கண்கன்
மன்னன் கண்கனின் கல்வெட்டு (கி.மு. 100-70) பிராமி எழுத்தில்:𑀲𑀸𑀤𑀯𑀸𑀳𑀦𑀓𑀼𑀮𑁂 𑀓𑀦𑁆𑀳𑁂𑀭𑀸𑀚𑀺𑀦𑀺 𑀦𑀸𑀲𑀺𑀓𑁂𑀦 𑀲𑀫𑀡𑁂𑀦 𑀫𑀳𑀸𑀫𑀸𑀢𑁂𑀡 𑀮𑁂𑀡 𑀓𑀸𑀭𑀢 சாதவாகனகுலே கண்கே ராசினி நாசிககேன சமணேன மகாமாதேண லேண காரித "சாதவாகன குடும்பத்தைச் சேர்ந்த மன்னன் கண்கனின்[3] கீழ் நாசிக்கில் உள்ள, சமணர்களுக்குப் பொறுப்பான அலுவலனால் இந்தக் குகை அமைத்துக் கொடுக்கப்பட்டது".[4][3] கண்கன் (பிராமி எழுத்துமுறை:𑀓𑀦𑁆𑀳, Ka-nha, அண். கி.மு. 1ம் நூற்றாண்டு) என்பவன் இந்தியாவின் சாதவாகன வம்சத்தின் ஆட்சியாளனாவான். வரலாற்றாய்வாளர் இமான்சு பிரபா ராய் இவனது காலத்தை கி.மு. 100-70 என முடிவு செய்துள்ளார்.[5][1] கண்கன், புராணங்களில் "கிருசுணா" (IAST: Kṛṣṇa) எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். புராண மரபு வழியின் படி இவன் முதலாவது சாதவாகன அரசனான சிமுகனின் (இவனது பெயர் வெவ்வேறு புராணங்களில் வெவ்வேறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) தம்பியாவான்.[6][7] நாசிக் குகைமரபு வழிப் புராணக் குறிப்புகளுக்கு மேலதிகமாக, நாசிக் குகைகளிலுள்ள குகை எண் 19ல் உள்ள ஒரு கல்வெட்டும் கண்கன் எனும் மன்னனின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. நாசிக் குகைக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "சாதவாகன-குல"த்தின் (சாதவாகனக் குடும்பம்) "கண்க-ராச" (மன்னன் கண்கன்) இவனே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[8] கண்கனின் ஆட்சியின் போது, சிரமணர்களுக்குப் (வைதீக மறுப்புத் துறவிகள்) பொறுப்பான மகா-மாத்ர (பொறுப்பான அலுவலன்) என்பவனால் இக்குகை வெட்டப்பட்டது என இக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இதன் அடிப்படையில், கண்கன் பௌத்தத்தை ஆதரித்தானெனவும், பௌத்தத் துறவிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஒரு நிர்வாகப் பிரிவை உருவாக்கியிருந்தானெனவும் சுதாகர் சட்டோபாத்தியா முடிவு செய்துள்ளார். மேலும், அசோகனின் கல்வெட்டுக்களில் பரவலாகக் காணப்படும் சொல்லான மகா-மாத்ர எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம், முற்காலச் சாதவாகனர் மௌரியரின் நிர்வாக அமைப்பு மாதிரியையே பின்பற்றியுள்ளமையும் அறியக்கூடியதாயுள்ளது.[6] நாசிக் குகைகளிலுள்ள குகை எண் 19, குகைத் தொகுதியின் கீழ்த்தளத்தில், குகை எண் 18ன் வாயிலுக்கு இடப்புறத்திலும், குகை எண் 20க்கு நேர்கீழாகவும் அமைந்துள்ளது. குகை எண் 19ல், சாதவாகனர்களின் மன்னனான கிருசுணனின் ஆட்சியின் போது அரசு அலுவலன் ஒருவனால் வழங்கப்பட்ட தானம் குறித்த ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.:
இதன் மூலம், குகை எண் 19 நாசிக் குகைகளில் முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட குகைகளில் ஒன்றாக இடம்பெறுகிறது.[10]
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia