கடோலினியம்(III) அயோடைடு
கடோலினியம்(III) அயோடைடு (Gadolinium(III) iodide) GdI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கடோலினியத்தின் அயோடைடு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் அதிக அளவில் நீருறிஞ்சும் உப்பாகக் காணப்படுகிறது. பிசுமத்(III) அயோடைடு வகை படிக அமைப்பை கடோலினியம்(III) அயோடைடு கொண்டுள்ளது. காற்றில், இது விரைவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீரேற்றுகளை உருவாக்குகிறது. தொடர்புடைய கடோலினியம் ஆக்சைடு அயோடைடு உயர்ந்த வெப்பநிலையில் உடனடியாக உருவாகிறது.[2] தயாரிப்புகடோலினியத்துடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கடோலினியம்(III) அயோடைடு உருவாகும்:[2]
பாதரச(II) அயோடைடு சேர்மத்துடன் கடோலினியத்தை 500°செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் வினைபுரியச் செய்தாலும் கடோலினியம்(III) அயோடைடு உருவாகும்:[2] கடோலினியம்(III) ஆக்சைடுடன் ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரேற்று வடிவம் படிகமாகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட நீரேற்று வடிவத்தை அமோனியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் நீரிலி வடிவ கடோலினியம்(III) அயோடைடு கிடைக்கும்.[2][3]
வினைகள்ஆர்கான் வாயுச் சூழலில் கடோலினியம்(III) அயோடைடு கடோலினியம், துத்தநாகத்துடன் 850 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து Gd7I12Zn சேர்மத்தைக் கொடுக்கிறது.[4] மேலும் இது ஒரு டாண்ட்டலம் குழாயில் கடோலினியம், கார்பன் மற்றும் கடோலினியம் நைட்ரைடு ஆகியவற்றுவன் 897 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து Gd4I6CN என்ற கடோலினியம் நைட்ரோகார்பைடைக் கொடுக்கிறது.[5]
மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia