கடோலினியம்(III) ஐதராக்சைடு (Gadolinium(III) hydroxide) Gd(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இதன் நுண் துகள்கள் டிக்லோபெனாக், இபுபுரோபென் மற்றும் நாப்ராக்சன் போன்ற பல்வேறு மருந்துகளின் ஓர் அடுக்காக இருப்பதற்கு சாத்தியமான பயன்பாட்டைக் கொண்டுள்ளன.
தயாரிப்பு
கடோலினியம்(III) நைட்ரேட்டு சேர்மத்துடன் சோடியம் ஐதராக்சைடு காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து கடோலினியம்(III) ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு தயாரிப்பு முறைகளும் உள்ளன:[1]
காடோலினியம்(III) ஐதராக்சைடு வணிகரீதியான பயன்பாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், நச்சுத்தன்மை குறைவு[3] காரணமாக கடோலினியம்(III) ஐதராக்சைடு நுண் துகள்கள் பல்வேறு அழற்சி எதிர்ப்பு மருந்துகளுக்கு பூச்சு முகவராக பயன்படுத்தப்படுகிறது.[4] கடோலினியம்(III) நைட்ரேட்டுடன் கார அயனி பரிமாற்ற பிசின் சேர்ப்பதன் மூலம் இதன் நுண் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
↑ 1.01.11.2Logvinenko, V.; Bakovets, V.; Trushnikova, L. (2014). "Dehydroxylation kinetics of gadolinium hydroxide." (in en). Journal of Thermal Analysis & Calorimetry.115 (1): 517-521. doi:10.1007/s10973-013-3274-1.
↑ 2.02.1Y. Kobayashi; H. Morimoto; T. Nakagawa; Y. Kubota; K.Gonda; N. Ohuchi (2016). "Fabrication of gadolinium hydroxide nanoparticles using ion-exchange resin and their MRI property" (in en). Journal of Asian Ceramic Societies4 (1): 138-142. doi:10.1016/j.jascer.2016.01.005.
↑"Probing Cytotoxicity of Gadolinium Hydroxide Nanostructures" (in en). The Journal of Physical Chemistry B114 (12): 4358-4365. 2010. doi:10.1021/jp911607h.
↑Yadong Xu; Alvaro Goyanes; Yuwei Wang; Andrew J. Weston; Po-Wah So; Carlos F. G. C. Geraldes; Andrew M. Fogg; Abdul W. Basit et al. (2018). "Layered gadolinium hydroxides for simultaneous drug delivery and imaging" (in en). Dalton Transactions47 (9): 3166-3177. doi:10.1039/C7DT03729E.