கந்தர்வக்கோட்டை பாளையம்
வரலாறு1879 ஆம் ஆண்டு, இவர்களின் கீழ் 53 கிராமங்கள் இருந்தன (54468 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 6577 ரூபாய் 4 அணா 11 பைசா ஆகும். 400 ஆண்டுகள் பழைய அரண்மனை முற்றிலும் இடிபாடுகளுடன் உள்ளது.[2][3] புதுக்கோட்டை அரச குடும்பத்துடன் திருமண உறவு மூலம் கந்தர்வகோட்டை ஜமீன்கள் இணைந்திருந்தார்கள்.[4] 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக ராஜா ராமச்சந்திர துரை அச்சுதப்பண்டாரத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களான குறவர் இனமக்களை, கந்தவர்கோட்டை பாளையக்காரர்கள் தங்களுடைய முகவர்களாக நியமித்திருந்தார்கள்.[6] முடிவுரைகந்தர்வக்கோட்டை ஜமீன் பகுதியானது சுதந்திரத்திற்கு பிறகு கலைக்கப்பட்டு கந்தர்வகோட்டை வட்டமாக மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia