சிமுகன்
சிமுகன் (Simuka, தம்ம லிபி𑀲𑀺𑀫𑀼𑀓, Si-mu-ka) என்பவர் சாதவாகன மரபின் அரசராவார்.[2] நானேகத்திலுள்ள சாதவாகனக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மன்னர்களின் பட்டியலில் இவர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.[3] புராணங்களில் முதலாவது ஆந்திர (சாதவாகன) அரசனின் பெயர் சிவ்முக, சிசுக, சிந்துக, ச்சிசுமக, சிப்ராக, சிறீமுக போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயர்கள் ஓலைச் சுவடிகளைப் படியெடுத்தல் மற்றும் மீள்படியெடுத்தல் மூலமாகச் சிதைவுற்ற "சிமுக" எனும் பெயரின் உச்சரிப்புக்களாக நம்பப்படுகிறது.[4] கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சிமுகனின் காலத்தை உறுதியாகக் கணிப்பிட முடியாதுள்ளது.[5] ஒரு குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் இவன் கி.மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஆயினும், பொதுவாக இவன் கி.மு, 1ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. கல்வெட்டியல் ஆதாரங்கள் சிமுகனின் காலம் கி.மு. 1ம் நூற்றாண்டென வலுவாகத் தெரிவிக்கின்றன. கி.மு. 70-60 ஆம் ஆண்டுக்குரிய நானேகத் கல்வெட்டில் அப்போதைய அரசனாக விளங்கிய சதகர்ணியின் தந்தையாக சிமுகன் குறிப்பிடப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. எனினும், நானேகத் கல்வெட்டு, தொல்லெழுத்தியல் அடிப்படையில், நாசிக் குகைகளின் குகை 19-இல் உள்ள கி.மு. 100-70 காலப்பகுதியைச் சேர்ந்த கண்கனின் (பெரும்பாலும் சிமுகனின் தம்பியாக இருக்கக்கூடும்) கல்வெட்டுக்கும் பிந்தியதாகக் கருதப் படுகிறது.[6] ஆதாரங்கள் மீதான அண்மைய பகுப்பாய்வின் அடிப்படையில் சிமுகனின் ஆட்சிக்காலம் கி.மு. 120-96 ஆக இருக்கக்கூடும்.[7] புராணங்களில் உள்ள எதிர்கால மன்னர்களின் பட்டியலின் படி, "சந்திரகுப்த மௌரியன் ஆட்சிபீடமேறி 137 ஆண்டுகளின் பின், சுங்கர்கள் 112 ஆண்டுகளும், கண்வயனர்கள் 45 ஆண்டுகளும் ஆட்சிபுரிவர். கண்வயனரின் இறுதி மன்னனான சுசர்மன் ஆந்திர சிமுகனால் கொல்லப்படுவான்". சந்திரகுப்த மௌரியனின் ஆட்சித் துவக்கம் கி.மு. 324 எனக் கணித்தால், சிமுகன் 294 ஆண்டுகளுக்குப் பின், அதாவது கி.மு. 30ல் ஆட்சிபீடமேறியுள்ளான்.[8] காலம்![]()
நானேகத்திலுள்ள சாதவாகனக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மன்னர்களின் பட்டியலில் இவர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.[3] வெவ்வேறு புராணங்களில் ஆந்திர வம்சத்தின் நிறுவுனரின் பெயர் வெவ்வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்சய புராணத்தில் சிசுக எனவும், விசுணு புராணத்தில் சிப்ரக எனவும், வாயு புராணத்தில் சிந்துக எனவும், பிரம்மாண்ட புராணத்தில் சேசுமக எனவும், கந்த புராணத்தின் குமாரிக காண்டத்தில் சுத்ரக அல்லது சுரக எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[10] இப்பெயர்கள் ஓலைச் சுவடிகளைப் படியெடுத்தல் மற்றும் மீள்படியெடுத்தல் மூலமாகச் சிதைவுற்ற "சிமுக" எனும் பெயரின் உச்சரிப்புக்களாக நம்பப்படுகிறது.[4] மத்சய மற்றும் வாயு புராணங்கள், கண்வ அரசன் சுசர்மனை (கி.மு. அண். 40-30) முதலாவது ஆந்திர அரசன் வீழ்த்தியதாகக் குறிப்பிடுகின்றன. இம் மன்னனை சிமுகன் எனக் கருதும் சில அறிஞர்கள் சிமுகனின் ஆட்சி கி.மு. 30ல் துவங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.[8] D.C. சர்கார், H.C. ராய்சௌதரி மற்றும் ஏனைய சில அறிஞர்கள் இக்கொள்கையை ஆதரிக்கின்றனர்.[11] ஆந்திர வம்சம் 450 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக மத்சய புராணம் குறிப்பிடுகிறது. சாதவாகன ஆட்சி கி.பி. 3ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை தொடர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. எனவே, சாதவாகன ஆட்சியின் துவக்கம் கி.மு. 3ம்-2ம் நூற்றாண்டெனத் துணியலாம். மேலும், மெகெசுதெனிசின் (கி.மு. 350 - 290) இண்டிகா நூலில் "ஆந்தரே" எனும் வலிமைமிக்க குடியைப் பற்றியும் அதன் மன்னன் 100,000 போர்வீரர்கள், 2,000 குதிரைகள் மற்றும் 1,000 யானைகள் அடங்கிய படையொன்றைப் பேணிவந்தமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ் ஆந்தரே வம்சம் ஆந்திரர்களாக இருப்பின், இக்குறிப்பு சாதவாகன ஆட்சி கி.மு. 3ம் நூற்றாண்டில் துவங்கியமைக்கான மேலதிக சான்றாக அமையும். இக்கொள்கையின் அடிப்படையில், சிமுகன் மௌரியப் பேரரசன் அசோகனின் (கி.மு. 304–232) பின் உடனடியாக ஆட்சிக்கு வந்துள்ளான். இவ் அறிஞர்களின் கருத்துப்படி, கண்வ ஆட்சியாளன் சுசர்மன், சிமுகனின் பின் வந்தவனால் வீழ்த்தப்பட்டுள்ளான். பிரம்மாண்ட புராணத்தில், "நான்கு கண்வர்கள் இவ்வுலகை 45 ஆண்டுகள் ஆள்வர்; பின்பு, ஆட்சி மீண்டும் ஆந்திரர் வசமாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின் படி, கண்வர்கள் ஆட்சிக்கு வரும் முன்பே சாதவாகனர்கள் ஆட்சியிலிருந்துள்ளமையும், அவர்கள் கண்வர்களால் அடக்கப்பட்டமையும், பின்பு சாதவாகன மன்னனொருவனால் கண்வ ஆட்சி முறியடிக்கப் பட்டுள்ளமையும் உய்த்தறியலாம். A.S. அல்தேகர், K.P. சயசுவால், V.A. சிமித் மற்றும் ஏனைய சில அறிஞர்கள் இக்கொள்கையை ஆதரிக்கின்றனர்.[11] சிமுகன், கண்வ இடையீட்டின் பின் சாதவாகன ஆட்சியை மீள நிறுவியவன் எனவும், 'இரண்டாம்' சாதவாகன வம்சத்தின் நிறுவுனர் எனவும் சுதாகர் சட்டோபாத்தியா கருதுகிறார். மேலும், புராணங்களைத் தொகுத்தவர்கள், இவனது பெயரையும் உண்மையான சாதவாகன வம்சத்தின் நிறுவுனரையும் குழப்பிக் கொண்டுள்ளனர் எனவும் இவர் கருதுகிறார்.[11] சார்ள்சு இகாமின் கூற்றுப் படி, காசுகளின் அடிப்படையிலான ஆதாரங்களின் படி சிமுகனின் ஆட்சி கி.மு. 120க்கு முன்னரே முடிவுற்றுவிட்டது.[12] இமான்சு பிரபா ராயும் சிமுகனின் காலம் கி.மு. 100க்கு முன்பாக இருக்கவேண்டுமெனக் குறிப்பிடுகிறார்.[13] அண்மைய ஆய்வொன்றில், அன்ரூ ஒல்லெட் இவனது காலம் கி.மு. 120-96 ஆயிருக்கலாமெனக் கருத்தறிவித்துள்ளார்.[14] வாழ்க்கை வரலாறுசிமுகனைப் பற்றி பெரியளவில் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சைன மரபுக் கதைகளின் படி, இவன் சைன மதத்தைத் தழுவிக் கொண்டான். எனினும், இவனது இறுதிக் காலத்தில், இவன் ஒரு கொடுங்கோலனாய் மாறியதாகவும், இதனால், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[15] புராணங்களின் படி, கண்வ வம்சத்தின் இறுதி அரசன், ஆந்திர (அல்லது சாதவாகன) வம்சத்தின் முதல் அரசனால் கொல்லப்பட்டு, ஆந்திர அரசன் ஆட்சிபீடமேறியுள்ளான். புராணங்களின் படி: "ஆந்திர சிமுகன் கண்வயனர்களையும் சுசர்மனையும் தாக்கி, சுங்கர்களின் ஆட்சியின் எச்சங்களை அழித்து, இவ்வுலகைப் பெறுவான்."[16] சில நூல்களில் இவன் பலிபுச்ச எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளான்.[17] சிமுகனின் பின்னர் அவனது தம்பி கண்கன் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டான். இவன் தனது பேரரசை மேற்கில் குறைந்தது நாசிக் வரையிலுமாவது விரிவாக்கினான். கண்கனின் பெயரில் இங்கு காணப்படும் ஒரு கல்வெட்டு இதற்குச் சான்று பகர்கின்றது.[5][11] மத்சய புராணத்தின் படி, கிருட்டிணனின் (அதாவது, கண்கன்) பின்பு மல்லகர்ணி ஆட்சிக்கு வந்தான். எனினும், ஏனைய புராணங்களின் படி இவனுக்குப்பின் சதகர்ணி ஆட்சிக்கு வந்துள்ளான். சதகர்ணி தனது நானேகத் கல்வெட்டில் தனது குடும்ப உறுப்பினர்களைப் பட்டியலிட்டுள்ளான். இக் கல்வெட்டில் சிமுகனின் பெயர் காணப்படுகின்றபோதும், கண்கனின் பெயர் காணப்படவில்லை. இதன் அடிப்படையில், சதகர்ணி சிமுகனின் மகன் எனவும், அவன் கண்கனுக்குப் பின் அரியணை ஏறினானெனவும் அறிஞர்கள் முடிவுசெய்துள்ளனர்.[11][18] மேற்கோள்கள்குறிப்புகள்
மூலங்கள்
|
Portal di Ensiklopedia Dunia