கண்ணும் கண்ணும்
கண்ணும் கண்ணும் (ஆங்கிலம்: Kannum Kannum) 2008 இல் வெளி வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஜி. மாரிமுத்து இயக்கி கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார். பிரசன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் உதயதாரா இவருக்கு இணையாக நடித்திருந்தார். வடிவேலு, சந்தானம், மற்றும் விஜயகுமார் போன்ரோரும் துணைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் ஒலிப்பதிவு மற்றும் இசையினை தினா மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளை "கவிப் பேரரசு" வைரமுத்து எழுதியுள்ளார். இது அக்டோபர் 2, 2008 அன்று அவர்களின் காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கலைஞர் தொலைக்காட்யில் ஒளிபரப்பியது. படத்தின் தலைப்பு அன்னியன் படத்தின் ஒரு பாடலை அடிப்படையாகக் கொண்டது கதைதாய் தந்தை இல்லாத சத்தியமூர்த்தி (பிரசன்னா) தனது உணர்வுகளை ஒரு கவிதையில் வெளிப்படுத்துகிறார், ஆனால் அதை பத்திரிகைகளில் வெளியிடவில்லை. ஆச்சரியம் என்னவென்றால், ஒரு பத்திரிகையில் ஒரு பெண் எழுதிய ஒரு கவிதையை படிக்கும் போது தனது கவிதையைப் போலவே இருக்கிறது. அதனால் அவர் மிகவும் மகிழ்ந்து போய், அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். அவர் ஒரு கல்லூரி மாணவி மற்றும் குற்றாலத்தில் வசிப்பதை அவர் தெரிந்து கொள்கிறார். அவர் அந்தப் பெண்ணிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறார்.பிறகு , அதற்கான பதிலையும் பெறுகிறார். இருவருக்கும் இடையே நட்பு உருவாகிறது.மேலும் அது படிப்படியாக காதலாக உருமாருகிறது. ஒரு நல்ல நாளில், சத்தியமூர்த்தி அப்பெண்ணைச் சந்திப்பதற்காக குற்றாலத்திற்குச் செல்கிறார்.அங்குதனது நண்பரின் வீட்டில் தங்கியிருக்கிறார். அந்தப் பெண் கல்லூரி சுற்றுப்பயணத்திற்காக வெளியூர் சென்றிருக்க,நண்பரின் வீட்டிலேயே சில காலம் தங்கியிருக்கிறார்.படத்தின் இரண்டாவது பாதியில்,சத்தியமூர்த்தியால் தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் அவரது நண்பர் இறந்துவிடுகிறார். தனது தவறுக்கு பரிகாரம் செய்ய விரும்பும் சத்தியமூர்த்தி, தனது நண்பரின் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தனது நண்பரின் சகோதரிகளை தனது சொந்த சகோதரிகளாக கருதுகிறார். அந்தப் பெண் திரும்பி வரும்போது, அவள் ஒரு புதிய சகோதரனைக் காண்கிறாள். சத்தியமூர்த்தியை சகோதரனாக ஏற்றுக்கொள்ள அப்பெண்ணின் உள்ளம் மறுக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தாங்கள் யார் என்று தெரியவருகிறது. சத்தியமூர்த்தி அந்தப்பெண்ணை சகோதரியாகவே எண்ணிக்கொண்டு குற்றாளத்தை விட்டு வெளியேருகிறார். இங்கே கிளைக் கதை வடிவேலுவை உடும்பன் என்று பின்தொடர்கிறது, அவரது நகைச்சுவை திரைப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அவரது "கெணத்த காணோம்" என்ற காட்சி குறிப்பிடத்தக்கவையாகும். இந்த காட்சியைப் பற்றிய குறிப்பு 2009 ஆம் ஆண்டு வெளியான கந்தசாமி திரைப்படத்தில் மீண்டும் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள்சத்யமூர்தியாக பிரசன்னா ஒலிப்பதிவுஇப்படத்தின் இசையமைப்பாளர் தினா (இசையமைப்பாளர்) .[1] பாடல் வரிகளை "கவிப் பேரரசு" வைரமுத்து எழுதியுள்ளார். விமர்சனம்"ரெடிஃப்" என்ற வலைதளம் இவ்வாறு எழுதுகிறது. "கதைகள் பெரும்பாலும் கோலிவுட்டில் 'வித்தியாசமானவை', 'உங்கள் மனதை மயக்குகின்றன,' ஆனால் பெரும்பாலும், அவை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழத் தவறிவிடுகின்றன" என்று எழுதியது. ஜி. மாரிமுத்து இயக்கிய எம் ஆர் மோகன் ராதாவின் "கண்ணும் கண்ணும்", 'யாருக்கும் ஏற்படக்கூடிய ஒரு கதையாக இருக்க முன்வருகிறது, உண்மையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிகிறது"[2] பி. பாலாஜி எழுதினார் "கண்ணும் கண்ணும்" இயக்குநர் மாரிமுத்து இந்த பிரிவில் வருகிறார். விரும்பத்தக்க கதாபாத்திரங்கள் மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையுடன், அவர் ஒரு நல்ல காதல் வடிவத்தை வடிவமைக்கிறார், இது முடிவில் நம்முடைய பொறுமையை இழக்கச் செய்வதற்கு முன்பு நம் புகழைப் பெறுகிறது."[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia