கணையத் திட்டுகள்

கணையத் திட்டுகள்
கணையத் திட்டுகள் என்பது கணையத்திற்குள் காணப்படும் உயிரணுக்களின் குழுக்கள் ஆகும், இவை இயக்குநீர்களை வெளியிடுகின்றன.
இரத்த நாளத்திற்கு அருகில், வழக்கமான நிலையில் எலியிலிருந்து எடுக்கப்படும் கணையத் திட்டு; சிவப்பு நிறத்தில் இன்சுலின், நீல நிறத்தில் கருக்கள்.
விளக்கங்கள்
உறுப்பின் பகுதிகணையம்
அமைப்புஅகச்சுரப்பி
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்insulae pancreaticae
MeSHD007515
TA98A05.9.01.019
TA23128
FMA16016
Anatomical terms of microanatomy

கணையத் திட்டுகள் (pancreatic islets) அல்லது இலாங்கர்கான்சுத் திட்டுக்கள் (islets of Langerhans) நீள்வட்ட வடிவில் உள்ள இன்சுலினைச் சுரக்கும் இழையத் தொகுப்புகள். இவை கணையத்தில் எங்கும் திட்டுத் திட்டாகப் பரவியுள்ளன.[1] குறிப்பாகக் கணையத்தின் தலைப்பகுதியை காட்டிலும் உடல், வால் பகுதிகளில் அதிகம் உள்ளது. மனித உடலில் 1 முதல் 2 மில்லியனளீழையத் திட்டுக்கள் இருக்கின்றன. இவை கணையத்தின் மொத்த எடையில் 1 முதல் 2 % எடையிலலமைகின்றன.[2][3] கணையத் திசுக்களிலேயே அதிக இரத்த ஓட்டம் உள்ள திசுப் பகுதியாக இவை கருதப்படுகின்றன. ஆனால் இவற்றின் சுரப்புக்கள் மற்ற நாளம்மில்லா சுரப்பிக்களைப் போல இரத்த ஓட்டத்தில் கலக்கவிடாமல் கல்லீரல் களக் குருதியோட்டத்தில் கலக்கவிடுகிறது.

நிறமியேற்றத்தினைக் கொண்டு இதன் உயிரணுக்களை நான்கு வகைகளாக பிரிப்பர். அவை: 'ஏ', 'பி', 'டி', "எப்" என்பன ஆகும். 'ஏ', 'பி', 'டி' உயிரணுக்கள் ஆல்பா, பீட்டா, காமா உயிரணுக்கள் என அழைக்கப்டுகிறன.

மேற்கோள்கள்

  1. "Beitrage zur mikroscopischen anatomie der bauchspeichel druse". Inaugural-dissertation. Berlin: Gustav Lange. 1869. 
  2. Barrett KE, Boitano S, Barman SM, Brooks HL (2009-07-22). Ganong's review of medical physiology (23 ed.). McGraw Hill Medical. p. 316. ISBN 978-0-07-160568-7.
  3. Functional Anatomy of the Endocrine Pancreas

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya