கந்தர் அலங்காரம்

கந்தர் அலங்காரம் என்பது பொ.ஊ. 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூல் வெவ்வேறு வேளைகளில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்றும், முருகனால் உபதேசம் பெற்றப்பட்ட போது எழுதப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தபோது இவரைக் காப்பாற்றி முருகன் வழங்கிய உபதேசங்களைப் பற்றி இந்நூல் கூறுகிறது.

சிறப்பு

இந்நூல் தேவாரம் போல வழிபாட்டு நூலாகக் கருதப்படுகிறது. கந்த சஷ்டி நாளில் முருகன் பக்திப் பாடல்களாக இந்நூல் பாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya