கன்சா பள்ளத்தாக்குகன்சா பள்ளத்தாக்கு (ஆங்கிலம் : Hunza Valley ) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டித்தான் பகுதியில் உள்ள ஒரு மலை பள்ளத்தாக்கு ஆகும். ஆப்கானித்தானின் வாகன் காரிடார் என்ற ஒரு குறுகிய பகுதி மற்றும் சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தின் எல்லையின் வடக்கு பகுதியின் கடைசியில் அமைந்துள்ளது.[1] கன்சா பள்ளத்தாக்கு 2,438 மீட்டர் (7,999 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, கால்நடையாக பயணிக்கும் ஒருவர் ஸ்வாட் மற்றும் காந்தாராவுக்கு விரைவான செல்லும் வழிய கன்சா கொண்டுள்ளது. சாமான்களை விலங்குகள் மூலம் எடுத்துச் செல்ல முடியாது. மனித சுமைதாங்கிகள் மட்டுமே கொண்டு செல்ல முடியும்.அதுவும் உள்ளூர்வாசிகளின் அனுமதியுடன் மட்டுமே கொண்டு செல்ல முடியும். கன்சாவின் மக்களில் பெரும்பாலோர் இஸ்மாயிலி முஸ்லிம்கள் ஆவர். உருது மற்றும் ஆங்கிலம் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டாலும் உள்ளூர் மொழி புருசுச்சுகி ஆகும். வரலாறு![]() ![]() கன்சா முன்னர் வடகிழக்கில் சின்ஜியாங் (சீனாவின் தன்னாட்சி பகுதி) மற்றும் வடமேற்கில் பாமிர் எல்லையிலுள்ள ஒரு சுதேச அரசாக 1974 வரை இருந்தது. இறுதியாக அது சுல்பிகர் அலி பூட்டோவால் கலைக்கப்பட்டது. தெற்கே கில்கிட் நிர்வாக அமைப்பும், கிழக்கில் நகரின் முன்னாள் சுதேச மாநிலமும் எல்லையாக இருந்தது. மாநில தலைநகரம் பால்டிட் நகரம் ( கரிமாபாத் என்றும் அழைக்கப்படுகிறது) என்பதாகும். மற்றொரு பழைய குடியேற்றம் கணிஷ் கிராமம், அதாவது "பண்டைய தங்கம்" கிராமம் எனப் பொருள்படும். 1889 மற்றும் 1891 க்கு இடையில் இராணுவ வெற்றியின் மூலம் ஆங்கிலேயர்கள் அதன் கட்டுப்பாட்டையும் அண்டை பள்ளத்தாக்கான நகார் பள்ளத்தாக்கை கைப்பற்றும் வரை கன்சா 900 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுதந்திரமாக இருந்தது. அப்போதைய கன்ஸாவின் (மிர் / தாம்) ஆட்சியாளர் சப்தார் கான் சீனாவில் கஷ்கருக்கு தப்பி ஓடி, அரசியல் தஞ்சம் தேடினார்.[2] அண்டை நாடான காஷ்மீரால் ஒருபோதும் நேரடியாக ஆட்சி செய்யப்படவில்லை என்றாலும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மகாராஜா ரன்பீர் சிங்கின் காலத்திலிருந்தே கன்சா காஷ்மீரின் ஒரு அடிமைப் பிரதேசமாகவே இருந்தது. கன்சாவின் ஆட்சியாளர்கள் 1947 வரை காஷ்மீர் அரசருக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்தினர். மேலும் நகாரின் ஆட்சியாளருடன் சேர்ந்து, காஷ்மீர் மகாராஜாவின் மிகவும் விசுவாசமான அடிமைகளாக இருந்தனர். 1947 நவம்பர் 3, அன்று, அப்போதைய ஆட்சியாளரான முகமது ஜமால் கான் என்பவர் முகமது அலி ஜின்னாவிடம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு ஒரு தந்தி அனுப்பினார். 2010 நிலச்சரிவு2010 ஆம் ஆண்டில், எற்பட்ட ஒரு நிலச்சரிவு அங்காயுள்ள நதியைத் தடுத்து அத்தாபாத் ஏரியை (கோஜல் ஏரி என்றும் அழைக்கப்படுகிறது) உருவாக்கியது இதன் விளைவாக 20 பேர் இறந்தனர். காரகோரம் நெடுஞ்சாலையில் சுமார் 26 கிலோமீட்டர் (16 மைல்) தடுக்கப்பட்டது.[3] புதிய ஏரி 30 கிலோமீட்டர்கள் (19 mi) வரை நீண்டுள்ளது மற்றும் 400 அடிகள் (120 m) ஆழத்திற்கு உயர்ந்தது.[4] நிலச்சரிவு காரகோரம் நெடுஞ்சாலையின் பகுதிகளை முழுவதுமாக உள்ளடக்கியது. 2018 மீட்பு பணி2018 1 ஜூலை அன்று, துணிச்சலான பணியில் ஈடுபடும் பாக்கித்தான் ராணுவ விமானிகள், கன்சா அருகே உள்ள அல்தார் சார் சிகரத்தில் 19,000 அடி (5,800 மீ) உயரத்தில் பனி பனிச்சரிவில் சிக்கிய 3 வெளிநாட்டு மலையேறுபவர்களை மீட்டனர். 7,388 மீட்டர் (24,239 அடி) உயரமுள்ள அல்டார் சார் மீது மீட்பு நடவடிக்கை இராணுவ ஹெலிகாப்டர் செல்வது வானிலை காரணமாக மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் அவர்கள் அதை நிறைவு செய்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த புரூஸ் நார்மண்ட் மற்றும் திமோதி மில்லர் ஆகியோர் வெற்றிகரமாக உயிருடன் மீட்கப்பட்டனர், அதே நேரத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் கூபர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டார்.[5][6] கல்விகாரகோரம் சர்வதேச பல்கலைக்கழக கன்சா வளாகம் கணிதம், மேம்பாட்டு ஆய்வுகள், உயிரியல் அறிவியல் மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை ஆகியவற்றில் பி.எஸ் பட்டங்களை வழங்குகிறது. மக்கள்கன்சாவில் பேசும் உள்ளூர் மொழிகளில் புருசாச்சுகி, வாகி மற்றும் சினா ஆகியவை அடங்கும். கன்சா பள்ளத்தாக்கின் கல்வியறிவு விகிதம் 77 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கன்சா மற்றும் தற்போதைய வடக்கு பாக்கித்தானின் வரலாற்றுப் பகுதி, பல நூற்றாண்டுகளாக, அதிக மக்கள் இடப்பெயர்வு, மோதல்கள் மற்றும் பழங்குடியினர் மற்றும் இனங்களை மீளக்குடியமர்த்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அவற்றில் பிராந்திய வரலாற்றில் தார்திக் சினா இனம் மிக முக்கியமானது. பிராந்திய மக்கள் தங்கள் வரலாற்று மரபுகளை தலைமுறைகளாக விவரித்து வருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய சில வாகி இனத்திற்கு கன்சா பள்ளத்தாக்கு தாயகமாக உள்ளது. மேலும் காண்ககுறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia