இந்தக் கட்டுரை இதே பெயருள்ள நாட்டில் உள்ள மெக்சிக்கோ என்ற மாநிலத்தைப் பற்றியது. நாட்டிற்கு, மெக்சிக்கோ என்பதைப் பாருங்கள். கூட்டரசு மாவட்டத்திற்கு, மெக்சிக்கோ நகரம் என்பதைப் பாருங்கள். மெக்சிக்கோவின் உட்பிரிவுகளான மாநிலங்கள் பற்றியான கட்டுரைக்கு, மெக்சிக்கோவின் மாநிலங்கள் என்பதைப் பாருங்கள்.
^ அ. 2008இல் மாநிலத்தின் மொ.உ.உ 796,426,291 பெசோசாக இருந்தது;[7] ஒரு அமெரிக்க டாலருக்கு 12.80 என்ற மாற்றுவீதத்தில் (சூன் 3, 2010 மதிப்பு) இது அமெரிக்க டாலரில் 62,220,803.98 ஆகும்.[8]
மெக்சிக்கோ மாநிலம் (State of Mexico, எசுப்பானியம்: Estado de México) மெக்சிக்கோவின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். மெக்சிக்கோ நகரம் 32ஆவது கூட்டரசு மாவட்டமாக 32வது நிர்வாகப் பிரிவாக உள்ளது. மிகுந்த மக்கள்தொகை உள்ள மாநிலமாக உள்ளது. இதில் 125 நகராட்சிகளும் தலைநகரமான டோலுக்காவும் அடங்கியுள்ளன.
மெக்சிக்கோ மாநிலத்தின் எசுப்பானியப் பெயரான எசுட்டோடா டெ மெக்சிக்கோ என்பதை சுருக்கமாக "எடோமெக்சு" என்கின்றனர். இது மெக்சிக்கோவின் தெற்கு-மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் குயெரெடரோ, இடால்கோ மாநிலங்களும் தெற்கில் மோரெலோசு, குயிர்ரெரோ மாநிலங்களும் மேற்கில் மிக்கோகான் மாநிலமும் கிழக்கில் டிலாக்சாலா, புவெப்லா மாநிலங்களும் உள்ளன; இந்த மாநிலம் கூட்டரசு மாவட்டதை சூழ்ந்துள்ளது.
இந்த மாநிலம் ஆசுடெக் பேரரசின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. எசுப்பானியாவின் குடியேற்றக் காலத்தில் இது புதிய எசுப்பானியாவின் அங்கமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு, புதிய நாட்டிற்கு மெக்சிக்கோ நகரம் தலைநகரமானது; தலைநகரப்பகுதி மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், மாநிலம் மேலும் பிரிக்கப்பட்டு இடால்கோ, குயெர்ரெரோ, மோரெலோசு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பிரிவினைகளுக்குப் பறகு மாநிலம் தற்போதைய அளவை எட்டியுள்ளது.
மெக்சிக்கோவின் 1917ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த மாநிலத்தின் பெயர் மெக்சிக்கோ என்பது மட்டுமே; ஆனால் நாட்டின் பெயரிலிருந்தும் நகரத்தின் பெயரிலிருந்தும் வேறுபடுத்துவதற்காக இது பரவலாக எசுட்டாடொ டெ மெக்சிக்கோ என்றே அழைக்கப்படுகின்றது.
↑"Resumen". Cuentame INEGI. Archived from the original on மார்ச் 29, 2013. Retrieved February 12, 2013.
↑"Relieve". Cuentame INEGI. Archived from the original on ஜூலை 23, 2011. Retrieved March 24, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)