ஓவன் சேம்பர்லேன்
ஓவன் சேம்பர்லேன் (Owen Chamberlain, சூலை 10, 1920 – பெப்ரவரி 28, 2006) அமெரிக்க இயற்பியலறிஞர் ஆவார். அணுவடி இதிர்த்துகள்களில் ஒன்றான எதிர் புரோத்தனைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும் எமீலியோ சேக்ரே என்பவருக்கும் 1959 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] வாழ்க்கைக் குறிப்புசான் பிரான்சிஸ்கோவில் பிறந்த ஓவன் சேம்பர்லேன், டார்ட்மவுத் கல்லூரியில் இயற்பியல் படித்தார். பின்னர் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தார். இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தில் 1942 இல் மன்காட்டன் திட்டத்தில் இணைந்தார்.[2] போருக்குப் பின்னர், 1946 இல் பிரபல இயற்பியலாளர் என்ரிக்கோ பெர்மியின் கீழ் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படித்து,[3] 1949 இல் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1985 இல் சேம்பர்லேன் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, 1989 இல் இளைப்பாறினார். 2006 பெப்ரவரி 28 இல், பெர்க்கிலியில் தனது 85-வது அகவையில் காலமானார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia