இந்திய காட்டு கழுதை சரணாலயம்
![]() இந்தியக் காட்டு கழுதை சரணாலயம் (Indian Wild Ass Sanctuary) என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள கட்ச் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது 4954 ச.கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளது. [1] இந்த வனவிலங்கு சரணாலயம் 1972இல் நிறுவப்பட்டது. மேலும், அதே ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த சரணாலயம் பூமியில் அருகிவரும் காட்டு கழுதையின் இருப்பிடமாக உள்ளது. இதன் துணை இனங்களில் ஒன்றான இந்தியக் காட்டுக் கழுதை (குர்) ஆசிய காட்டுக்கழுதை இனத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. நிலவியல்குசராத்தில் அமைந்துள்ள, கட்ச் பாலைவனம் என்பது, கடற்கரை அருகிலுள்ள ஒரு பாலைவனம் ஆகும். பருவமழையின் போது, இப்பகுதி முழுவதும், ஒரு மாத காலத்திற்கு வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது. மேலும், இப்பகுதி 74 உயரமான பீடபூமிகள் அல்லது தீவுகளால் சூழப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் 'பெட்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பெட் பகுதி முழுவதும் புற்களால் மூடப்பட்டிருக்கும். இதன் மூலமாக, சுமார் 2100 விலங்குகளுக்கு உணவளிக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது. [2] இங்கு காணப்படும் விலங்கினங்கள்இந்தச் சரணாலயம் பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி [3] இச் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு,
![]() அச்சுறுத்தல்கள்சரணாலயம் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் இப்பகுதியில் சட்டவிரோத உப்பு எடுக்கும் [4] செயல்பாடு ஆகும். இந்தியாவின் உப்பு விநியோகத்தில் 25% இப்பகுதி செயல்படுவதால் வருகிறது. [5] உயிர்க்கோள இருப்பு - உலக பாரம்பரிய தளம்யுனெஸ்கோவின் நாயகன் மற்றும் உயிர்க்கோளம் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளின் பகுதிகள் ஆகியவை ஒரு உயிர்க்கோள இருப்பு என்று வனத்துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், ஆராய்ச்சி, கண்காணித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி மாதிரிகளை வழங்குவதில் கவனம் செலுத்தும், இந்த திட்டம் யுனெஸ்கோவிற்கு அனுப்பப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. [6] [7] [8] வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் கட்சின் இருப்புகள்புஜ் நகரத்திலிருந்து கட்ச் மாவட்டத்தின் பல்வேறு சூழழியல் ரீதியாக வளமான மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பகுதிகளை பார்வையிடலாம். அவை, இந்திய காட்டு கழுதை சரணாலயம், கட்ச் பாலைவன வனவிலங்கு சரணாலயம், நாராயண் சரோவர் சரணாலயம், கட்ச் புஸ்டார்ட் சரணாலயம், பன்னி புல்வெளி காடுகள் மற்றும் சாரி-தண்ட் ஈரநில பாதுகாப்பு இருப்பு போன்றவை ஆகும். படத்தொகுப்பு
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia