிர் புதர்க்காடுகளில் கூடுகட்டி இனவிருத்தி செய்கிறது. பெரிய மரங்களின் உச்சியில் கூடுகட்டி திறந்த வாழ்விடங்களில் வாழுகிறது. தன் உணவிற்காக திறந்த புல்வெளிகளை நாடுகிறது.[4] விளக்கம்இப்பறவைகளில் ஆண் பறவை சிறகு விரிந்த நிலையில் 170 முதல் 185 செமீ உயரமும் சாதாரண நிலையில் 62 செமீ முதல் 67 செமீ உயரம் கொண்டதாகவும் 1.2 முதல் 2.3 கிலோ எடை கொண்டும் காணப்படுகிறது தன் உடல் பகுதியின் கீழ்பகுதியில் வெள்ளை நிறமும் மேற்பகுதியில் சாம்பல் நிறமும் கொண்டு காணப்படுகிறது. உடல் முழுவதிலுமே கோடுகள் கொண்டதாக உள்ளது. பார்ப்பதற்கு ஆந்தையைப்போல் உருண்டையான தலையுடன் மஞ்சள் கண்களுடனும், சிறகுக்குக்கீழே அடர்ந்த நிறம் கொண்டும் காணப்படுகிறது. இவற்றில் காணப்படும் பேரினத்தைக்காட்டிலும் இவை அதிக நேரம் வானில் பறக்கும் திறன் கொண்டதாக உள்ளது. பெரிய மலைகளின் மேலிருந்து 500 மீட்டருக்கும் மேலிருந்து வேகமாக பறந்துவந்து தன் உணவைப்பிடிக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.[5] தன் உணவு கிடைக்கும்வரை வானில் சிற்றெழால் பறவைபோல் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும் குணம் கொண்டதாகும். வானில் வட்டமிட ஓரளவு தட்டையான இறக்கைகளைப் பெற்றிருகின்றன. ஒளிப்படங்கள்
மேற்கோள்கள்
மேலும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia