கண்ணகி (2023 திரைப்படம்)
கண்ணகி என்பது 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை யசுவந்து கிசோர் இயக்கியிருந்தார். எம். கணேஷ், ஜே. தனுஷ் ஆகியோரால் இசுகை மூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ5 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி, சாலின் ஜோயா ஆகியோர் நடித்திருந்தனர். சான் ரகுமான் இசையமைத்த இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு மேற்கொண்டார். கே. சரத் குமார் படத்தொகுப்பு மேற்கொண்டார். கதைச்சுருக்கம்சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இத்திரைப்படத்தின் கதைக்கருவாகும்.[1] நடிகர்கள்
தயாரிப்பு2021 ஆகத்து 17 இல் படத்தின் முதற் பார்வை சுவரொட்டியும் தலைப்பும் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.[2] படப்பிடிப்பு 2021 இல் தொடங்கியது. திரைப்படத்தின் முன்னோட்டம் 2023 திசம்பர் 2 அன்று வெளியிடப்பட்டது.[3] பாடல்கள்கார்த்திக் நேதாவின் பாடல் வரிகளுக்கு சான் ரகுமான் இசையமைத்திருந்தார். முதல் தனிப்பாடலான ''கொப்புரானே'' 2023 சனவரி 16 அன்று வெளியிடப்பட்டது.[4] இரண்டாவது தனிப்பாடலான ''இதுவெல்லாம் மயக்கமா'' நவம்பர் 2023 இல் வெளியிடப்பட்டது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia