கட்டிக் கேந்தி
துலுக்க சாமந்தி, அல்லது கட்டிக்கேந்தி (Tagetes erecta) சாமந்தி (Tagetes)[2] என்ற இனத்தைச் சார்ந்த இத்தாவரமானது மெக்சிக்கோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.[3][4] இது அமெரிக்கப்பகுதியிலிருந்து பல நாடுகளுக்கு பரவியிருந்தாலும் இதனை ஆப்பிரிக்கப் பூ என்றே அறியப்படுகிறது. மெக்சிகோவின் புவெப்லா மற்றும் வர்யாக்ரூஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்கு பயிரிடப்படுகிறது.[5] இத் தாவரம் 50 முதல் 100 செ.மீற்றர்கள் வரை வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் மருந்துக்காவும், திருவிழாவிற்காவும், மேலும் அலங்காரத் தாவரத்தாவரமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.[6] தற்போது உலகமுழுவதிலும் இத்தாவரங்கள் அலங்காரத்திற்கு பயிரிடப்படும் தாவரமாகவே உள்ளது. மேலும் இவை பெரிய அலுவலகங்களில் வரவேற்பறை அலங்காரத்திற்கும் விற்பனை செய்து பயன்படுத்தப்படுகிறது. இலங்கை மக்கள் இத்தாவரத்தை தாஸ்பதியா என்று அழைக்கிறார்கள்.[7][8] நறுமணத் தைலங்களில் ஆப்பிள் வாசணைக்காகவும் இப்பூவின் தைலம் சேர்க்கப்படுகிறது.[9] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia