கடற்படை விமான அருங்காட்சியகம் அருங்காட்சியக நுழைவாயில், 2008 |
 |
நிறுவப்பட்டது | 12 அக்டோபர் 1998 |
---|
அமைவிடம் | வாஸ்கோட காமா, கோவா, இந்தியா |
---|
வகை | இராணுவ அருங்காட்சியகம்]] |
---|
கடற்படை விமான அருங்காட்சியகம் இந்தியாவின் கோவா மாநிலத்தில் வாஸ்கோடகாமாவிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள போக்மலோவில் அமைந்துள்ள ஓர் இராணுவ அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் பல பத்தாண்டுகளாக இந்திய கடற்படையில் காணப்படுகின்ற பரிணாமங்களைத்தை வெளிப்படுத்துகின்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வெளிப்புற காட்சிக்கூடம் ஆகும். மற்றொன்று மற்றும் இரண்டு தளங்களைக் கொண்ட உட்புற காட்சிக்கூடமாகும். இந்த அருங்காட்சியகம் அக்டோபர் 1998 ஆம் ஆண்டில்இல் திறந்து வைக்கப்பட்டது, இது இந்தியாவின் இரண்டு இராணுவ விமான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும், மற்றொன்று டெல்லியில் பாலம் என்னுமிடத்தில் உள்ள இந்திய விமானப்படை அருங்காட்சியகம் ஆகும்.[1] ஆசியாவில் உள்ள ஒரே கடற்படை விமான அருங்காட்சியகம் என்ற பெருமையை இந்த அருங்காட்சியகம் பெற்றுள்ளது.[2]
அமைப்பு
இந்த கடற்படை விமான அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்கள் காட்சிப் பிரிவு, வரவேற்பறை, சிற்றுண்டி விடுதி, இதழ்கள் விற்பனை, விராத் அரங்கம், விக்ராண்ட் அரங்கம், அவியாஃப்லிக்ஸ் சிறு அரங்கம் உள்ளிட்ட பிரிவுகள் அமைந்துள்ளன. காட்சிக்குரியனவாக உள்ளவற்றில் வரவேற்பு பகுதியினை அடுத்து விமான இயந்திரங்கள், ஏவுகணைகள் மற்றும் இலக்கு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் பைலட்லெஸ் விமானம் ' சுகர் ' ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பிரிவு ஆகியவற்றைக் காணமுடியும். ஒவ்வொரு விமான ஆர்வலரும் தூய பொறியியல் அதிசயங்களான சீ ஹாரியர் மற்றும் டூபெலோவ் -142 எம் போன்ற விமானங்களின் இயந்திரங்களின் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளவற்றைக் காணும் வசதி உள்ளது. இந்த இயந்திரங்களின் கட்டுமானம் மற்றும் பொறியியல் வடிவமைப்பு காண்போரை பிரமிப்படையச் செய்யும் வகையில் உள்ளது. முன்னோக்கி நகரும்போது, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு விமானங்களைக் காணலாம். கடற்படை விமான வரலாற்றில் ஒவ்வொன்றிற்கும் அதன் தனித்துவமான இடம் உண்டு எனலாம். சேடக் போன்ற ஹெலிகாப்டர்கள் இன்னும் ஆயுதப்படையில் சேவை புரிந்து வருகின்றன. பார்வையாளர் வசதிக்காக ஒவ்வொரு விமானத்தைப் பற்றிய குறிப்பும் அருகில் தரப்பட்டுள்ளன.[3]
வெளிப்புற காட்சிக்கூடம்
இந்த அருங்காட்சியக வெளிப்புற காட்சிக்கூடத்தில் ஒரு பெரிய பூங்கா அமைந்துள்ளது. இதில் பார்வையாளர்கள் நடந்து செல்லலாம். சென்றபடியே அங்கு கடற்படையில் சேவை புரிந்த, பிரித்து வைக்கப்பட்டுள்ள விமானங்களையும், அதன் பகுதிகளையும் காணலாம். அவற்றில் சில 1940 களுக்கு முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்தவையாக உள்ளன. அங்குள்ள ஒரு சிறிய கொட்டகையில் பல்வேறு விமான இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 13 விமானங்கள் அங்கு காட்சியில் உள்ளன.
- குறுகிய சீலண்ட் எம்.கே 2 - ஐ.என் 106 என்பது இந்தியாவில் எஞ்சியிருக்கும் இவ்வகையைச் சேர்ந்த ஒரே விமானம் ஆகும். மேலும் உலகில் காணப்படுகின்ற மூன்று சீலண்டு விமானங்களில் ஒன்று என்ற பெருமையும் இதற்கு உண்டு. 1953 ஆம் ஆண்டில் கடற்படை விமான இயக்குநரகம் நிறுவப்பட்ட பின்னர் சேர்க்கப்பட்ட முதல் விமான வகை சீலண்ட் இதுவே ஆகும். அவை 1965 இல் படிப்படியாக அதன் சேவையை நிறுத்திக்கொண்டன.[4]
- ஃபைரி ஃபயர்ஃபிளை டிடி எம்.கே 1 - ஐ.என் 112 என்பது பிரித்தானிய டபிள்யுடபிள்யு 2-காலத்தைச் சேர்ந்த கேரியர் மூலம் செல்லும் போர் விமானமாகும். மேலும் இது நீர்மூழ்கி எதிர்ப்பு விமானமும் ஆகும். இது மே 55 இல் இலக்கினைக் கட்டி இழுத்தல் என்னும் நோக்கிற்காக வாங்கப்பட்ட விமானமாகும்.[5]
- எச்ஏஎல் எச்டி2 - பிஎக்ஸ் 748 விமானமானது கடற்படையால் 1956 ஆம் ஆண்டு முதல் முதல் 1964 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இவ்வகை விமானம் முதன்மை நிலையில் உள்ள பயிற்சியாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டது.[6] தற்போது காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள விமானமானது இந்திய விமானப்படையின் அடையாளங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
- டி ஹவில்லேண்ட் வாம்பயர் டி-55 - ஐஎன் 149 என்ற விமானம் டி55 இருக்கை அமைப்பைக் கொண்டதாகும். வேம்பயர் விமானத்திலிருந்து சற்று மாறுபட்ட இவ்வகை விமானம் செப்டம்பர் 1957 ஆம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. சீ ஹாக் வகையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஜெட் விமானத்தில் கடற்படை விமான வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக இவ் வகையிலான விமானம் வாங்கப்பட்டது.
- ஹாக்கர் சீ ஹாக் எப்ஜிஏ எம்கே 100 - ஐஎன் 234 வகை விமானமானது சீ ஹாக்ஸ் வகையைச் சேர்ந்தது. அது இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் உடன் சேவையில் நுழைந்ததாகும். பின்னர் 20 ஆண்டுகள் கழித்து சீ ஹாரியர்ஸ் வகை விமான வகைக்கு மாற்றம் செய்யப்பட்டது.[7]
- ப்ரெகூட் அலிஸா - ஐஎன் 202 வகை விமானமான அலிஸ் என்பது கடற்படையின் முதல் கேரியர் அடிப்படையிலான நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானமாகும், மேலும் 1961 ஆம் ஆண்டில் தன் சேவையை ஆரம்பித்தது.[8]
- டி ஹவில்லேண்ட் டோவ் - ஐஎன்124 என்ற வகை விமானமான டோவ் 1965 ஆம் ஆண்டில், சிறிய சீலேண்ட் விமானத்திற்கு மாற்றாக, இந்திய விமானப்படையில் பெறப்பட்டது.
- எச்ஏஎல் சேடக் - ஐஎன் 475 ஐஎன்எஸ் விக்ராந்த் உடன் 1961 ஆம் ஆண்டில் சேவையில் இறங்கியது. தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டராக அது சேவையில் நுழைந்தது.
- ஹியூஸ் ஹு -300 - IN 083, ஹியூஸ் ஹூ 300 வகை ஹெலிகாப்டர்கள் இரண்டு இருக்கைகள் கொண்டதாகும். 1971 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விமானிகளின் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டன, அவை 1980 களின் நடுப்பகுதியில் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டன.[9]
- வெஸ்ட்லேண்ட் சீ கிங் எம்.கே 42. - 1970 ஆம் ஆணடில்கடற்படையில் நீர்மூழ்கி எதிர்ப்புக்காக வாங்கப்பட்டது.[10]
- லாக்ஹீட் எல் 1049 ஜி சூப்பர் கான்ஸ்டெல்லேஷன் - ஐஎன் 315 வெளிப்புற காட்சிக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முக்கியமான விமானமாகும். இந்த லாக்ஹீட் எல் -1049 ஜி வகையானது முதலில் ஏர் இந்தியாவுக்கு 1955 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்போது அதற்கு எல்லோராவின் ராணி என்று பெயர் சூட்டப்பட்டது. இது 1961 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படைக்கு மாற்றப்பட்டது, பின்னர் 1976 இல் கடற்படை விமானப்படைக்கு மாற்றப்பட்டது. இறுதியாக 1983 ஆம் ஆணடில் ஓய்வு பெற்றது.[11]
- கமோவ் கா -25 - IN 573, 1980 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட கா -25 கள் வகையைச் சேர்ந்தது. இது நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் இரண்டாம் நிலை கண்காணிப்பு மற்றும் தேடல் மற்றும் மீட்பு ஆகிய பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.[12]
- சீ ஹாரியர் FRS.51 - IN 621 இங்கு காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஒற்றை இருக்கை வகையைக் கொண்டதாகும். இந்த சீ ஹாரியர் 1991 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்குசேர்க்கப்பட்டது. இது ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ் விராட் ஆகியவற்றைக் களமாகக் கொண்டு அமைந்தது.[13]
உட்புற காட்சிக்கூடம்
உட்புறக் காட்சிக்கூடத்தில் பார்வையாளர்கள் இந்திய விமான மற்றும் கடற்படை படைகள் பங்கேற்ற முக்கிய போர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இக்காட்சிக்கூடத்தில் குறிப்பிட்ட தலைப்புகளுக்குத் தக்கபடி சிறப்பு அறைகள் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்களில் இணைக்கப்பட்டுள்ள இராணுவ ஆயுதங்களைக் காட்டுவனவாகும். பல ஆண்டுகளாக இந்திய வான் மற்றும் கடற்படைப் படைகளின் உறுப்பினர்கள் அணிந்திருந்த சீருடைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் உடைகளும் இங்கு காட்சியில் உள்ளன. 1959 ஆம் ஆண்டு முதல் கடற்படை விமான வரலாற்றில் பல முக்கியமான காலங்களைக் காட்டும் பல அரிய மற்றும் விண்டேஜ் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு காட்சிக்கூடத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ் விராட் ஆகியவற்றின் மாதிரிகள் உள்ளன . மற்றொரு கூடத்தில் இந்தியக் கடற்படை பயன்படுத்தும் பலவிதமான குண்டுகள், டார்பிடோக்கள், சென்சார்கள் மற்றும் பீரங்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. .
அருங்காட்சியக தகவல்
இந்த அருங்காட்சியகமானது கடற்படை சொத்தாக தபோலிம் விமான நிலையத்தின் தென் பகுதியில், போக்மலோ சாலைக்கு எதிரே தேசிய நெடுஞ்சாலை 17 இல் அமைந்துள்ளது. கடற்படை விமான அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு பெரியவர்களிடம் ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கேமராக்கள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அதற்கு தனியாக வசூலிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் எல்லா நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். திங்கட்கிழமை இதற்கு விடுமுறை நாளாகும்.
இவற்றையும் காண்க
புகைப்படத்தொகுப்பு
- கடற்படை விமான அருங்காட்சிய புகைப்படங்கள்
-
ஃபைரி ஃபயர்ஃபிளை
-
HAL HT-2 கழுவப்படுகிறது
-
தி டி ஹவில்லேண்ட் வாம்பயர்
-
காட்சிக்கு வைக்கப்பட்ட விமானங்கள்
-
தி ப்ரெகூட் அலிஸா
-
தி டி ஹவில்லேண்ட் டோவ்
-
ஹாக்கர் சீ ஹாக் (நடுவில் உள்ளது)
-
வெஸ்ட்லேண்ட் சீ கிங் ஹெலிகாப்டர்
-
எல் -1049 ஜி லாக்ஹீட் விண்மீன்
-
விண்மீன் கூட்டத்தின் முன் பார்வை
-
விண்மீன் கூட்டத்தின் படிக்கட்டுகளை அணுகவும்
-
கமோவ் கா -25 ஹெலிகாப்டர்
-
பிஏ சீ ஹாரியர்
-
காட்சியில் விமான இயந்திரங்கள்
-
பெண்கள் கடற்படை சீருடையின் பரிணாமம்
-
ஆண்கள் கடற்படை சீருடையின் பரிணாமம்
-
ஐஎன்எஸ் விராட்டின் பிரதி, பின்புற பார்வை
-
ஐஎன்எஸ் விராட் மாதிரியின் முன் பார்வை
குறிப்புகள்
வெளி இணைப்புகள்