கசன் (மன்னன்)
கசன் என்பவர் மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான ஈல்கானரசின் ஏழாவது ஆட்சியாளர் ஆவார். இவர் தற்போதைய ஈரானை 1295 முதல் 1304ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தார். இவர் அர்குனின் மகன், அபகா கானின் பேரன் மற்றும் குலாகு கானின் கொள்ளுப்பேரன் ஆவார். சிங்கிசு கானின் நேரடி வழித்தோன்றல்களான ஒரு தொடர்ச்சியான மன்னர்களின் பாரம்பரியத்தை இவர் தொடர்ந்தார். ஈல்கான்களிலேயே இவர் மிகுந்த புகழ் பெற்றவராகக் கருதப்படுகிறார். அதற்கு ஒரு காரணம் இவர் இசுலாமுக்கு மதம் மாறியதுமாகும். 1295ஆம் ஆண்டில் இமாம் இப்னு தைமியாவைச் சந்தித்த பிறகு இவர் இசுலாமுக்கு மதம் மாறினார். மேற்காசியாவில் மங்கோலியர்களின் முதன்மை மதமாக இசுலாம் மாறியதில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இவரது முதன்மை மனைவிகளில் ஒருவர் கோகோசின் என்ற ஒரு மங்கோலிய இளவரசியும் அடங்குவார். கோகோசின் உண்மையில் குப்லாய் கானால் கசனின் தந்தை அர்குனுக்கு நிச்சயிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தார். கசனின் ஆட்சியின்போது நடைபெற்ற இராணுவச் சண்டைகளாக சிரியாவை கட்டுப்படுத்துவதற்கு இவர் எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் போரிட்டது மற்றும் துருக்கிய-மங்கோலியச் சகதாயி கானரசுக்கு எதிராக இவர் செய்த யுத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கசன் ஐரோப்பாவுடன் தூதரகத் தொடர்புகளையும் தொடர்ந்தார். இவரது தந்தையின் தோல்வியடைந்த முயற்சியான பிராங்கோ-மங்கோலியக் கூட்டணியை உருவாக்குவதன் முயற்சியின் தொடர்ச்சியாக இதை அவர் செய்தார். இவர் மிகுந்த கலாச்சாரம் உடைய மனிதராகக் கருதப்படுகிறார். பல மொழிகளைப் பேசினார். பல்வேறு பொழுது போக்குகளைக் கொண்டிருந்தார். ஈல்கானரசின் பல ஆக்கக் கூறுகளை மறுசீரமைப்புச் செய்தார். குறிப்பாக பணத்தை தரப்படுத்தியது மற்றும் நிதிக்கொள்கை ஆகிய விஷயங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம். ![]() ![]() ![]() குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia