கிழக்கு ஆசியா(East Asia) அல்லது வடகிழக்கு ஆசியா(Northeast Asia) என்பது ஆசியக் கண்டத்தின் கிழக்கு உள்வட்டாரம் ஆகும்; இதைப் புவிப்பரப்பியலாகவோ[3] அல்லது பண்பாட்டியலாகவோ வரையறுக்கலாம்.[4][5][6] இது புவிப்பரப்பியலாகவும் புவி அரசியல் வழியிலும், சீனப் பெருநாடு, ஆங்காங், மக்காவு, யப்பான், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, தைவான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கும்.[7][8][9][10][11][3][12][13][14][15][16][too many citations]
இவ்வட்டாரம் பல பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாகும். இவற்றுள் பண்டையக் கால சீன நாகரிகம் யப்பான் நாகரிகம், கொரிய நாகரிகம், மங்கோலியப் பேரரசு ஆகியவை உள்ளடங்கும்.[17][18] கிழக்காசியா உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும்; இதில் பண்டைய சீன நாகரிகம் உலக மாந்தரின வரலாற்றிலேயே மிகப் பழைய நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும். பல ஆயிரம் ஆண்டுகளாக, சீனா கிழக்காசியாவை உருமாற்றி வந்துள்ளது. இந்த வட்டாரத்தில் சீன நாகரிகம் பெருமை மிக்கதாக தன்னைச் சுற்றியமைந்த அண்டை நாடுகள்பால் பெருந்தாக்கம் செலுத்தியது.[19][20][21] வரலாற்றியலாக, கிழக்காசியச் சமூகங்கள் சீனப் பண்பாட்டுக் களத்தின் பகுதியாகவே விளங்கி வந்துள்ளன. கிழக்காசிய சொற்களும் எழுத்துகளும் முறையே செவ்வியல் சீனத்தில் இருந்தும் சீன எழுத்து வடிவத்தில் இருந்தும் உருவாகியுள்ளன. சீன நாட்காட்டி கிழக்காசியப் பண்பாட்டை உட்கொண்டுள்ளது. இதுவே மற்ற கிழக்காசிய நாட்காட்டிகள் உருவாகவும் வழிவகுத்துள்ளது. கிழக்காசியாவின் பெருஞ்சமயங்களாக கிழக்காசியப் புத்த சமயம் (பெரிதும் மகாயாணம்)[22]), கன்பூசியனியம், புதிய கன்பூசியனியம், தாவோயியம், முன்னோர் வழிபாடு, சீனா, மக்காவு, தைவான் சார்ந்த சீன நாட்டுப்புற சமயம், யப்பானிய புத்த சமயம், யப்பானியச் சிண்டோயியம், கொரியக் கிறித்தவம், கொரியச் சாமனியம் (வேலன் வெறியாட்டம் போன்றது), ஆகியவை விளங்குகின்றன. [23] சாமனியம் மங்கோலியர், பிற வடகிழக்காசியத் தொல்குடிகளாகிய மஞ்சூக்கள் ஆகியோரிடமும் அமைகிறது.[24][25]
கிழக்காசியர் ஏறத்தாழ 1.6 பில்லியன் மக்கள் அடங்குவர்; இவர்கள் ஆசிய மக்களில் 38% ஆகவும் உலக மக்களில் 22% ஆகவும் அமைகின்றனர். இப்பகுதியில் உலகின் பல பெருநகரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், பீகிங், ஆங்காங், சியோல், சாங்காய், தைபை, தோக்கியோ ஆகியவை அடங்கும். கிழக்காசியாவின் கடற்கரை (நெய்தல்), ஆற்றுவளப் (மருதம்) பகுதிகள் உல்கின் உயர் மக்கள்தொகை அமைந்த இடங்களில் ஒன்றாகும். இருந்தாலும், மங்கோலியா, வடக்கத்தியச் சீனா ஆகிய நிலம் சிறைப்பட்ட பகுதிகளில் மிகவும் குறைவான மக்களே வாழ்கின்றனர்; மங்கோலியாவில் அனைத்து நாடுகளினும் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி அமைகிறது. இந்த வட்டாரத்தி ஒட்டுமொத்த மக்கள் அடர்த்தி 133/கிமீ2 ஆகும். இது உலகநிரல் (சராசரி) மதிப்பாகிய 45/கிமீ2 விட மும்மடங்கு ஆகும்.
மேலை உலகில் ஐரோப்பியர் மீது பண்டைய கிரேக்கரும் உரோமானியரும் செலுத்திய முதன்மையான தாக்கத்தோடு ஒப்பிடும்போது, யப்பானுக்கும் கொரியாவுக்கும் அரை ஆயிரம் ஆனடுகளுக்கு முன்பே சீனா உயரிய நாகரிகத்தைப் பெற்றிருந்தது.[26]கிழக்காசிய நாகரிகங்கள் வரலாற்றில் அடியெடுத்து வைக்கும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் நாகரிகம் நிலவியுள்ளது. சீனப் பேரரசு தன் அண்டை நாடுகள் மீது தன் பண்பாட்டு, பொருளியல், தொழில்நுட்ப, அரசியல் வல்லமையைச் செலுத்தியுள்ளது.[27][28] பின்னர் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக கிழக்காசியாவின் மீது பண்பாட்டியலாகவும் பொருளியலாகவும் அரசியலாகவும் போரியலாகவும் பேரளவு செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.[29][30] சீனபேரரசு தனது பண்பாட்டு முனைப்பால் கிழக்காசியவிலேயே முதலில் எழுத்தறிந்த நாடாகி, யப்பானுக்கும் கொரியாவுக்கும் சீனச் சொல்வளத்தைப் பரிமாறியதோடு அவர்கள் எழுத்தமைப்பை உருவாக்கி மொழியியலாகவும் பெருந்தாக்கத்தை விளைவித்துள்ளது.[31]சீனாவுக்கும் கிழக்காசிய வட்டார அரச மரபுகளுக்கும் அரசுகளுக்கும் இடையில் பண்பாட்டியலாகவும் சமயவியலாகவும் தொடர்ந்து ஊடாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. கொரியா மீதான தாக்கமும் செல்வாக்கும் கி.மு 108 இல் ஏன் பேரரசு கொரிய வடகிழக்குப் பகுதியை வென்று தன் ஆட்சி எல்லையை விரிவாக்கி இலேலாங் மாகாணத்தை உருவாக்கியபோது ஏற்பட்டன. மேலும், சீன எழுதுமுறையையும் பணமுறையையும் நெல் வளர்ப்பையும் கன்பூசியனிய அரசியல் நிறுவனங்களையும் பகிர்ந்து கொரியா முழுவதிலும் சீனத் தாக்கம் வேரூன்றியது.[32]
பீகிங் சீனத் தலைநகரம் ஆகும். இது வடக்கு சீனாவின் மிகப் பெரிய பெருநகரம் ஆகும்.
சாங்காய் சீனாவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது உலகிலேயே மிகவும் பெரிய நகரமும் ஆகும். இது உலகின் நிதி மையமும் ஆகும்;உலகின் அலுவல்மிக்க துறைமுகமும் போக்குவரத்துக் களமும் ஆகும்.
குவாங்ழவு தென்சீனாவில் முதன்மை நகரங்களில் ஒன்றாகும். இது 2,200 ஆண்டு வரலாறு உடையதும் கடல்வழி பட்டுத் தடத்தின் பெருமுனையமும் ஆகும். இது இப்போதும் பெரிய துறைமுகமாகவும் போக்குவரத்துக் களமாக விளங்குகிறது.
சீயான் அல்லது சாங்கான் சீனாவின் நான்கு பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகும். இது அனைத்து சீன அரச ம்ரபுகளிலும் முதன்மையாக விளங்கியது. இது கிழக்காசியா மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்கம் வகித்ததாகும்.
ஆங்காங் உலகின் முதன்மை நிதி மையங்களில் ஒன்றாகும். இது பன்முகப் பண்பாட்டுப் பெருந்கரம் ஆகும்.
தைபேய் சீனக் குடியரசு எனப்படும் தைவானின் தலைநகரம் ஆகும்.
தோக்கியோ யப்பானின் தலைநகரம் ஆகும். இது மக்கள்தொகையிலும் தொகு தேசிய விளைபொருளிலும் உலகின் மிகப்பெரிய பெருநகரங்களில் ஒன்றாகும்.
ஒசாகா யப்பானின் இரண்டாம் மிகப் பெரிய பெருநகரம் ஆகும்.
கயோட்டோ ஒராயிரம் ஆண்டுகலாக யப்பான் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.
சீயோல் தென்கொரியாவின் தலைநகரமும் உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றும் ஆகும். இது உலக தொழில்நுட்பக் களமாகும்.
பியோங்யாங் வடகொரியாவின் தலைநகரமாகும். இது கொரியத் தீவகத்தின் முதன்மைப் பெருநகரமாகும்]].
உலான்பாதர் மங்கோலியாவின் தலைநகரமாகும். இதன் 2008 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ஒரு மில்லியன் ஆகும்.
பன்னாட்டுச் செயற்கைக்கோள் நிலையம் மங்கோலியாவையும், மேற்கு நோக்கியபடி பசிபிக் கடலையும், சீனாவையும், யப்பானையும் கடந்து செல்லல். இந்நிகழ்படம் தொடரும்போது, கடற்கரையில் உள்ள பெரிய நகரங்களையும் பிலிப்பைன் கடல் தீவுகளையும் பார்க்கலாம். குவாம் தீவைப் பிலிப்பைன் கடலின் இறுதிவாக்கில் காணலாம். செயற்கைக்கோளின் கடப்பு நியூசிலாந்துக்குக் கிழக்கே முடிகிறது. இறுதி நிகழ்படக் கடப்பில் ஒளித்துடிப்புகள் மிக்க ஒரு மின்னல் சூறாவளியைக் காணலாம்.
குறிப்புகள்
↑கிழக்காசியப் பரப்பில் உறுப்பு நாடுகளின் பரப்புகளின் கூட்டலுக்கும் உறுப்புப் பகுதிகளின் பரப்புகளின் கூட்டலுக்கும் சமமாகும். இதில் ஆங்காங், மக்காவு அடங்கிய பெருஞ்சீனப் பரப்பும், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, சீனத் தைவான், யப்பான் ஆகியவற்றின் பரப்புகளும் அடங்கும்.
↑மக்கள்தொகையில் ஆங்காங், மக்காவு அடங்கிய பெருஞ்சீன மக்கள்தொகையும், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, சீனத் தைவான், யப்பான் ஆகியவற்றின் மக்கள்தொகைகளும் அடங்கும்
↑ 3.03.1"East Asia". என்கார்ட்டா கலைக்களஞ்சியம். Microsoft. Archived from the original on 2009-10-31. Retrieved 2008-01-12. the countries and regions of Mainland China, Hong Kong, Macau, Taiwan, Mongolia, South Korea, North Korea and Japan.
↑Columbia University – "East Asian cultural sphere"பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம் "யப்பானும் கொரியாவும் வியட்நாமும் தாங் அரச மரபு காலத்து சீன நாகரிகத்தைப் பகிந்து தகவமைந்தபோது, கிழக்காசியப் பண்பாட்டுக் களம் உருவாகிப் படிமலர்ந்தது. குறிப்பாக, புத்த சமயம், கன்பூசியச் சமூக, அரசியல் விழுமியங்களையும் இலக்கியச் சீன எழுத்து முறையையும் பகிர்ந்தபோது தோன்றிப் படிமலர்ந்தது."
↑Prescott, Anne (2015). East Asia in the World: An Introduction. Routledge. ISBN978-0765643223.
↑Miller, David Y. (2007). Modern East Asia: An Introductory History. Routledge. pp. xxi–xxiv. ISBN978-0765618221.
↑Prescott, Anne (2015). East Asia in the World: An Introduction. Routledge. ISBN978-0765643223.
↑Kort, Michael (2005). The Handbook Of East Asia. Lerner Publishing Group. p. 7. ISBN978-0761326724.
↑Asian History Module Learning. Rex Bookstore Inc. 2002. p. 186. ISBN978-9712331244.
↑Salkind, Neil J. (2008). Encyclopedia of Educational Psychology. Sage Publications. p. 56. ISBN978-1412916882.
↑Holcombe, Charles (2010). A History of East Asia: From the Origins of Civilization to the Twenty-First Century. Cambridge University Press. p. 3. ISBN978-0521731645.
↑Zaharna, R.S.; Arsenault, Amelia; Fisher, Ali (2013). Relational, Networked and Collaborative Approaches to Public Diplomacy: The Connective Mindshift (1st ed.). Routledge (published May 1, 2013). p. 93. ISBN978-0415636070.
↑Holcombe, Charles (2017). A History of East Asia: From the Origins of Civilization to the Twenty-First Century. Cambridge University Press. p. 13. ISBN978-1107544895.
↑Szonyi, Michael (2017). A Companion to Chinese History. Wiley-Blackwell. p. 90. ISBN978-1118624609.
↑Kang, David C. (2012). East Asia Before the West: Five Centuries of Trade and Tribute. Columbia University Press. pp. 33–34. ISBN978-0231153195.
↑Goucher, Candice; Walton, Linda (2012). World History: Journeys from Past to Present. Routledge (published September 11, 2012). p. 232. ISBN978-0415670029.
↑Tsai, Henry (February 15, 2009). Maritime Taiwan: Historical Encounters with the East and the West. Routledge. p. 3. ISBN978-0765623287.{{cite book}}: CS1 maint: date and year (link)
↑1949 முதல் 1971 வரை "சீனா"அல்லது "தேசியச் சீனா" எனப்பட்டது.
↑"World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. Retrieved July 17, 2022.