கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். செபமாலையின் ஆங்கிலச்சொல்லான ரோசரி (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது. செபமாலையில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன.[1][2][3]
செபமாலை
பாரம்பரியப்படி செபமாலையில் 15 மறைபொருள்களை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே புனித ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2002-இல் இதனோடு மேலும் 5 மறைபொருள்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்ஒளியின் மறைபொருள் என்னும் பெயரில் சேர்த்தார்.
வரலாறு
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை "இயேசு கற்பித்த இறைவேண்டலாகிய" பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மரியே (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள்.
இன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது.
13ம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 - வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)
மறைபொருள்களை தியானிக்கும் கிழமைகள்
கிழமை
ஒளியின் மறைபொருளோடு
ஒளியின் மறைபொருள் இல்லாமல்
ஞாயிற்றுக்கிழமை
மகிமை மறைபொருள்கள்
திருவருகைக் காலம் மற்றும் கிறிஸ்து பிறப்புக் காலம்: மகிழ்ச்சி மறைபொருள்கள் தவக் காலம் முதல் குருத்து ஞாயிறு வரை: துயர மறைபொருள்கள்
பொதுக்காலம் மற்றும் பாஸ்கா காலம்: மகிமை மறைபொருள்கள்