கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு நாள்காட்டி (இந்தியா) என்பது கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி என்னும் வழிபாட்டுக் குறிப்பேட்டில் அடங்கியுள்ள புனிதர்கள் மற்றும் விழாக்கள் தவிர, இந்திய நாட்டுக்கே உரிய சிறப்புக் கொண்டாட்டங்களையும் உள்ளடக்கிய ஏடு ஆகும்.
இந்தியாவுக்குரிய சிறப்புக் கொண்டாட்டங்கள்
இந்திய நாட்டில் பிறந்து வளர்ந்து, கத்தோலிக்க சமய வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களுக்குச் சிறப்பு அளிக்கப்படுகிறது. அதுபோலவே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து கிறித்தவ மறைப்பணி புரிந்தவர்களுக்கும் சிறப்பிடம் கொடுக்கப்படுகிறது.
கீழ்வரும் பட்டியலில் இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகின்ற சிறப்பு விழாக்கள் தரப்படுகின்றன. இவற்றுள் புனித தோமா (சூலை 3), மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் (டிசம்பர் 3) ஆகிய கொண்டாட்டங்கள் பொது நாள்காட்டியிலும் இடம் பெறுகின்றன. ஆனால் அவ்விழாக்கள் "பெருவிழா" என்னும் உயர்நிலைக் கொண்டாட்டங்களாக இந்தியாவில் சிறப்பிக்கப்படுகின்றன.
இந்தியாவுக்குரிய சிறப்புப் புனிதர் பட்டியல்
நாள்
|
விழா/புனிதர் பெயர்
|
விளக்கக் குறிப்பு
|
கொண்டாட்ட வகை
|
சனவரி 3
|
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா (1805-1871)
|
மறைப்பணியாளர்
|
விருப்ப நினைவு
|
சனவரி 16
|
புனித ஜோசப் வாஸ் (1651-1711)
|
மறைப்பணியாளர்
|
விருப்ப நினைவு
|
பெப்ருவரி 4
|
புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்) (1647-1693)
|
மறைப்பணியாளர், மறைச்சாட்சி
|
விழா
|
பெப்ருவரி 6
|
புனித கொன்சாலோ கார்சியா (1556-1597)
|
மறைச்சாட்சி
|
விழா
|
சூன் 8
|
முத்திப்பேறு பெற்ற மரிய தெரேசா சிராமெல் (1876-1926)
|
கன்னியர்
|
விருப்ப நினைவு
|
சூலை 3
|
புனித தோமா (? - சுமார் 72)
|
திருத்தூதர், (இந்தியாவின் திருத்தூதர்)
|
பெருவிழா
|
சூலை 28
|
புனித அல்போன்சா முட்டாத்துபாடாத் (1910-1946)
|
கன்னியர்
|
விழா
|
செப்டம்பர் 5
|
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா (1910-1997)
|
கன்னியர்
|
விருப்ப நினைவு
|
டிசம்பர் 3
|
புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552)
|
மறைப்பணியாளர், (இந்தியாவின் பாதுகாவலர்)
|
பெருவிழா
|
மேலே குறிப்பிட்ட புனிதர்கள் தவிர, இந்திய கத்தோலிக்க திருச்சபையால் வெவ்வேறு நிலைகளில் சிறப்பிக்கப்படும் பெருமக்கள் கீழ்வருமாறு:[1]
முத்திப்பேறு பெற்றோர்
- முத்திப்பேறு பெற்ற யூப்ராசியா எலுவதிங்கல் (1872-1952)
- முத்திப்பேறு பெற்ற தேவர்பரம்பில் குஞ்ஞச்சன் (1891-1973)
- முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை (1712-1752) (நினைவு: சனவரி 14)
வணக்கத்துக்குரியோர்
இறை ஊழியர் நிலையில் உள்ளோர்
- இறை ஊழியர் அன்னை எலிஸ்வா (1831-1913)
- இறை ஊழியர் மார் மேத்யூ மாக்கில் (1851-1914)
- இறை ஊழியர் ஜோசப் விதயத்தில் (1865-1964)
- இறை ஊழியர் தொம்மையச்சன் பூத்தாத்தில் (1871-1943)
- இறை ஊழியர் மார் தோமாஸ் குரியாலச்சேரி (1872-1925)
- இறை ஊழியர் மேத்யூ கடலிக்காட்டில் (1872-1935)
- இறை ஊழியர் ரேய்முந்த் பிரான்சிஸ் கமில்லஸ் மஸ்கரேனாஸ் (1875-1960)
- இறை ஊழியர் வர்கீஸ் பளக்காப்பிள்ளில் (1876-1929)
- இறை ஊழியர் அகஸ்தீன் ஜான் ஊக்கன் (1880-1956)
- இறை ஊழியர் கீவர்கீஸ் மார் இவானியோஸ் (1882-1953)
- இறை ஊழியர் ஜோசப் தம்பி (1883-1945) பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
- இறை ஊழியர் சக்கரியாஸ் (1887-1957)
- இறை ஊழியர் ஜோசப் பஞ்சிக்காரன் (1888-1949)
- இறை ஊழியர் அகஸ்டீன் தச்சுப்பரம்பில் (1894-1963)
- இறை ஊழியர் பரதேசி பீட்டர் (1895-1958) பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
- இறை ஊழியர் லாரன்ஸ் புலியனாத் (1898-1961)
- இறை ஊழியர் மார் மேத்யூ காவுக்காட் (1904-1969)
- இறை ஊழியர் ரேய்னோல்ட்ஸ் புரக்கல் (1910-1988)
- இறை ஊழியர் தெயோபனே (1913-1969)
- இறை ஊழியர் அன்னை பேத்ரா (1924-1976)
- இறை ஊழியர் செலீன் கண்ணனைக்கல் (1931-1957)
- இறை ஊழியர் ராணி மரியா (1954-1995)
ஆதாரங்கள்