கசட தபற
கசட தபற (Kasada Thapara) என்பது 2021இல் வெளியான தமிழ் மொழியில் வெளியான திரைப்படமாகும். இதை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியும் ஆர் ரவீந்திரனின் திரிசூலம் ஆர்ட்ஸ் நிறுவனமும் கூட்டாகத் தயாரித்திருந்தன. படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 27 ஆகஸ்ட் 2021 அன்று சோனி Livல் ஒளிபரப்பப்பட்டது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 6 தொகுப்புகளைப் போலவே படத்தின் பெயரும் 6 எழுத்துக்களைக் கொண்டுள்ளது. நடிப்புதயாரிப்பு"கசட தபற" என்ற பெயரில் சிம்பு தேவன் இயக்குவதாக நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார். இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனமும், ஆர்.ரவீந்திரனின் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் தெரியப்படுத்தப்பட்டது.[2] சிம்பு தேவன் திரைப்படம் ஒரு தொகுப்பு அல்ல என்று கூறினார். ஆனால் ஆறு இயக்குனர்கள், ஆறு படத் தொகுப்பாளர்கள், ஆறு இசை இயக்குனர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவுடன் ஆறு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு கதையை கொண்ட படமாக இருந்தது.[3][4][5][6] இசைஇந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சாம் சி. எஸ், ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். வெளியீடுஇந்த படம் ஆகஸ்ட் 27, 2021 அன்று சோனி Liv -இல் வெளியிடப்பட்டது.[7][8] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia