கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலம்
![]() ![]() ![]() ![]() ![]() கட்ச்சின் பெரிய பாலைவனம் அல்லது கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலம் (Great Rann of Kutch or Rann of Kutch seasonal salt marsh) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] இப்பகுதியில் வாழும் மக்களை கட்சி மக்கள் என்று பெயர்.[3] அமைவிடம் மற்றும் விளக்கம்குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் சிறிய பருவகால உவர் சதுப்பு நிலத்தை (Little Rann of Kutch) ஒட்டி அமைந்த கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலத்தின் தெற்கில் பன்னி புல்வெளி நிலங்கள் (Banni grasslands) உள்ளது. இது கட்ச் வளைகுடாவிற்கும், தெற்கு பாகிஸ்தானின் சிந்து ஆற்றின் முகத்துவாரத்திற்கு இடையே 30,000 சதுர கிலோமீட்டர்கள் (10,000 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. சிறிய கட்ச் ரான் பரப்பையும், பெரிய கட்ச் ரான் பரப்பையும் ரான் ஆப் கட்ச் எனப்வர் அரபுக் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரம் கொண்ட உவர் நீரும், சதுப்பு நிலமும் கொண்ட இப்பகுதியில் கோடைக்காலத்தில் உப்பு உற்பத்தி செய்கிறது."Rann of Kutch, India". Earth Snapshot. 6 November 2008. p. 2. Archived from the original on 2 டிசம்பர் 2013. Retrieved 22 November 2013. மணற்பாங்கான முட்புதர்கள் கொண்ட இப்பகுதி பறவைகள், காட்டுக் கழுதை போன்ற காட்டுயிர்களின் காப்பகமாக உள்ளது.[5][6][7]இந்திய காட்டு கழுதை சரணாலயம் இப்பகுதியில் உள்ளது. தட்ப வெப்பம்கோடைக்காலத்தின் கட்ச் பாலைவனத்தின் அதிகபட்ச வெப்பம் 49.5 °C மற்றும் குளிர்காலத்தில் 0 °C (32 °F) ஆக உள்ளது.[8] சமயங்கள்இப்பகுதியில் இந்துக்கள், இசுலாமியர், சீக்கியர் மற்றும் சமணர்கள் அதிகம் வாழ்கின்றனர். ![]() சுற்றுலா![]() இப்பகுதியில் டிசம்பர், சன்வரி மற்றும் பிப்ரவரி மாதங்ளில் கட்ச் திருவிழா நடைபெறும். அவ்வமயம் சுற்றுலா பயணிக்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்படுகிறது. கூடாரத்திற்கும், உணவுக்கும் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருவிழாவில் இந்திய நாட்டின் அனைத்து வகையான உணவுகள் ஒரே இடத்தில் கிடைக்குமாறு உணவகங்கள் உள்ளது. கட்ச் திருவிழாவின் போது அன்றாடம், ஒட்டகச் சவாரி, யோகா, அனைத்து மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கட்ச் ரான் திருவிழா குஜராத் மாநில சுற்றுலாத்துறை நடத்துகிறது.[9] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia