கதாநாயகி (திரைப்படம்)
கதாநாயகி (ⓘ) என்பது 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1955, பெப்ரவரி 19 அன்று வெளியானது. இப்படத்தின் கதை 1951 ஆம் ஆண்டு வெளியான ஹேப்பி கோ லவ்லி திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது. கதைநாடகக் குழு பின்னணியில் நடக்கும் கதை இதுவாகும். நாடகத்தில் நடிக்கும் ஆசையில் பத்மினி வீட்டை விட்டு வெளியேறி நாடக்க் குழு ஒன்றில் சேருகிறாள். நாடக் குழுவின் உரிமையாளரான டி. ஆர். இராமச்சந்திரன் அவளைக் காதலிக்கிறார். அவள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறாள். அந்தச் சிக்கல்களை அவளும் அவளது காதலனும் எப்படி தீர்க்கிறார்கள் என்பது கதையின் மீதியாகும். நடிப்பு
பாடல்கள்ஜி. ராமநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை சுரதா, கண்ணதாசன், தஞ்சை இராமையாதாஸ் ஆகியோர் எழுதினர்.[1]
வெளியீடும் வரவேற்ப்பும்கதாநாயகி 1955 பெப்ரவரி 19 அன்று வெளியானது.[2] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, சில விமர்சகர்கள் "கணிக்கக்கூடிய" கதைக்களம் கொண்டதாக படத்தை கருதினாலும், படம் வெற்றிபெறவில்லை.[3] உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia