கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்
காத்ர சுந்தரேசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் (முன்னர் நாகப்பட்டினம் மாவட்டம்) கஞ்சாநகரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் 'கார்த்திகா சுந்தரேசுவரர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.[1] அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் பிறந்து முக்தி அடைந்த திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது.[2] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.13 மீட்டர்கள் (75.9 அடி) உயரத்தில், (11°06′57″N 79°42′26″E / 11.115856°N 79.707249°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. முக்கியத்துவம்கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களது தோசம் நீங்க இக்கோயிலில் வழிபட்டு பரிகாரம் செய்து கொள்ளும் தலமாக இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.[3] இதர தெய்வங்கள்துர்க்கை, சண்டிகேசுவரர், பிரம்மா, மேதா தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், செல்வ விநாயகர், சுப்பிரமணியர், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia