கந்த சஷ்டி

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். .மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், முருகனுக்குரிய விரத நாட்கள் வந்தாலும், ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச (வளர்பிறையில்) பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி (மகா கந்த சஷ்டி) காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.[1]

முருகன் சூரனை அழித்தல்

ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரபத்மனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம்சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.[2]

கந்த சஷ்டி விரதம்

இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

ஆதாரங்கள்

  1. கந்தசஷ்டி விழா 2024 எப்போது ஆரம்பம் ? யாரெல்லாம் விரதம் இருக்கலாம் ?
  2. ராணி (2024-11-05). "இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் சிறப்பானது! ஏன்?". www.ranionline.com. Retrieved 2024-11-05.

கந்த சஷ்டி அபிஷேகம் → https://www.youtube.com/watch?v=sQzRW7HjEf4

சுப்ரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வானை அபிஷேகம் → https://www.youtube.com/watch?v=Wrg1cESbM2I

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya