தென்கிழக்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆசுத்திரோனீசிய முன்னோடி மற்றும் வரலாற்று கடல்சார் வர்த்தக வலையமைப்பு.[1]
கடல்சார் பட்டுப் பாதை (Maritime Silk Road) என்பது தென்கிழக்காசியா, கிழக்காசியா, கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், அறபுத் தீபகற்பம், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதையின்கடல்சார் பகுதியாகும். இது கி.மு 2ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது.[2] கடல்சார் பட்டுப் பாதை முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆசுத்திரோனீசிய மாலுமிகளால் நிறுவப்பட்டு இயக்கப்பட்டது.[3](பக்.11)[4] அவர்கள் நீண்ட தூர கடலில் செல்லும் அடுக்கு-இழுவை வர்த்தகக் கப்பல்களில் பயணம் செய்தனர்.[3](பக்.11)[4] அரபிக்கடல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பாரசீக மற்றும் அராபிய வர்த்தகர்களின் தோவ்களாலும் மற்றும் தெற்காசியாவிலுள்ளதமிழ் வணிகர்களாலும் இந்த பாதை பயன்படுத்தப்பட்டது.[3](பக்.13) அந்த காலகட்டத்தில் சீனா தங்கள் சொந்த வர்த்தகக் கப்பல்களைக் கட்டத் தொடங்கியது. பிற்காலத்தில், கிபி 10 முதல் 15 ஆம் நூற்றாண்டுகள் வரை இப்பாதைகளைப் பின்பற்றியது.[5][6]
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பழைய ஆசுத்திரோனீசிய ஜேட் கடல்சார் வர்த்தகத் தொடர்புகள், அத்துடன் தென்கிழக்காசியா[7][8][9][10] மற்றும் தெற்காசியா இடையிலான கடல்சார் மசாலா வர்த்தகத் தொடர்புகளின் அடிச்சுவடுகளையும், அரேபிய கடலில் உள்ள மேற்கு ஆசிய கடல்சார் வர்த்தகத் தொடர்புகளையும் பின்பற்றியது.[11][12][13]
கடல்சார் பட்டுப்பாதை என்ற சொல் ஒரு நவீன பெயர். இது நிலப்பரப்பு பட்டுப் பாதையுடன் ஒத்திருகிறது. இந்தோ-மேற்கு பசிபிக் (தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல்) வழியாக செல்லும் பண்டைய கடல்சார் பாதைகள் அதன் மிக நீண்ட வரலாற்றின் பெரும்பகுதிக்கு குறிப்பிட்ட பெயரைக் கொண்டிருக்கவில்லை.[3] நவீன பெயர் இருந்தபோதிலும், கடல்சார் பட்டுப்பாதை பட்டு அல்லது ஆசிய ஏற்றுமதிகள் மட்டுமல்ல, மிகவும் பரந்த பிராந்தியத்தில் பல்வேறு வகையான பொருட்களின் பரிமாற்றங்களை உள்ளடக்கி இருந்தது.[6]
மத்திய மற்றும் தெற்கு வியட்நாமின் ஆஸ்ட்ரோனேசிய சம்பா இராச்சியம் காலப்பகுதியில், கடல்சார் பட்டுச் சாலையின் பிரதான பாதையில் அமைந்துள்ள மீ சன் இந்துக் கோயில் வளாகத்தின் இடிபாடுகள்
மே 2017 இல், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இலண்டனில் ஒரு கூட்டத்தை நடத்தி, "கடல்சார் பட்டுப் பாதையை" ஒரு புதிய யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைப்பதற்கான முன்மொழிவு குறித்து விவாதித்தனர்.[14]
அரசியல்மயமாக்கல்
பண்டைய கடல்சார் பட்டுச் சாலை குறித்த கல்வி ஆராய்ச்சி நவீன நாடுகளால் அரசியல் காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டு புராணமாக மாற்றப்பட்டுள்ளது. சீனா, குறிப்பாக, 2015 இல் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்தபோது சீ சின்பிங்கால் முன்மொழியப்பட்ட அதன் பட்டை ஒன்று பாதை ஒன்று முன்முயற்சிக்காக கடல்சார் பட்டுப் பாதையின் புராணப் படத்தைப் பயன்படுத்துகிறது. தென்கிழக்கு ஆசியாவின் துறைமுக நகரங்களுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையிலான பழைய வர்த்தக பாதைகளை மீண்டும் இணைக்க சீனா முயற்சிக்கிறது. மேலும் சீன மாலுமிகள் இந்த பாதையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக தவறாக கருதுகிறது.[3]
2014 இல் தொடங்கப்பட்ட மௌசம் திட்டத்துடன் கடல்சார் பட்டுப் பாதையையும் இந்தியா புராணமாக்கியுள்ளது, இது இந்தியப் பெருங்கடலில் உள்ள சுற்றியுள்ள நாடுகளுடன் பழைய வர்த்தக தொடர்புகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறது. இந்தியாவும் கடல்சார் பட்டுப்பாதையில் ஒரு முக்கிய பங்கை வகிப்பதாக சித்தரிக்கிறது. மேலும் அதன் வர்த்தக தொடர்புகளையும் கலாச்சார பரவலையும் அகண்ட இந்தியா என்ற பாவையின் கீழ் "இந்திய காலனித்துவம்" என்று சித்தரிக்கிறது.[3]
↑ 4.04.1Manguin, Pierre-Yves (September 1980). "The Southeast Asian Ship: An Historical Approach". Journal of Southeast Asian Studies11 (2): 266–276. doi:10.1017/S002246340000446X.
↑Flecker, Michael (August 2015). "Early Voyaging in the South China Sea: Implications on Territorial Claims". Nalanda-Sriwijaya Center Working Paper Series19: 1–53.
↑Bellwood, Peter; Hung, H.; Lizuka, Yoshiyuki (2011). "Taiwan Jade in the Philippines: 3,000 Years of Trade and Long-distance Interaction". In Benitez-Johannot, P. (ed.). Paths of Origins: The Austronesian Heritage in the Collections of the National Museum of the Philippines, the Museum Nasional Indonesia, and the Netherlands Rijksmuseum voor Volkenkunde. ArtPostAsia. ISBN978-971-94292-0-3.
↑Mahdi, Waruno (1999). "The Dispersal of Austronesian boat forms in the Indian Ocean". In Blench, Roger; Spriggs, Matthew (eds.). Archaeology and Language III: Artefacts languages, and texts. One World Archaeology. Vol. 34. Routledge. pp. 144–179. ISBN978-0415100540.