கத்தரித்தல் (தாவரவியல்)தாவரங்களின் அங்குரத்தொகுதியில் அல்லது வேர்த்தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை நீக்குதல் கத்தரித்தல் (Pruning) எனப்படும்.[1][2][3] கத்தரித்தலின் நோக்கங்கள்
கத்தரித்தலின் வகைகள்![]() தலையகற்றல்தாவரத்தின் உச்சிப்பகுதி நீக்கப்படுவதன் மூலம் உச்சியாட்சி அழிக்கப்பட்டு கக்கவரும்புகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.இதன் மூலம் உயரத் குறைந்த அடர்த்தி கூடிய தாவரங்கள் பெறப்படுகின்றது. இதனால் தாவரங்களின் பராமரிப்புச் சுலபமாக்கப்படுவதுடன் கூடிய விளைச்சலையும் பெற முடிகிறது.மா, தோடை, தேயிலை, பூஞ்செடிகளில் இச்செயற்பாடு பொதுவாக கைக் கொள்ளப்படும். ஐதாக்கல்கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள் என்பவற்றின் செறிவு குறைக்கப்படுதல் ஐதாக்கல் ஆகும். பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல்
கவாத்துபழமரங்களில் புதிதாக உருவாகும் துளிர்களில் தான் பூ உருவாகி பின்னர் காயாகி கனியாகும், அவ்வாறு புதிய துளிர்களைத் துளிர்க்கச் செய்ய பழைய வேண்டாத காய்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துதலே கவாத்து செய்தல் ஆகும். தற்போது கவாத்து என்பது கிளை படர்வு மேலாண்மை என்ற சொல் மூலமும் அறியப்படுகிறது. கத்தரித்தலுக்குள்ளாகும் தாவரங்களும் பகுதிகளும்
கத்தரித்தலின் நன்மைகள்
கத்தரித்தல் உபகரணங்கள்கத்தரிகோல்கிளைகளை வெட்டுவதற்கென்றே இரு கைகளாலும் பலமுடன் அழுத்தி வெட்டும் வசதி உடைய கத்தரிகோல். சுனப்பு வெட்டறுவாள்நன்கு சுனப்பு உடைய வெட்டறுவாள் கொன்டும் கிளைகளை வெட்டி நீக்கலாம், அவ்வாறு அறுவாள் கொண்டு கிளைகளை வெட்டும்போது கிளையில் பிளவு ஏற்படாதவாறு வெட்டவேண்டும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia