கன்ஸ் அன்’ ரோஸஸ்
கன்ஸ் அன்’ ரோஸஸ் (சில சமயங்களில் GN'R அல்லது GnR என சுருக்கப் பெயரில் அழைக்கப்படுகிறது) ஒரு அமெரிக்க ஹார்டு ராக் இசைக்குழுவாகும். இந்த இசைக்குழு கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் 1985 ஆம் ஆண்டு உருவானது. ஆக்ஸில் ரோஸ் (இயற்பெயர் வில்லியம் ப்ரூஸ் ரோஸ், ஜூனியர்.) தலைமையில் இயங்கும் இந்தக் குழு தொடங்கியது முதலே ஏராளமான கலைஞர்கள் மாற்றத்தையும் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது; நடப்பு குழுவில் பாடகர் ரோஸ், கிதார் கலைஞர்கள் ரோன் ”பம்பிள்ஃபுட்” தால், டிஜே ஆஷ்பா மற்றும் ரிச்சர்டு ஃபோர்டஸ், பாஸ் கலைஞர் டாமி ஸ்டின்ஸன், டிரம் இசைக் கலைஞர் ஃபிராங்க் ஃபெரர் மற்றும் கீபோர்டு கலைஞர்கள் டிஸி ரீட் மற்றும் கிறிஸ் பிட்மேன் ஆகியோர் இருக்கின்றனர்.[7] இந்த இசைக்குழு தனது வாழ்நாளில் ஆறு ஸ்டுடியோ ஆல்பங்கள், மூன்று EPக்கள் மற்றும் ஒரு நேரலை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் 46 மில்லியன் பிரதிகள் உட்பட உலகெங்கிலும்[8][9] 100 மில்லியன் ஆல்பங்களை இந்த இசைக்குழு விற்றிருக்கிறது.[10] 1987 ஆம் ஆண்டு வந்த இந்த இசைக்குழுவின் அபடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் என்னும் பெரிய நிறுவன அறிமுக ஆல்பம் உலகெங்கும் 28 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றதோடு அமெரிக்காவின் பில்போர்டு 200 பாடல்வரிசையில் முதலிடத்தையும் எட்டியது. அத்துடன் பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் மூன்று தலைமை 10 வெற்றிப் பாடல்களையும் இந்த ஆல்பம் உருவாக்கியது, இதில் “ஸ்வீட் சைல்ட் ஆஃப் மைன்” முதலிடத்தை எட்டியது.[11] 1991 ஆம் ஆண்டு வெளிவந்த யூஸ் யுவர் இல்லுஷன் I மற்றும் யூஸ் யுவர் இல்லுஷன் II ஆகிய இரண்டு ஆல்பங்களும் பில்போர்டு 200 வரிசையில் இரண்டு மிக உயர்ந்த இடங்களுக்கு உயர்ந்தன என்பதோடு, இரண்டும் சேர்ந்து அமெரிக்காவில் மட்டும் 14 மில்லியன் பிரதிகளும் உலகெங்கிலும் 35 மில்லியன் பிரதிகளும் விற்றன. ஒரு பத்தாண்டு கால உழைப்புக்குப் பிறகு, அதனையடுத்த சைனீஸ் டெமாக்ரசி என்னும் தங்களது அடுத்த ஆல்பத்தை 2008 ஆம் ஆண்டில் இவர்கள் வெளியிட்டனர். அவர்களின் எண்பதுகளின் மத்திய-முதல்-பிந்தைய காலம் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்ப காலத்தில் “அவர்கள் ஒரு கிளர்ச்சித் தன்மையை முன்கொண்டு வந்தனர் என்பதோடு ஆரம்பகால ரோலிங் ஸ்டோன்ஸ் கட்டத்தை நினைவுகூரும் வகையில் அலட்டிக் கொள்ளும் ஹார்டு ராக் இசைக்கு புத்துயிர் அளித்தனர்” என்று இசைத் துறையில் இருக்கும் மனிதர்கள் குறிப்பிடுவதுண்டு.[1] உருவாக்கம் (1985-1987)ஹாலிவுட் ரோஸ் உறுப்பினர்களான ஆக்ஸில் ரோஸ் (குரல்) மற்றும் இஸி ஸ்ட்ராட்லின் (தாள கிதார்), மற்றும் L.A. கன்ஸ் உறுப்பினர்கள் டிராசில் கன்ஸ் (தலைமை கிதார்), ஓலி பெய்ச் (பாஸ்) மற்றும் ராப் கார்ட்னர் (டிரம்) ஆகியோரால் இந்த குழு 1985 ஆம் ஆண்டின் ஆரம்பவாக்கில் உருவாக்கப்பட்டது.[12] குழு உறுப்பினர்களின் பெயர்களில் இரண்டில் இருந்து இந்த இசைக்குழுவின் பெயர் உருவாக்கப்பட்டது. கொஞ்ச நாள் கழித்து பாஸ் கலைஞர் ஓலி பெய்ச் நீக்கப்பட்டு, டஃப் மெக்காகன் அமர்த்தப்பட்டார். இன்னும் கொஞ்ச நாளில் டிராசில் ஒத்திகைக்கு வராததை அடுத்து அவருக்குப் பதிலாக ஸ்லாஷ் அமர்த்தப்பட்டார். ஹாலிவுட் ரோஸில் இருந்த கொஞ்ச காலத்தில் ஸ்லாஷ் மெக்காகனுடன் சேர்ந்து ரோட் க்ரூ மற்றும் ஸ்ட்ராட்லினில் இசையாற்றி இருந்தார். இந்த புதிய குழு வெகுவிரைவாய் ஒருங்கிணைந்து செயல்பட்டது. ஆனால் கலிபோர்னியாவின் சாக்ராமெண்டோவில் இருந்து டஃபின் தாய் நகரமான சியாட்டிலுக்கு “பயணம்” செய்ய முடிவெடுக்கப்பட்டதை அடுத்து, டிரம் கலைஞர் ராப் கார்ட்னர் விலகி விட்டார். அவருக்குப் பதிலாக ஸ்லாஷின் நெருங்கிய நண்பரான ஸ்டீவன் அட்லர் அமர்த்தப்பட்டார்.[13] டிராசில் கன்ஸ் விலகி விட்ட பின்னும் கூட கன்ஸ் அன்’ ரோஸஸ் என்கிற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்பட்ட இந்த இசைக்குழு தனது முதல் ஸ்திரமான குழுவரிசையை “ஹெல் டூர்” என்று அழைக்கப்படும் சுற்றுப்பயணத்தில் ஸ்தாபித்தது. ஒரு நேர்காணலில் ஸ்லாஷ் கூறினார், “அந்த பயணம் (சியாட்டில் பயணம்) தான் இசைக்குழுவை உறுதிப்படுத்தி” குழுவினரிடையான ரசாயனத்தை ஸ்தாபித்தது.[14] லிவ் ?!*@ லைக் எ சூஸைட்==== இந்த இசைக்குழு மீதான ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் கெஃபென் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் 1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு EP ஐ வெளியிட்டது. நான்கு பாடல்கள் கொண்ட EP ஆல்பமான இந்த லிவ் ?! *@ லைக் எ சூஸைட் “உஸி சூஸைட் ரெக்கார்ட்ஸ்” என்னும் பெயரிலான சுதந்திரமான இசைத்தட்டுப் பிரிவில் இருந்து (இது உண்மையில் கெஃபென் துணை நிறுவனம்) வெளியானது. 10,000 EP வினைல் பிரதிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டின் ஹேலோவீன் இரவில் கன்ஸ் அன்’ ரோஸஸ் UCLA ஆக்கர்மேன் பால்ரூம் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்தியது. திலோனியஸ் மான்ஸ்டர், தி டிக்கிஸ் நிகழ்ச்சிகளுக்கு துவக்க இசையாகவும் மற்றும் ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்க்கு தலைப்பு இசையாகவும் இது நிகழ்த்தப்பட்டது. இந்த இசைத்தட்டு நேரலை பதிவாகக் கூறப்பட்டது; ஆனால் பல வருடங்களுக்குப் பின் தான் அது ஒரு செயற்கைத் தூண்டலுற்ற நிகழ்ச்சி என்பதை ரோஸ் வெளிப்படுத்தினார். EP ஆல்பத்தில் இந்த இசைக்குழுவின் மாதிரிப் பதிவுகளில் இருந்தான நான்கு பாடல்கள் இருந்தன, கூட்டத்தின் குரல் அதில் மேல்பதிவு செய்யப்பட்டது. ரோஸ் டாட்டூவின் “நைஸ் பாய்ஸ்” மற்றும் ஏரோஸ்மித்தின் ”மாமா கின்” ஆகிய பாடல்களின் மாற்றுப்பாடகர் பதிப்புகள் இதில் இருந்தன. அத்துடன் இரண்டு ஒரிஜினல் பாடல்களும் இருந்தன: “ரெக்லஸ் லைஃப்” மற்றும் செவ்வியல் ராக் இசையின் பாதிப்பிலான “மூவ் டு தி சிட்டி” ஆகியவை. இந்த இரண்டுமே ஹாலிவுட் ரோஸின் ஸ்தாபக உறுப்பினரான கிறிஸ் வேபரால் இணைந்து எழுதப்பட்டவை.[சான்று தேவை] லிவ் ?! *@ லைக் எ சூஸைட் வினைல் EP வடிவம் ஒரு மதிப்பு வாய்ந்ததாகவும், சேகரிப்பாளர் விருப்பமாகவும் அமைந்தது. ஆயினும் இந்த தடங்கள் இரண்டு வருடங்களுக்குப் பின்னால் GN'R லைஸ் ஆல்பத்தில் மறுவிநியோகம் செய்யப்பட்டன. அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் , G N' R லைஸ் (1987-1989)இந்த இசைக்குழுவின் முதல் ஆல்பமான அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் 1987 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று வெளியானது. ஆல்பம் பின் ஒரு கலைப்படைப்பு மாற்றத்திற்கு ஆட்பட்டது. ஆரம்பத்தில் ராபர்ட் வில்லியம்ஸ் செய்திருந்த அட்டை வடிவமைப்பு (அதில் ஒரு பிரம்மாண்டமான கூரிய பற்களுடைய ஜந்து ஒரு ரோபோ கற்பழிப்புவாதியை ஆவேசத்துடன் தாக்குவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது) மாற்றப்பட்டது.[15] மாற்றப்பட்ட அட்டையை பில் ஒயிட் வடிவமைத்திருந்தார். ஒரு பச்சை குத்தும் கலைஞரான இவர், முந்தைய வருடத்தில் ரோஸ் பெற்றிருந்த ஒரு பச்சைக்காகத் தான் இதனை வடிவமைத்து உருவாக்கியிருந்தார். இசைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களின் மண்டையோடுகளும் ஒரு சிலுவையில் அடுக்கியிருப்பது போல் இந்த வடிவமைப்பில் இடம்பெற்றிருந்தது. அதன்பின், RIAA விநியோகித்த தங்க மற்றும் பிளாட்டின பதக்க வில்லைகளை ஆரம்ப அட்டையைப் பயன்படுத்தி அமைக்கும்படி ரோஸ் வலியுறுத்தினார். ஆரம்ப அட்டையில் இருந்த கலைவேலையை குறுந்தகடு வெளியீட்டில் அளிக்கப்பட்ட புத்தகத்தில் காணலாம். அமெரிக்காவில், முதல் சிங்கிளாக “வெல்கம் டூ தி ஜங்கிள்” உடன் ஒரு இசை வீடியோவும் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில், இந்த ஆல்பமும் சிங்கிளும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிரமாதமான வரவேற்பு இல்லாமலேயே உலவிக் கொண்டிருந்தது. ஆனால் கெஃபென் ரெக்கார்ட்ஸ் நிறுவன ஸ்தாபகர் டேவிட் கெஃபென் இந்த இசைக்குழுவிற்கு ஆதரவளிக்க கேட்டுக் கொள்ளப்பட்ட சமயத்தில், அவர் எம்டிவி நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டு அவர்களது பிந்தைய நேர சுழற்சியில் “வெல்கம் டூ தி ஜங்கிளை” இசைக்கச் செய்தார். ஆரம்பத்தில் இந்த வீடியோ ஒருவேளை மட்டும் ஞாயிறு காலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, ராக் மற்றும் பங்க் ரசிகர்கள் கவனத்தை இது கவர்ந்ததால் அவர்கள் விரைவில் இந்த வீடியோவை ஒளிபரப்ப விரும்பி அதிகமான எண்ணிக்கையில் கோரிக்கை விடுக்கத் துவங்கினார்.[16]
“பாரடைஸ் சிட்டி” பாடலும் அதன் வீடியோவும் ஒளிபரப்பாகி அமெரிக்காவில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் முன்னரே, இந்த இசைக்குழுவின் சுற்றுப்பயண வெற்றியும் புகழும் இந்த ஆல்பத்திற்கு பில்போர்டு வரிசைகளில் முதலிடத்தைப் பெற்றுத் தந்திருந்தது. “வெல்கம் டூ தி ஜங்கிள்” ”ஸ்வீட் சைல்ட் ஆஃப் மைன்” மற்றும் ”பாரடைஸ் சிட்டி” எல்லாமே அமெரிக்காவில் தலைமை பத்தில் இடம்பெற்ற சிங்கிள்களாய் வலம் வந்தன. இன்றுவரை, அபடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் உலகெங்கிலும் 28 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாய் விற்றுத் தீர்ந்துள்ளது.[17] இது அமெரிக்காவில் 18X சான்றளிப்பும் வென்றுள்ளது.[18] கன்ஸ் அன்’ ரோஸஸ் பெரும் நிகழ்ச்சிகளுக்குக் காட்சிகளைத் துவங்கியது, ஆனால் அவர்களின் புகழ் பரவியதை அடுத்து, அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் ஆல்பத்திற்கு ஆதரவாக ஒரு சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடப்பட்டது. இந்த இசைக்குழு அமெரிக்காவெங்கிலும் பயணம் செய்தது. 1988 வசந்த காலத்தில் இங்கிலாந்தின், லெய்செஸ்டெர்ஷைரில் உள்ள கேஸில் டோனிங்டனில் நடக்கும் மான்ஸ்டர்ஸ் ஆஃப் ராக் விழாவுக்கு இக்குழு அழைக்கப் பெற்றது. அங்கே அவர்கள் KISS மற்றும் அயர்ன் மெய்டன் போன்ற குழுக்கள் உடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர். கன்ஸ் அன்’ ரோஸஸ் நிகழ்ச்சி துவங்குகையில் 100,000 பேர் இருந்த அந்த கூட்டம் உற்சாகமாய் துள்ளிக் கொண்டு முன்வந்தது. மேடைக்கு அருகில் வராதீர்கள் என ரோஸ் கேட்டுக்கொண்டும் இரண்டு ரசிகர்கள் கூட்டத்தில் நசுங்கி இறந்து போனார்கள். ஊடகங்கள் இந்த இசைக்குழுவையே குற்றம் சாட்டின. கூட்ட சூழ்நிலை அபாயகரமாக இருந்த நிலையிலும் இசைக்குழு தொடர்ந்து இசைத்துக் கொண்டிருந்ததாக அவை குற்றம் சாட்டின. உண்மையில் அந்த இடத்திற்கான பாதுகாப்பு தலைமை அதிகாரி தாக்கல் செய்த டோனிங்டன் சம்பவ இறுதி அறிக்கையில், ரசிகர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் அளவு குறித்து இசைக்குழுவிற்கு தெரிந்திருக்கவில்லை என்றும், தாங்கள் நிகழ்ச்சியை நிறுத்தக் கூறியபோது அவர்கள் உடனடியாக நிறுத்தி விட்டதாகவும், அத்துடன் கூட்டத்தை அமைதிப்படுத்துவதற்கும் அவர்கள் உதவினர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.[19] ஆயினும், அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் சுற்றுப்பயணத்தின் போது நிகழ்ந்த இது போன்ற நிகழ்ச்சிகள் இந்த குழுவுக்கு ”உலகின் அபாயமான இசைக்குழு” எனப் பெயர் சம்பாதித்துக் கொடுத்தது. அத்துடன் இசைக் குழு உறுப்பினர்களின் நடத்தையும் ஊடகங்களின் வெறுப்பை சம்பாதித்தது. டஃப், ஸ்லாஷ், இஸி மற்றும் அட்லர் பெரும்பாலும் மேடையிலும் வெளியிலும் தள்ளாடிய வண்ணம் இருந்தனர்.[20] இந்த குழுவின் அடுத்த வெளியீடு G N' R லைஸ் 1988 ஆம் ஆண்டில் வந்தது. இது பில்போர்டு இசை வரிசைகளில் இரண்டாமிடத்தைப் பிடித்தது. இந்த ஆல்பத்தின் ஒரு பக்கத்தில் லிவ் ?! @ லைக் எ சூஸைட் பதிவுகளின் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன, இன்னொரு பக்கத்தில் நான்கு இசையொலி பாடல்கள் இடம்பெற்றிருந்தன. “ஒன் இன் மில்லியன்” பாடல் ”நீக்ரோ” ”மரக்கட்டை” உள்பட்ட ஏராளமான அவதூறு ஆபாச வார்த்தைகளைக் கொண்டிருந்ததை அடுத்து சர்ச்சை கிளம்பியது. விமர்சகர்கள் இசைக்குழு மீது, குறிப்பாக ஆக்ஸில் ரோஸ் மீது, இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு வெறி ஆகிய குற்றச்சாட்டுகளை கூறினர்.[21] இந்த கூற்றுகள் எல்லாம் ஆதாரமற்றவை என்றும், ஸ்லாஷே பாதி கறுப்பர் தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ரோஸ் இதற்கு பதிலளித்தார் (எம்டிவி உடனான 1990 ஆம் ஆண்டு பேட்டியில்). இந்த வார்த்தைகள் எல்லாம் கதைமாந்தரினுடையதே அன்றி தன்னுடைய சொந்த கூற்று அல்ல என்றும், சமூகத்தில் இருக்கும் இத்தகைய இனவெறி மற்றும் அநீதியான பிரச்சினைகளை பாடல்வரிகள் பிரதிபலித்தனவே அன்றி அவற்றை ஊக்கப்படுத்தவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஃபிரெடி மெர்குரி மற்றும் எல்டான் ஜான் போன்ற ஓரினச்சேர்க்கை/இருபால் உறவு விருப்பமுடைய பாடகர்கள் தனக்கு முன்மாதிரியாய் இருந்திருப்பதை ரோஸ் எடுத்துக் கூறினார். அனைவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவராய் இருக்கும் மெட்டல் இசைக்குழுவான பாடி கவுண்ட் உடன் இணைந்து இக்குழு இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறது. அக்குழுவின் முன்னணி பாடகர் ஐஸ் டி தனது தி ஐஸ் ஒபினியன் புத்தகத்தில் எழுதும்போது ஆக்ஸிலும் ”தன்னைப் போலவே ஊடகத்திற்கு பலியானவர்” தான் என்று எழுதினார்.[22] G N' R லைஸ் வெளியான பின்பும் கூட, அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் ஆல்பம் 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளின் எஞ்சிய காலம் முழுமைக்கும் தொடர்ந்து பிரபலமாய் இருந்தது. இதன்மூலம் தேசிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 1990 அமெரிக்கன் இசை விருதுகள் விழாவில் விருப்பமான ஹெவி மெட்டல் கலைஞர் மற்றும் விருப்பமான ஹெவி மெட்டல் ஆல்பம் (அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் ) ஆகிய இரண்டு விருதுகள் இவர்களுக்குக் கிட்டின. இந்த நிகழ்ச்சியிலும் ஸ்லாஷ் மற்றும் மெக்காகன் தள்ளாடிக் கொண்டு வந்ததை காண முடிந்தது. தொடர்ந்து அவர்கள் கனமான போதை மருந்து பயன்பாட்டுக்கு ஆட்பட்டிருந்தால் தான் அக்குழுவைக் கலைத்து விடப் போவதாக ரோஸ் எச்சரித்ததை அடுத்து உறுப்பினர்கள் கடைசியில் தங்களது அடிமைப்பழக்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தனர். அவர் இதனை பொதுஇடங்களிலும் கூட குறிப்பிட்டுக் கூறினார். 1989 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் மெமோரியல் கோலிஸியத்தில் நடந்த ரோலிங் ஸ்டோன்ஸ் திறப்புவிழா நிகழ்ச்சியில் பேசிய அவர், குழுவின் சில உறுப்பினர்கள் தங்களது பழக்கத்தை நிறுத்தா விட்டால், கன்ஸ் அன்’ ரோஸஸ் கதை முடிந்தது என்றார். அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது ஸ்லாஷ் மற்றும் அட்லர் ஆகியோரைத் தான்.[23] புகழும் அதிர்ஷ்டமும் (1990-1993)யூஸ் யுவர் இல்லுஷன்1990 ஆம் ஆண்டில், தங்களது மிக லட்சியமான வேலைக்கான இசைப்பதிவைத் துவக்க கன்ஸ் அன்’ ரோஸஸ் ஸ்டுடியோவிற்குத் திரும்பினர். “சிவில் வார்” பாடல்பதிவு அமர்வின் போது, கோகேயின் மற்றும் ஹெராயின் பழக்கத்துடன் போராடிக் கொண்டிருந்த டிரம் கலைஞர் ஸ்டீவன் அட்லர் சரியாக வாசிக்க முடியவில்லை. அவரது சிக்கல்களால் ஏறக்குறைய 30 திருப்தி தரா பதிவுகள் சென்றது.[24] இதனால் 1990 ஜூலையில் அட்லர் குழுவில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கல்ட் அணியின் முன்னாள் டிரம் கலைஞர் மாட் சோரம் அமர்த்தப்பட்டார். இவர் தான் குழுவைக் காப்பாற்றியதாக ஆக்ஸில் ரோஸ் குறிப்பிடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன்னதாக, கீபோர்டு கலைஞர் டிஸி ரீட் முழு நேர உறுப்பினராகி குழுவின் ஆறாவது உறுப்பினராகி இருந்தார். 1991 மே மாதத்தில் மேலாளர் ஆலன் நிவென் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டோக் கோல்ட்ஸ்டீன் அமர்த்தப்பட்டார். நிவென் மாற்றப்படும் வரை தன்னால் ஆல்பங்களை நிறைவு செய்து தர முடியாது என்று கூறி அவரது நீக்கத்தை ரோஸ் தான் நிர்ப்பந்தித்தார் (இசைக்குழுவின் மற்ற சில உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு மாறாக) என்று ரோலிங் ஸ்டோன் இதழில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தலையங்க கட்டுரை குறிப்பிட்டது.[25] இரண்டு ஆல்பங்களுக்குத் தேவையான இசை சேர்ந்ததும், யூஸ் யுவர் இல்லுஷன் I மற்றும் யூஸ் யுவர் இல்லுஷன் II ஆகிய இரண்டு ஆல்பங்களை இக்குழு செப்டம்பர் 17, 1991 அன்று வெளியிட்டது. இந்த தந்திரம் நன்கு வேலை செய்தது. பில்போர்டு வரிசைகளில் முறையே இரண்டாமிட மற்றும் முதலிடத்தில் இந்த ஆல்பங்கள் இடம்பெற்றன. இன்று வரை இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மற்றும் ஒரே இசைக்குழுவாக இக்குழுவே இருந்து வருகிறது. இந்த ஆல்பங்கள் வரிசையில் 108 வாரங்கள் இருந்தன. யூஸ் யுவர் இல்லுஷன் ஆல்பங்களுடன் ”டோண்ட் க்ரை”, ”நவம்பர் ரெயின்” மற்றும் “எஸ்ட்ரேஞ்ச்டு” உள்ளிட்ட பல வீடியோக்களை கன்ஸ் அன்’ ரோஸஸ் சேர்த்து வழங்கியது. இவை இதுவரை தயாரிக்கப்பட்டனவற்றுள் மிகவும் செலவு வைத்த இசை வீடியோக்களில் சிலவாகும். வெற்றி பெற்ற பாலட்டான “நவம்பர் ரெயின்” (அமெரிக்க மூன்றாமிடம்) எம்டிவியில் மிகவும் அதிகம் வேண்டி ஒளிபரப்பான பாடலாகும். இறுதியில் சிறந்த ஒளிப்பதிவுக்கான 1992 ஆம் ஆண்டு எம்டிவி வீடியோ இசை விருதினை இப்பாடல் வென்றது. அத்துடன் பாடல் வரிசை வரலாற்றில் தலைமை பத்தில் இடம்பிடித்த மிக நீளமான பாடலும் இதுவாகும், 8:58 நிமிடங்கள் இப்பாடல் காட்சி இருந்தது. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது, எல்டான் ஜான் பியானோவில் சேர்ந்து பங்கேற்க இக்குழு இந்த பாடலை இசைநிகழ்த்தியது. ஆல்பங்களின் வெளியீட்டுக்கு முன்பாகவும் பின்பாகவும் 28 மாத கால யூஸ் யுவர் இல்லுஷன் உலகச் சுற்றுப்பயணத்தில் கன்ஸ் அன்’ ரோஸஸ் இறங்கியது. நிதிரீதியான வெற்றிக்காகவும் நிகழ்ச்சிகளின் போது நடந்த பல சர்ச்சைகளாலும் இந்த சுற்றுப்பயணம் மிகுந்த பிரபலமுற்றது. இன்றுவரை ராக் வரலாற்றில் இது தான் மிக நீண்ட சுற்றுப்பயணமாய் இருக்கிறது. யூஸ் யுவர் இல்லுஷன் உலகச் சுற்றுப்பயணம்யூஸ் யுவர் இல்லுஷன் உலகச் சுற்றுப்பயணத்தில் தி காட்ஃபாதர் கருப்பொருளில் அமைந்த ஸ்லாஷின் தனி ஆவர்த்தன கிதார் இசையும், பிளாக் சபாத்தின் “இட்ஸ் ஆல்ரைட்” பாடலின் ஆக்ஸில் ரோஸின் பியானோ இசையாலான பிரதிப் பதிப்பு மற்றும் செவ்வியல் ராக் இசையுடன் முன்மாதிரியுடனான ”மூவ் டூ தி சிட்டி” பாடலின் நீட்டித்த கலவை ஆகியவை இடம்பெற்றிருந்தன. கலவை இசையில் ரோஸ் சுற்றுப்பயணத்தில் ஒன்றுசேர்ந்த இசைக்கலைஞர்களை இசை சங்கமிப்பை நிகழ்த்திக் காட்டினார்.[26] இந்த சுற்றுப்பயணத்தில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்கு நிகரான எதிர்மறையான அனுபவமும் கிட்டின. கூட்டமோதல்கள், தாமதமான துவக்கங்கள் மற்றும் ரோஸின் அதிகப்படியான வார்த்தை ஆவேசங்கள் ஆகியவை ஊடகங்களில் விமர்சிக்கப் பெற்றன. முந்தைய போதை மருந்து மற்றும் மது சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் கட்டுப்பாட்டில் இருப்பதாய் தோன்றினாலும், சரியில்லாத பாதுகாப்பு, ஒலிப் பிரச்சினைகள் மற்றும் நிகழ்ச்சிகளை தேவையில்லாமல் சிலர் படம்பிடிப்பது அல்லது பதிவு செய்வது ஆகியவற்றால் ஆக்ஸில் பல சமயங்களில் கோபமுற நேர்ந்தது. பாடல்களுக்கு இடையே அரசியல் பேசுவது அல்லது இசை விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களுடன் மோதுபவர்களுக்கு பதிலடி கொடுப்பது ஆகியவற்றையும் அவர் மேற்கொண்டார். 1991 ஜூலை 2 ஆம் தேதியன்று, மிசௌரி மாநிலத்தின் மேரிலாண்ட் ஹைட்ஸில் உள்ள ரிவர்போர்ட் ஆம்பிதியேட்டர் அரங்கத்தில் செயிண்ட் லூயிஸ்க்கு சற்று வெளியே ”ராக்கெட் குவீன்” நிகழ்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரோஸ் சட்டென்று ரசிகர்களுக்குள் குதித்து நிகழ்ச்சியை படம்பிடித்துக் கொண்டிருந்த ஒரு ரசிகருடன் மோதலில் இறங்கினார். காரசாரமான வாக்குவாதத்திற்குப் பிறகு அவரை உடல்ரீதியாகவும் தாக்கினார். குழு உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து ரோஸை இழுத்து வந்த போது ரோஸ், “நல்லது, மோசமான பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக, நான் வீட்டிற்குப் போகிறேன்!” என்று கூறி விட்டு மைக்கை தரையில் வீசி விட்டு மேடையை விட்டு கோபமாய் வெளியேறி விட்டார். கோபமடைந்த கூட்டத்தினர் கலகம் செய்யத் துவங்கியதில் நிறைய பேர் காயமுற்றனர். குழுவின் மொத்த சுற்றுப்பயணத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டிருந்த ராபர்ட் ஜான் மூலம் இவை படம் பிடிக்கப்பட்டிருந்தன. கலகத்தைத் தூண்டியதாக ரோஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதற்கு இக்குழு வெளிநாடு சென்று விட்டதால் ஏறக்குறைய ஒரு வருட காலம் வரை போலிசாரால் ரோஸை கைது செய்ய முடியாமல் போனது. ரோஸ்க்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் அவர் நேரடியாக கலகத்தை தூண்டவில்லை என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார். கன்ஸ் அன்’ ரோஸஸ் பாதுகாப்புக் குழுவினர் கேமராவை அகற்றுவதற்கு அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் நான்கு முறை தனித்தனியே கோரிக்கை வைத்தனர் என்றும், நான்கும் உதாசீனப்படுத்தப்பட்டன என்றும் ரோஸ் தெரிவித்தார். அத்துடன் குழுவின் மற்ற உறுப்பினர்கள் மீது அந்த பகுதியில் இருந்த ரசிகர்களில் சிலர் பாட்டில்களை வீசியெறிந்தனர் என்றும் அத்துடன் அப்பகுதியில் குடி வரம்பும் அமலாக்கப்பட மறுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.[27] இதனையடுத்து யூஸ் யுவர் இல்லுஷனின் கலைவேலையில், ஆல்பத்தின் நன்றி தெரிவிக்கும் பிரிவில் செயிண்ட் லூயிஸின் மீது வெறுப்புமிழும் ஒரு வாசகம் இடம்பெற்றிருந்தது. அதன்பின் ஜெர்மனியில்[28] நடந்த ஒரு கச்சேரியில் ஏறக்குறைய இன்னொரு செயிண்ட் லூயிஸ் மாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தாள கிதார் கலைஞர் இஸி ஸ்ட்ராட்லின் திடீரென இசைக்குழுவில் இருந்து விலகினார். ரோஸின் தனிப்பட்ட நடத்தை (அவர் ஒவ்வொரு தடவையும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தி விடுவார்) மற்றும் இசைக்குழுவை அவர் தவறாக நிர்வகிப்பது[28] மற்றும் ஸ்லாஷ், சோரம் மற்றும் மெக்காகன் ஆகியோரைச் சுற்றிய பிரச்சினைகளை அவர் காரணமாகத் தெரிவித்தார்.[29] ஆக்ஸில் ரோஸ் ஆரம்பத்தில் ஜேன்’ஸ் அடிக்ஷன் குழுவின் கிதார் கலைஞரான டேவ் நவரோ தான் ஸ்ட்ராட்லினுக்குப் பதிலாய் இடம்பெற விரும்பினார். ஆனால் இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கிதார் கலைஞரான கில்பி கிளார்க் தான் ஸ்ட்ராட்லினுக்குப் பதிலாய் அமர்த்தப்பட்டார். இவரைத் தான் குழுவைக் காப்பாற்றியதாய் ஸ்லாஷ் குறிப்பிட்டார். சுற்றுப்பயணத்தின் பல நிகழ்ச்சிகளில், ரோஸ் கிளார்க்கை அறிமுகப்படுத்தி அவரை “ஒயில்டு ஹார்சஸ்” இசைக்குபடி சொல்வார். 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரோஸ் பயணத்திற்கான ஒரு இசைக்கலைஞர்களின் சேர்க்கையை குழுவில் சேர்த்துக் கொண்டார். இதில் பல்வேறு பின்னணி குரல் வழங்குவோரும் இடம்பெற்றிருந்தனர். இசைக்குழுவின் மற்றவர்களின் எதிர்ப்பையும் தாண்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. 1992 ஆம் ஆண்டில், ஃப்ரெடி மெர்குரி ட்ரைப்யூட் கச்சேரி யில் இக்குழு பங்கேற்று இரண்டு பாடல்களுக்கு இசை நிகழ்த்தியது. பின்னர் ஸ்லாஷ் குவீன் குழுவின் எஞ்சிய உறுப்பினர்கள் மற்றும் டெஃப் லெபார்டு பாடகர் ஜோ எலியட் உடன் இணைந்து “டை யுவர் மதர் டவுன்” பாடலை நிகழ்த்தினார். ”வீ வில் ராக் யூ” பாடலை நிகழ்த்திய ஜான் “போமியன் ரேப்சோடி”யில் எல்டான் ஜான் உடன் டூயட் பாடினார். அவர்களின் தனிப்பட்ட தொகுப்பில் “பாரடைஸ் சிட்டி” பாடலும் “நாக்கிங் ஆன் ஹெவன்’ஸ் டோர்” பாடலும் இடம்பெற்றிருந்தன. யூஸ் யுவர் இல்லுஷன் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டத்திற்காக அவர்கள் அமெரிக்கா திரும்பிய சமயத்தில், குவீன் கிதார் கலைஞர் ப்ரையன் மே நிகழ்ச்சிகளை கோஸி போவெல்லை டிரம்களில் சேர்த்திருந்த ஒரு குழுவுடன் நிகழ்ச்சிகளைத் துவக்கினார். கிரஞ்ச் ராக் குழுவான நிர்வாணா குழு தான் தங்களது யூஸ் யுவர் இல்லுஷன் சுற்றுப்பயணத்தில் திறக்க வேண்டும் என்று ஆக்ஸில் ரோஸ் விரும்பியிருந்தார், ஆனால் முன்னணி கலைஞர் குர்ட் கோபெயின் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அத்துடன் கன்ஸ் அன்’ ரோஸஸ் குறித்து சில எதிர்மறையான கருத்துகளையும் அவர் செய்தார். இதில் கோபமுற்ற ரோஸ் தனது இசைக்குழு உறுப்பினர்களுடன் அல்லாத இன்னொரு சண்டையைத் துவக்கினார். அந்த வருடத்தின் பிற்பகுதியில் அவர்கள் அமெரிக்க மெட்டல் இசைக்குழுவான மெட்டாலிகா உடன் இணைந்து மினி-GNR-மெட்டாலிகா ஸ்டேடிய சுற்றுப்பயணத்தில் இறங்கினர். 1992 ஆகஸ்டில் மாண்ட்ரியலின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, மெட்டாலிகாவின் முன்மனிதர் ஜேம்ஸ் ஹெட்ஃபீல்டு நெருப்பு சாகச வெடிப்பில் மிக நெருங்கி சென்று விட்டதால் அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு விட்டன. இதனையடுத்து நிகழ்ச்சியின் இரண்டாவது மணி நேரத்தை ரத்து செய்யும் நிர்ப்பந்தம் மெட்டாலிக்கா குழுவுக்கு ஏற்பட்டது. ஆனால் இன்னொரு நிகழ்ச்சிக்காக தாங்கள் நகருக்கு திரும்புவதாக அவர்கள் வாக்குறுதியளித்தனர். அதன்பின் ரசிகர்கள் எல்லாம் பொறுமையிழக்கத் துவங்கி, வெகு தாமதத்திற்குப் பிறகு கன்ஸ் அன்’ ரோஸஸ் மேடை ஏறியது. ஆயினும் செட்டுகளுக்கு இடையிலான இந்த குறைந்தபட்ச காலம் மேடையில் பார்வைத்திரைகளை எல்லாம் போதுமான அளவுக்கு சரியாக அமைக்க இடம் கொடுக்காமல் போனது. இதனால் இசைக்கலைஞர்களுக்கு தங்கள் சத்தத்தையே கேட்க முடியாமல் போனது. இத்துடன் சேர்த்து, ரோஸ் வேறு தனக்கு தொண்டை சரியில்லை[30] என்று கூறி விட்டதால், இக்குழு விரைவாக மேடையை விட்டு கிளம்ப நேரிட்டது. இந்த ரத்து ரசிகர்களிடையே இன்னொரு கலகத்திற்கு இட்டுச் சென்றது. செயிண்ட் லூயிஸில் ஒரு வருடத்திற்கு முன்னால் நிகழ்ந்த கலகத்தை நினைவுகூரும் விதமாக இந்த சம்பவம் இருந்தது. கலகக்காரர்கள் கார்களை கவிழ்த்துப் போட்டனர், சன்னல்களை நொறுக்கினர், உள்ளூர் கடைகளை சூறையாடி தீ வைத்தனர். உள்ளூர் அதிகாரிகளால் கூட்டத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. இதனை எ இயர் அண்ட் ஆஃப் இன் தி லைஃப் ஆஃப் மெட்டாலிக்கா வில் இருக்கும் ஒரு வீடியோவில் காண முடியும். மெட்டாலிகா குறித்த எம்டிவியின் ராக் ஆவணப்படத்தில் இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட அக்குழு என்ன செய்யக் கூடாது என்பதை தாங்கள் கன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவினரிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த வரலாற்று சுற்றுப்பயணம் அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் ஏரெஸில் ஜூலை 17, 1993 அன்று நிறைவுற்றது. இந்த சுற்றுப்பயணம் வருகைப் பதிவு சாதனைகளை செய்தது என்பதோடு 28 மாதங்கள் நீடித்திருந்தது. இதில் 192 நிகழ்ச்சிகள் செய்யப்பட்டிருந்தன. ஸ்லாஷ் மற்றும் மெக்காகன் ஆகிய ஆரம்ப உறுப்பினர்களுடன் புதிய வரவுகளான கிளார்க் மற்றும் சோரம் ஆகியோரும் இணைந்து ரோஸ் உடன் ஒரு நேரலை நிகழ்ச்சியை நடத்திய கடைசி முறையாக ப்யூனோஸ் ஏரெஸ் நிகழ்ச்சி அமைந்தது. சுற்றுப்பயணத்தின் முடிவில் யாரையும் கலந்தாலோசிக்காமல் கில்பே கிளார்க்கை நீக்கிய ஆக்ஸில் ரோஸ் அவர் “வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர் தான்” என்று காரணம் கூறினார்.[31] ”தி ஸ்பகெட்டி இன்சிடெண்ட்?”நவம்பர் 23, 1993 அன்று கன்ஸ் அன்’ ரோஸஸ் குழு ”தி ஸ்பகெட்டி இன்சிடெண்ட் ?” என்கிற தலைப்பில் பங்க் மற்றும் கிளாம் ராக் மாற்றுக்குரல் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டது. ரோஸின் இசைக்குழு சகாக்களின் எதிர்ப்பையும் மீறி, சார்லஸ் மேன்சன் பாடலான “லுக் அட் யுவர் கேம் கேர்ள்” பாடலின் விளம்பரப்படுத்தப்படாத மாற்றுக்குரல் பாடல் அவரது வேண்டுகோளின் பேரில் இந்த ஆல்பத்தில் சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், மேன்சன் மீதான தனது ஆர்வத்தை விமர்சகர்களும் ஊடகங்களும் தவறாகப் புரிந்து கொண்டதாய் கூறிய ரோஸ் தான் ஆல்பத்தின் புதிய வெளியீடுகளில் அந்த பாடலை நீக்கவிருப்பதாய் தெரிவித்தார். யூஸ் யுவர் இல்லுஷன் II ஆல்பத்தில் இருந்தான “எஸ்ட்ரேஞ்ச்டு” பாடலுக்கான வீடியோவில் ஆக்ஸில் ஒரு கருப்பு நிற மேன்சன் சட்டையை அணிந்திருப்பதைக் காணலாம். இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸில் 1993 ஆம் ஆண்டில் அவர்கள் செய்த ஒரு நிகழ்ச்சியின் காட்சிகளிலும் அவர் சிவப்பு நிற மேன்சன் சட்டையை அணிந்திருக்கக் காணலாம். சட்டையின் இந்த வகையின் பின்னால் ”சார்லி டோண்ட் சர்ஃப்” என்கிற கூடுதல் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. “லுக் அட் யுவர் கேம் கேர்ள்” இன்னும் ஆல்பத்தில் இருக்கிறது. தி ஸ்பகெட்டி இன்சிடெண்ட்? இல்லுஷன் ஆல்பங்களின் வெற்றிக்கு பொருத்தமில்லாமல் இருந்தது, குழுவிற்குள் இறுக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இடைஓய்வுக்காலம் (1994-1998)1994 முதல் 1996 வரையான காலத்தில், கன்ஸ் அன்’ ரோஸஸ் இசைக்குழுவின் உறுப்பினர்கள் அவ்வபோது புதிய பாடல்களை எழுதிப் பதிவு செய்யத் துவங்கியிருந்தனர் என்று அக்குழுவினருடனான பேட்டிகளில் இருந்து தெரிய வருகிறது. இவற்றில் அநேகமானவை ரோஸ் எழுதியவை என்று ஸ்லாஷ் தெரிவிக்கிறார்.[32] அந்த சமயத்தில் 10 அல்லது 12 பாடல்கள் கொண்ட ஒற்றை ஆல்பத்தை வெளியிட இக்குழு எண்ணம் கொண்டிருந்தது.[33] அந்த சமயத்தில் குழுவின் இசைப்பதிவு செயலிழந்து போயிருந்தது குறித்து ரோஸ் கூறுகையில், “ஆயினும் குழுவின் மொத்த ஒத்துழைப்பு இருந்தால் தான் சிறந்த பாடல்களை எழுத முடியும் . அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால் தான் அந்த விஷயங்கள் எல்லாம் கழிக்கப்பட்டு விட்டன. ”[34] ரோலிங் ஸ்டோன்ஸின் ”சிம்பதி ஃபார் தி டெவில்” ஆல்ப இசைப்பதிவுக்கான ஒரு மாற்றுக்குரல் இசைப்பதிவினை கன்ஸ் அன்’ ரோஸஸ் டிசம்பர் 1994 அன்று வெளியிட்டது. இந்த பாடல் இண்டர்வியூ வித் தி வாம்பயர் என்னும் திரைப்படத்தில் தோன்றியதோடு அப்படத்தின் இசைத்தடத்திலும் இடம்பெற்றது. அத்துடன் ஒரு சிங்கிளாக தனியாகவும் அது வெளியிடப் பெற்றது. ஸ்லாஷ் தலைமை கிதாரிலும், டஃப் மெக்காகன் பாஸ் கருவியிலும், மேட் சோரம் டிரம்களிலும் அமர்ந்திருக்க உருவான கன்ஸ் அன்’ ரோஸஸ் இறுதிப் பாடல் இதுவே. அத்துடன் இப்பாடலில் பால் ஹியூஜ் ஒத்திசைவுக் கிதாரில் இடம்பெற்றிருந்தார். இவரது பங்கேற்பு ரோஸ் மற்றும் ஸ்லாஷ் இடையே பெரும் இறுக்கத்தை உண்டுபண்ணியது. ஸ்லாஷுக்கு ஹியூஜை பிடிக்கவில்லை என்பதோடு அவர் GN'R குழுவில் இருக்க பொருத்தமற்றவர் எனக் கருதினார். ”சிம்பதி ஃபார் தி டெவில்” இசைப்பதிவு மற்றும் மற்ற விஷயங்களால் அதிகாரப்பூர்வமாக 1996 அக்டோபரில் ஸ்லாஷ் குழுவை விட்டு விலகினார். இவருக்குப் பதிலாக 1997 ஜனவரியில் நைன் இன்ச் நெய்ல்ஸ் கிதார் கலைஞர் ராபின் ஃபின்க் அமர்த்தப்பட்டார். 1997 ஆகஸ்டில் இரண்டு வருட கால ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டதை அடுத்து அவரும் குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினரானார். ஸ்லாஷ் விலகியதைத் தொடர்ந்து கொஞ்ச காலத்தில் 1997 ஏப்ரலில் மேட் சோரம் வெளியேற்றப்பட்டார். அதன்பின் பாஸ் கலைஞர் டஃப் மெக்காகன் 1997 ஆகஸ்டில் குழுவில் இருந்து விலகினார். இவ்வாறாக அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் இசைப்பதிவில் பங்குபெற்றவர்களில் ரோஸ் தவிர்த்த எல்லோரும் குழுவில் இருந்து விலகிச் சென்று விட்டிருந்தனர். உறுப்பினர்கள் (முன்னாள் மற்றும் இந்நாள்) விலகிச் சென்றது குறித்து பல்விதமான கருத்துகள் உள்ளன. கடைசியாக 1994 ஆம் ஆண்டில் தான் ரோஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோ, அல்லது 2001 ஆம் ஆண்டு வரை புதிய குழு உறுப்பினர்களுடன் அவர் கச்சேரி செய்ததோ நிகழ்ந்திருந்தது. 1994 ஆம் ஆண்டில் ரோஸ் செய்த ஒரே நிகழ்ச்சி ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் உடன் இணைந்து “கம் டுகெதர்” என்னும் தி பீட்டில்ஸ் குழு பாடலின் மாற்றுக் குரல் டூயட் பதிப்பை நிகழ்த்தியது தான். கன்ஸ் அன்’ ரோஸஸ் குழு உண்மையாக ஒருபோதும் உடைந்திருக்கவில்லை, ஏனெனில் புதிய உறுப்பினர்கள் பழைய உறுப்பினர்களின் இடத்தை நிரப்பினார்கள். (குழு உறுப்பினர்கள் மாற்றங்கள் குறித்து மேலும் விவரங்கள் அறிய “கன்ஸ் அன்’ ரோஸஸ் குழு உறுப்பினர்கள் பட்டியலை” காணவும் ). அபெடெட் குழுவில் பங்கேற்றவர்களில் கடைசியாக விலகியது பாஸ் கலைஞரான மெக்காகன். இவர் 1997 ஆகஸ்டில் விலகினார். இவருக்குப் பதிலாக அந்த வருடத்தின் பிற்பகுதியில் டாமி ஸ்டின்சன் (முதலில் தி ரீப்ளேஸ்மெண்ட்ஸ் குழுவில் இருந்தவர்) அமர்த்தப்பட்டார். சோரமுக்குப் பதிலாக 1997 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் மே வரையான கொஞ்ச காலத்திற்கு கிறிஸ் வ்ரென்னா அமர்த்தப்பட்டார். அதற்குப் பின் கொஞ்ச காலம் பாட் அமர்த்தப்பட்டார். இறுதியாக 1997 கோடையில் ஜோஸ் ஃப்ரீஸ் அமர்த்தப்பட்டார். 1998 ஆம் ஆண்டின் இறுதிக்குள், கன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவின் ஒரு புதிய குழு உருவாகியிருந்தது: பல இசைக் கலைஞர்கள் வந்தார்கள் போனார்கள் என்றாலும் மாறாதிருந்த குழுவில் ரோஸ், ஸ்டின்சன் மற்றும் கீபோர்டு கலைஞர் டிஸி ரீட் ஆகியோரும் அத்துடன் பல வாத்திய இசைக் கலைஞர் கிறிஸ் பிட்மேனும் இருந்தனர். சைனீஸ் டெமாக்ரசி (1999-2008)1999 ஆம் ஆண்டில் இந்த குழு “ஓ மை காட்” என்னும் ஒரு புதிய பாடலை வெளியிட்டது. இப்பாடல் எண்ட் ஆஃப் டேஸ் திரைப்படத்தின் ஒலித்தடத்தில் சேர்க்கப்பட்டது. டேவ் நவரோ மற்றும் ரோஸின் கிதார் ஆசிரியர் கேரி சன்ஷைன் ஆகியோரின் கிதார் வேலைகளும் இந்த தடத்தில் கூடுதலாய் சேர்க்கப்பட்டிருந்தன. சைனீஸ் டெமாக்ரசி என்கிற பெயரிலான தங்களது புதிய ஆல்பத்திற்கு முன்னோடியாகத் திகழும் நோக்கத்துடன் இந்த பாடல் வெளியீடு அமைந்தது. கெஃபெனும்Live Era: '87-'93 அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் மற்றும் யூஸ் யுவர் இல்லுஷன் சுற்றுப்பயணங்களின் சமயத்தில் பல்வேறு கச்சேரிகளில் செய்த நேரலை நிகழ்ச்சிகளின் ஒரு தொகுப்பை வெளியிட்டார். அத்துடன் 1999 ஆம் ஆண்டில் எம்டிவிக்காக குர்ட் லோடர் உடன் செய்த ஒரு நேர்காணலில், அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் ஆல்பத்தை புதிய குழுவைக் கொண்டு மறுபதிவு செய்திருப்பதாக ஆக்ஸில் ரோஸ் தெரிவித்தார். அத்துடன் இரண்டு பாடல்களை “பேஷன்ஸ்” மற்றும் “யூ குட் பீ மைன்” ஆகிய பாடல்களைக் கொண்டு இடம்பெயர்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.[35] ரோஸ் மட்டும் குழுவின் ஆரம்ப உறுப்பினராக எஞ்சியிருந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு முதலே சைனீஸ் டெமாக்ரசி தயாரிப்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு செய்தியறிக்கையின் படி, அந்த சமயத்தில் ஸ்டுடியோவில் 13 மில்லியன் டாலர்களை ரோஸ் செலவிட்டிருந்ததாய் கூறப்பட்டது.[36] 1999 ஆம் ஆண்டில் கிதார் கலைஞர் ராபின் ஃபிங்க் இக்குழுவில் இருந்து விலகி தனது முந்தைய குழுவான நைன் இன்ச் நெய்ல்ஸ் குழுவில் மீண்டும் இணைந்து கொண்டார். 2000வது ஆண்டில் பரிசோதனை கிதார் கலைஞர் பக்கெட்ஹெட் ஃபிங்குக்கு பதிலாக கன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவில் அமர்த்தப்பட்டார். டிரம் கலைஞர் ஜோஷ் ஃப்ரீஸ் ப்ரையன் மாண்டியா (முன்னாளில் ப்ரைமஸ்) கொண்டு மாற்றப்பட்டார். ராபின் ஃபிங்க் 2000வது ஆண்டின் பிற்பகுதியில் குழுவிற்குத் திரும்பி தலைமை கிதாரில் பக்கெட்ஹெட்டுக்கு துணை செய்தார். புதிய கன்ஸ் அன்’ ரோஸஸ்கன்ஸ் அன்’ ரோஸஸ் கச்சேரி நிகழ்ந்து எட்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இக்குழு 2001 ஜனவரியில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது. லாஸ் வேகாஸில் ஒரு கச்சேரியும், ரியோ டி ஜெனிரோவில் ராக் இன் ரியோ விழாவில் ஒரு கச்சேரியும் நிகழ்ந்தன. இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முந்தைய ஆல்பங்களில் இருந்தும் அத்துடன் வெளிவராது இருந்த சைனீஸ் டெமாக்ரசி யில் இருந்தும் குழு கலவையாய் பல பாடல்களை இசைத்துக் காட்டியது. ராக் இன் ரியோ மேடையில், குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்து ரோஸ் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்:
2001 இறுதியில் லாஸ் வேகாஸில் அவர்கள் மேலும் இரண்டு நிகழ்ச்சிகள் செய்தனர். 2002 ஆம் ஆண்டில் ஒத்திசைவு கிதார் கலைஞர் பால் டோபியாஸ் சாலையிலேயே வாழ்க்கை செல்வதில் வெறுப்புற்று குழுவை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக ரிச்சர்டு ஃபோர்டஸ் (முன்னர் தி சைகெடெலிக் ஃபர்ஸ் மற்றும் லவ் ஸ்பிட் லவ்) அமர்த்தப்பட்டார். அதன்பின் 2002 ஆகஸ்டில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் இக்குழு இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியது. செப்டம்பரில் எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் நிகழ்ச்சியில் ஆச்சரியமளிக்கும் வகையில் தோன்றுவதற்காக அவர்கள் நியூயார்க் திரும்பினர். 2002 ஆம் ஆண்டில், சைனீஸ் டெமாக்ரசி க்கு ஆதரவாக CKY மற்றும் மிக்ஸ் மாஸ்டர் மைக் ஆதரவுடன் 1993 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய முதல் வட அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு இக்குழு ஏற்பாடு செய்தது. ஆனாலும் வான்கோவரில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு ரோஸ் வந்து சேராததை அடுத்து (லாஸ் ஏஞ்சல்ஸிலேயே இருந்து விட்டார்) நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, இதனையடுத்து ஒரு கலவரம் உருவானது. இந்த சுற்றுப்பயணத்தில் கலவையான முடிவுகள் கிட்டின. சில கச்சேரிகள் நன்றாய் விற்பனையாகவில்லை, அதே சமயத்தில் நியூயார்க் போன்ற பெரிய சந்தைகளில் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. பிலடெல்பியாவில் மீண்டும் குழு வந்து சேராததால் ரசிகர்கள் இன்னொரு கலவரத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து சுற்றுப்பயணத்தின் எஞ்சிய காலத்திற்கு சுற்றுப்பயணத்திற்கு அளித்து வந்த விளம்பரத்தை க்ளியர் சானல் ரத்து செய்து விட்டது. 2004 மே மாதத்தில் ராக் இன் ரியோ IV நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டிருந்த இசைக்கச்சேரி காலம் வரை இக்குழு தற்காலிக ஓய்வில் சென்று விட்டது. ஆயினும் அந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் பக்கெட்ஹெட் குழுவை விட்டு விலகியதால், அதனையும் குழு ரத்து செய்து விட்டது. அத்துடன் பத்து வருடங்களுக்கும் அதிகமான காலத்தில் ஒரு புதிய ஸ்டுடியோ ஆல்பத்தைக் கொண்டுவர ரோஸ் தவறியிருந்ததால், 2004 மார்ச் மாதத்தில் கெஃபென் கன்ஸ் அன்’ ரோஸஸ் கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பத்தின் தட பட்டியல் தனது சம்மதமின்றி உருவாக்கப்பட்டிருப்பதாக தனது அதிருப்தியை வெளியிட்ட ரோஸ் கெஃபென் மீது வழக்கு தொடுத்து அதன் வெளியீட்டை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அளவுக்கு சென்று விட்டார். ஆயினும் அந்த முயற்சி தோற்றது, அத்துடன் அந்த ஆல்பம் அமெரிக்காவில் மூன்று பிளாட்டினத்தை எட்டியது. 2008 பிப்ரவரியில், “பெட்டர்”, “கேட்சர் இன் தி ரை”, “ஐ.ஆர்.எஸ்”, மற்றும் “தேர் வாஸ் எ டைம்” ஆகிய பாடல்களின் காட்சிப் படைப்புகள் கன்ஸ் அன்’ ரோஸஸ் ரசிகர் இணையத் தளம் ஒன்றின் வழியாக இணையத்தில் கசிந்தன. இந்த பாடல்களுக்கான அனைத்து எம்பி3 கோப்புகள் மற்றும் பாடல் வரிகளுக்கான அனைத்து இணைப்புகளையும் இணையத் தளங்கள் மற்றும் இணைய மன்றங்களில் இருந்து அகற்ற இசைக்குழு நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. ஆயினும், வானொலி நிலையங்கள் “ஐ.ஆர்.எஸ்.” பாடலை தங்களது பாடல்பட்டியல்களில் சேர்க்கத் துவங்கின. அத்துடன் அந்த பாடல் உண்மையில் ரேடியோ & ரெக்கார்ட்ஸ் ஆக்டிவ் ராக் நேஷனல் ஏர்பிளே வரிசையில் 49வது இடத்தையும் பிடித்து விட்டது. இணையத்தில் கசிந்த ஒரு பாடல் இவ்வாறு இடம்பெற்றது இதுவே முதல் முறை. ![]() மே 5, 2006 அன்று ஃப்ரைடே நைட் ராக்ஸ் வித் எடி ட்ரங்க் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆக்ஸில் ரோஸ் (செபாஸ்டியன் பாக் உடன் நேர்காணல்) புதிய கன்ஸ் அன்’ ரோஸஸ் ஆல்பம் அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பின்னர் மே மாதத்தில் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை இக்குழு துவங்கியது. டவுன்லோட் ஃபெஸ்டிவல் மற்றும் ராக் இன் ரியோ - லிஸ்பன் ஆகியவற்றில் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுப்பயணத்திற்கு முந்தைய காலத்தில் நியூயார்க் நகரத்தின் ஹேமர்ஸ்டீன் பால்ரூம் அரங்கத்தில் நான்கு தயாரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கைவிடப்பட்ட 2002 சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இக்குழுவின் முதல் நேரலை நிகழ்ச்சி இச்சமயத்தில் தான் நடைபெற்றது. அத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் பக்கெட்ஹெட்டுக்கு பதிலாய் கிதார் கலைஞரும் இசைத் தொகுப்பாளருமான ரான் “பம்பிள்ஃபுட்” தால் அறிமுகம் பெற்றார். (இந்த “பம்பிள்ஃபுட்” என்கிற புனைபெயர் ஒரு பாக்டீரிய தொற்றின் பெயரில் இருந்து வந்ததாகும், இதன் பெயரை தனது மனைவியின் கால்நடை அறிவியல் தேர்வுகளுக்கு திறனாய்வு செய்த சமயத்தில் அவர் தெரிந்து கொண்டார்).[38] இந்த சுற்றுப்பயணத்தின் போது, இசைக்குழுவின் முன்னாள் சகாவான இஸி ஸ்ட்ராட்லின் மற்றும் ஸ்கிட்-ரோ குழுவின் முன்னாள் முன்மனிதர் செபாஸ்டியன் பாக் ஆகியோர் பல சமயங்களில் கவுரவத் தோற்றத்தில் பங்கேற்றனர். 2006 செப்டம்பரில் 2006 வட அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஐந்து தயாரிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த சுற்றுப்பயணம் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 24 அன்று மியாமியில் துவங்கியது. டிரம் கலைஞர் ப்ரையன் மாண்டியா தனக்கு குழந்தை பிறந்திருந்ததை அடுத்து தனது மனைவி மற்றும் குழந்தையைக் காண சென்று விட்டதால் அவரது இடத்தில் ஃபிராங்க் ஃபெரர் அமர்த்தப்பட்டார். இந்த சுற்றுப்பயணம் நிகழ்ந்த அதே சமயத்தில், 2006 அக்டோபரில் துவங்கவிருந்த ஹார்லே-டேவிட்சன் மோட்டார் வாகன இணைய விளம்பரத்தில் “பெட்டர்” பாடல் இடம்பெற்றது.[39] அதே மாதத்தில், இறுதி ஆல்பத்தை ஆண்டி வாலஸ் கலவை செய்ய இருப்பதாக கூறும் ஒரு கட்டுரையை ரோலிங் ஸ்டோன் வெளியிட்டது. குழுவின் மேலாளராக மெர்க் மெர்குரியாடிஸ் நீக்கப்பட்டிருப்பதாக ரசிகர்களுக்கான ஒரு பகிரங்க கடிதத்தை 2006 டிசம்பரில் ஆக்ஸில் ரோஸ் வெளியிட்டார். சைனீஸ் டெமாக்ரசி ஆல்பத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளில் கவனம் செலுத்தும் வகையில் வட அமெரிக்க சுற்றுப்பயணத்தின் கடைசி நான்கு தேதிகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆல்பம் குறித்து அறிவித்த நாள் முதல் ஆல்பம் வெளியாகும் தற்காலிக தேதியை அவர் அறிவித்தார்: மார்ச் 6, 2007. 2007 பிப்ரவரி 8 அன்று, கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடந்த ரோடியோ ட்ரைவ்’ஸ் வாக் ஆஃப் ஸ்டைல் நிகழ்ச்சியில் இரண்டு பாடல்களை இக்குழு இசைத்தது. நிகழ்ச்சியின் நிறைவில் கிறிஸ் பிட்மேன் பாஸ் இசைக்க, “நாக்கிங் ஆன் ஹெவன்’ஸ் டோர்” மற்றும் ”ஸ்வீட் சைல்ட் ஆஃப் மைன்” ஆகிய பாடல்களை அசத்தலாக இசைத்து இந்த நிகழ்ச்சியை குழு நிறைவு செய்தது. பிப்ரவரி 23, 2007 அன்று, சைனீஸ் டெமாக்ரசி ஆல்பத்தின் இசைப்பதிவு கட்டம் முடிவடைந்து விட்டதாகவும் இப்போது அக்குழு ஆல்பத்தின் கலவையில் ஈடுபட்டிருப்பதாகவும் டெல் ஜேம்ஸ் அறிவித்தார். ஆயினும், மார்ச் 6 அன்று ஆல்பம் வெளியாவது சாத்தியமல்ல என்பதை இந்த கூற்று உறுதிப்படுத்தியது. மீண்டுமொரு முறை வெளியீட்டு தேதி அறியாத நிலைக்கு ஆல்பம் சென்றது.[40] சமீபத்திய நிகழ்வுகள்மே 4, 2007 அன்று சைனீஸ் டெமாக்ரசி ஆல்பத்தில் இருந்து ”ஐ.ஆர்.எஸ்.”, “தி ப்ளூஸ்” மற்றும் தலைப்புப் பாடல் ஆகிய மேலும் மூன்று தடங்கள் கசிந்தன. இந்த மூன்று தடங்களுமே முன்னர் நேரலையாக இசைக்கப் பெற்றவை. கன்ஸ் அன்’ ரோஸஸ் குழு சைனீஸ் டெமாக்ரசி உலக சுற்றுப்பயணத்தின் 2007 கட்டத்தை மெக்ஸிகோவில் ஜூன் மாதம் துவக்கியது. அதனையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் பயண நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் அமைந்திருந்தன. “நைஸ் பாய்ஸ்” மற்றும் “டோண்ட் க்ரை” ஆகிய பாடல்கள் யூஸ் யுவர் இல்லுஷன் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு முதன்முறையாக இசைக்கப்பட்டன. அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் வெளியீட்டு தேதியின் இருபதாம் வருட நிறைவு நாளில் சுற்றுப்பயணம் ஒஸாகாவில் முடிந்தது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆக்ஸில் ரோஸ், ராபின் ஃபிங்க், ரான் தால் ஆகியோரும் கிதாருக்கு ரிச்சர்டு ஃபோர்டஸ் மற்றும் பாஸ் இசைக்கு டாமி ஸ்டின்சன், கீபோர்டுகளுக்கு டிஸி ரீட் மற்றும் கிறிஸ் பிட்மேன் மற்றும் டிரம் வாத்தியத்திற்கு ஃபிராங் ஃபெரர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றிருந்தனர். நவம்பர் 20, 2007 அன்று வெளியான ஏஞ்சல் டவுன் என்னும் செபஸ்டியான் பாக்கின் ஆல்பத்தில் மூன்று தடங்களில் ரோஸ் கவுரவத் தோற்றம் அளித்திருந்தார்.[41] சைனீஸ் டெமாக்ரசி ஆல்பத்தை இக்குழு 2008 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வெளியிட்டால் டாக்டர் பெப்பர் குளிர்பான கேன் ஒன்றினை குழுவின் முன்னாள் கிதார் கலைஞர்களான ஸ்லாஷ் மற்றும் பக்கெட்ஹெட் தவிர்த்து அமெரிக்காவில் அனைவருக்கும் இலவசமாய் வழங்குவதாக ஒரு திட்டத்தை மார்ச் 26, 2008 அன்று டாக்டர் பெப்பர் குளிர்பான நிறுவனம் அறிவித்தது. “பக்கெட்ஹெட்டின் சில நிகழ்ச்சிகள் எங்களது ஆல்பத்தில் இருப்பதால், டாக்டர் பெப்பரை நான் அவருடனும் பகிர்ந்து கொள்வேன்” என்று ரோஸ் கூறினார்.[42][43] நவம்பரில் GNR வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர் பெப்பர் நிறுவனத்தின் விளம்பரத் துறை துணைத்தலைவர், நவம்பர் 23, 2008 ஞாயிறு அன்று ஒரு 24 மணி நேர இலவச சோடா கூப்பன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அந்த நாள் முழுவதும் செர்வர் “கனமான எண்ணிக்கையை” கையாள வேண்டி வந்ததால், ஒருவரது இலவச கூப்பனுக்கு விவரங்களை சமர்ப்பிப்பதே சாத்தியமில்லாது போனது.[44] அடுத்த நாளான மார்ச் 27, 2008 அன்று, இர்விங் அஸாஃப் மற்றும் ஆண்டி கோல்ட் தலைமையில் ஒரு புதிய நிர்வாகக் குழு ஒப்பந்தத்தில் அமர்த்தப்பட்டிருப்பதாக இக்குழு அறிவித்தது.[45] ஏப்ரல் 5, 2008 அன்று நைன் இன்ச் நெய்ல்ஸ் இணையப் பக்கத்தில்[46] ராபின் ஃபிங்க் படம் வெளியிடப்பட்டு மேலே “மீண்டும் வருக!” என்கிற வாசகம் இருந்தது. இது ட்ரெண்ட் ரெஸ்னர் உடன் அவர் மீண்டும் இணைவது குறித்த ஊகங்களை எழுப்பியது. பின்னர், ஏப்ரல் 11, 2008 அன்று, மீண்டும் நைன் இன்ச் நெய்ல்ஸ் குழுவுடன் சேர்ந்து இசை செய்வதில் தனது மகிழ்ச்சியை ராபின் ஃபிங்க் வெளியிட்டார்.[47] ஏப்ரல் 20, 2008 அன்று கன்ஸ் அன்’ ரோஸஸ் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ராபின் ஃபிங்க் குறித்த சமீபத்திய செய்தி குறித்து தனது ஆச்சரியத்தை ஆக்ஸில் ரோஸ் வெளிப்படுத்தியிருந்தார். அதே சமயத்தில் சைனீஸ் டெமாக்ரசி வெளியீடு குறித்து இசைக்குழு அதன் நிர்வாகக் குழுவுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர் ரசிகர்களின் தொடர்ந்த ஒத்துழைப்புக்கு அவர்களுக்கு நன்றி கூறினார்.[48] சைனீஸ் டெமாக்ரசி யில் இருந்து வந்திருக்கக் கூடிய ஒன்பது தடங்கள் ஒரு இணையத்தளத்தில் ஜூன் 19, 2008 அன்று வெளியாயின. இசைக்குழுவின் நிறுவனத்திடம் இருந்து நிறுத்தி அகற்றக் கோரி கடிதம் வந்தவுடன் அவை உடனடியாக அகற்றப்பட்டன. கசிந்த தடங்களில் ஆறு முன்னரே வேறு வடிவத்தில் வெளிவந்திருந்தவை தான், மூன்று புதியவை. முன்னர் கேட்டிருந்த தடங்களை விடவும் கசிந்த தடங்கள் கூடுதல் விஷயம் பொதிந்தவையாய் இருந்தது.[49][50] வரவிருக்கும் சைனீஸ் டெமாக்ரசி ஆல்பத்தில் இருந்து “ஷேக்லர்’ஸ் ரிவெஞ்ச்” என்கிற ஒரு புதிய பாடல் தங்களது புதிய விளையாட்டான ராக் பேண்ட் 2 மூலம் வெளியாகவிருப்பதாக எம்டிவி கேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹார்மோனிக்ஸ் ஜூலை 14, 2008 அன்று அதிகாரப்பூர்வமாய் அறிவித்தது. அத்துடன் “சைனீஸ் டெமாக்ரசி” பாடலும் இசைக்குழுவின் இணையத்தளத்தில் ஓடச் செய்யப்பட்டது. ஆகஸ்டு மாதத்தின் பிற்பகுதியில், ஆல்ப வெளியீட்டு தேதி குறித்த குறித்த ஊகம் மீண்டும் கிளம்பியது. ரோலிங் ஸ்டோன்[51] மற்றும் பில்போர்டு[52] ஆகிய இரண்டு ஊடகங்களில் இருந்துமான தனித்தனியான தகவல்கள் நவம்பர் 25 வெளியீட்டுத் தேதியாக இருக்கும் என்றும் பெஸ்ட் பை ஒரே விநியோகஸ்தராய் இருக்கும் என்றும் தெரிவித்தன. இது இறுதியாக அக்டோபர் 22 அன்று உறுதி செய்யப்பட்டது. இசைக்குழு நிர்வாகம், பெஸ்ட் பை, மற்றும் இண்டர்ஸ்கோப் கெஃபென் ஏ&எம் ரெக்கார்ட்ஸ் இணைந்து ஒரு கூட்டு செய்திக் குறிப்பை அதிகாரப்பூர்வமாய் விநியோகித்தன. அதன்படி ஆல்பம் ஒரு பெஸ்ட் பை விற்பனையாக நவம்பர் 23 அன்று அமெரிக்காவில் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டது. சைனீஸ் டெமாக்ரசி ஆல்பம் அதிகாரப்பூர்வமாய் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்னதாக நவம்பர் 13, 2008 தினத்துக்குள், “சைனீஸ் டெமாக்ரசி ” சிங்கிள் கிரீஸ், நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் ஜெனரல் ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து விட்டது. இந்த நாடுகளில் முதலிட பாடலாகவும் முதலிட ராக் பாடலாகவும் ஜொலித்ததோடு, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஐட்யூன்ஸ் வரிசையின் முதலிட ராக் பாடலாகவும் ஆனது.[53] சைனீஸ் டெமாக்ரசி ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 22, 2008 அன்று வெளியானது. வட அமெரிக்காவில் நவம்பர் 23, 2008 அன்றும், இங்கிலாந்தில் நவம்பர் 24, 2008[51] அன்றும் வெளியானது. இக்குழுவின் ஆறாவது ஸ்டுடியோ ஆல்பமாகவும் 1993 ஆம் ஆண்டில் வெளிவந்த ”ஸ்பகெட்டி இன்சிடெண்ட்? ” ஆல்பத்திற்குப் பிந்தைய அவர்களது முதலாவது ஆல்பமாகவும் இது அமைந்தது. ஆரம்ப குழு உறுப்பினர்கள் மீண்டும் மறுஇணைவு காண்பதான எந்த வதந்திகளுக்கும் பில்போர்டின் ஜோனாதன் கோஹென் உடனான ஒரு பேட்டியில் (ஒன்பது ஆண்டுகளில் முதல்முறையாய்) ஆக்ஸில் ரோஸ் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தார்:
கன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவின் முன்னாள் தலைமை கிதார் கலைஞரான ஸ்லாஷ் உடன் மீண்டும் தான் மறுஇணைவு காண்பதற்கான எந்த வாய்ப்பும் முற்றிலுமாக இல்லை என்பதையும் அதே பேட்டியிலேயே ரோஸ் தெளிவுபடுத்தி விட்டார்:
ராபின் ஃபிங்குக்கான பதிலீடாக டிஜே ஆஷ்பா அமர்த்தப்படுவதாய் மார்ச்சில் அறிவிப்பு வந்தது. கன்ஸ் அன்’ ரோஸஸ் இணையத்தளத்தில் இருந்தான உண்மையான பதிவின் படி, “வரவிருக்கும் சுற்றுப்பயணத்திற்கான” புதிய சேர்க்கையாக அவர் இருப்பார் என அவர்கள் தெரிவித்தனர், ஆனால் அந்த வாக்கியத்தை பின்னால் அகற்றி விட்டனர். இது சுற்றுப்பயணம் குறித்த ஏராளமான வதந்திகளைக் கிளப்பியது. அந்த சுற்றுப்பயணம் பின்னர் நிகழ்ந்தது. அதற்கு சைனீஸ் டெமாக்ரசி உலக சுற்றுப்பயணம் 2009/2010 என பெயரிடப்பட்டது.[55] டிசம்பர் 10, 2009 அன்று ஆக்ஸில் ரோஸ் சுற்றுப்பயணத்தின் புதிய தேதிகளில் நிகழ்ச்சியைத் துவக்க தைவான் நாட்டின் தைபே நகருக்கு செல்வதற்காக LAX நிலையத்தில் விமானம் ஏறச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பாபராசியுடன் (பிரபலங்களைப் பின்தொடரும் கிசுகிசு பத்திரிகையாளர்) அவருக்கு மோதல் ஏற்பட்டது. அந்த பாபராசி ஆக்ஸிலின் விருந்தில் ஒரு பெண்மணியிடம் வம்பில் இறங்கியிருந்தார். அந்த மனிதரை ஆக்ஸில் தலையில் குத்தி கீழே தள்ளுவது படம்பிடிக்கப்பட்டிருந்தது. எந்த காவல்துறை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, ஆக்ஸில் விமானம் பிடித்து நிகழ்ச்சிக்கு பறந்து விட்டார்.[56] சைனீஸ் டெமாக்ரசி உலக சுற்றுப்பயணம் 2009/2010சைனீஸ் டெமாக்ரசி சுற்றுப்பயணம் 2001, 2002, 2006 மற்றும் 2007 வருடங்களிலான சுற்றுகளில் இடம்பெற்றிருந்தது. செப்டம்பர் 14, 2009 அன்று இக்குழு ஆசியாவில் 2007க்குப் பிந்தைய முதலாவதாக நான்கு நிகழ்ச்சிகளை அறிவித்தது. டிசம்பர் 11, 2009 அன்று கன்ஸ் அன்’ ரோஸஸ் இசைக்குழு தங்களது முதல் நிகழ்ச்சியை தைவான் நாட்டின் தைபே நகரில் நிகழ்த்தியது. சைனீஸ் டெமாக்ரசி யின் வெளியீட்டுக்குப் பிந்தைய இக்குழுவின் முதலாவது கச்சேரிகளை இது குறித்தது. முன்னணி பாடகர் ஆக்ஸில் ரோஸ் தொப்பி அணிந்து தனது பின்னப்படாத முடி பின்னால் இழுத்து விடப்பட்டிருக்க மேடையில் தோன்றினார். ஜூன் 2007 முதல் ஆக்ஸில் ரோஸின் முதல் கச்சேரியாகவும் இரண்டாவது பொதுத் தோற்றமாகவும் இது அமைந்தது. [57] டிசம்பர் 19, 2009 அன்று தங்களது மிக நீளமான கச்சேரியை டோக்கியோ டோமில் 3 மணி நேரம் 37 நிமிடங்கள் கன்ஸ் அன்’ ரோஸஸ் குழு நிகழ்த்தியது. இந்த இடத்தில் நிகழ்த்தப்பட்ட நீளமான கச்சேரிக்கான சாதனையையும் இது முறியடித்தது. சைனீஸ் டெமாக்ரசி ஆல்பத்தின் 14 பாடல்களில் இருந்து 13 பாடல்களும், முந்தைய ஆல்பங்களில் இருந்தான பாடல்களின் ஒரு வரிசை மற்றும் AC/DC மற்றும் டெட் பாய்ஸ் ஆகியவற்றில் இருந்தான மாற்றுக்குரல் பாடல்கள் ஆகியவை இதில் இடம்பெற்றன. ஆசிய சுற்றில் கடைசி நிகழ்ச்சியாக இது அமைந்தது.[58] ஜனவரி 13, 2010 அன்று இந்த சுற்றுப்பயணத்தின் கனடா நாட்டு சுற்று துவங்கியது. எம்டிஎஸ் மையத்தில் செய்யப்பட்ட நிகழ்ச்சி பொதுவாக நேர்மறை திறனாய்வுகளைப் பெற்றது. ரோலிங் ஸ்டோன் கூறியது:
ஜனவரி 16, 2010 அன்று பென்குரோத் சேடில்டோமில் கல்காரியில் 9,000 ரசிகர்கள் முன்னிலையில், பபுள்ஸ் என்று அழைக்கப்படும் மைக் ஸ்மித் குழுவில் இணைந்து கொண்டார், அவர்கள் “லிகர் & வோர்ஸ்” பாடலைப் பாடினர்.[60] ஜனவரி 19, 2010 அன்று இந்த குழு சாஸ்கடூனில் இருக்கும் கிரெடிட் யூனியன் மையத்தில் இசை நிகழ்த்தியது. 2007 ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக “பாரடைஸ் சிட்டி” கச்சேரி நிறைவில் பாடும் கூடுதல் பாடலாகப் பாடப்படாமல், அதற்கு முந்தைய பாடலாகப் பாடப்பட்டது. பிப்ரவரி 4, 2010 அன்று ஹேலிஃபேக்ஸ் மெட்ரோ செண்டரில், பபுள்ஸ் என்று அழைக்கப்படும் மைக் ஸ்மித், ஜான் டன்ஸ்வொர்த், ஜே.பி.ட்ரெம்ப்ளே, ராப் வெல்ஸ் மற்றும் ஜோனாதன் டாரென்ஸ் உள்ளிட்ட தனது மற்ற ட்ரெய்லர் பார்க் பாய்ஸ் குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து கச்சேரி நிறைவில் பாடும் கூடுதல் பாடலில் பங்கேற்று “லிகர் & வோர்ஸ்” பாடலில் மீண்டும் பங்கேற்றனர்.[61] இசைக்குழுவின் தற்போதைய தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தை ஆவணப்படுத்துவதற்கும் படங்கள் எடுப்பதற்கும் தன்னை ரோஸ் பணியமர்த்தியுள்ளதாக இசை வீடியோ இயக்குநர் டேல் ரெஸ்டெகினி அறிவித்தார். அட்ரீனலின் PR (ரேஜின் விளம்பர நிர்வாகிகள்) வெளியிட்ட பத்திரிகை குறிப்பின் படி, சைனீஸ் டெமாக்ரசி க்கு ஆதரவாய் அந்த வருடத்தின் பிற்பகுதியில் சில வீடியோக்களைத் தயாரிக்க ஆக்ஸில் விரும்புகிறார். “நவம்பர் ரெயின்” பாடலின் அதே பெரிய பிரம்மாண்டம் மற்றும் செவ்வியல் நடையுடன் அது இருக்க வெண்டும் என்று எதிர்பார்க்கிறார்.[62] மார்ச் 13, 2010 அன்று சா பௌலோவில் 40,000 ரசிகர்களுக்கு பலெஸ்ட்ரா இடாலியா மைதானத்தில் இந்த குழு இசை நிகழ்த்தியது. சைனீஸ் டெமாக்ரசி பாடிய சமயத்தில் ஒரு பாட்டில் ஆக்ஸில் ரோஸைத் தாக்கியது. ஒரு நிமிடம் பாடுவதை நிறுத்திய அவர் பின் கத்தினார்:
லிமாவில் மார்ச் 25 அன்று ஆரம்பத்திலேயே ஆக்ஸில் ரோஸ் ஒரு பாட்டிலால் தாக்கப்பட்டார். சா பௌலோவில் போலவே நிகழ்ச்சியை நிறுத்திய அவர், இங்கு கூட்டத்தை மிரட்டை ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தினார். ஆக்ஸில் கூறினார்:
அந்த சம்பவத்திற்குப் பிறகு எக்ஸ்பலாண்டா சர் டெல் எஸ்டடியோ மானுமெண்டல் அரங்கத்தில் 30,000 ரசிகர்களுக்கு அவர் தொடர்ந்து இசை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.[64] கன்ஸ் அன்’ ரோஸஸ் வெள்ளி இரவு ரீடிங் ஃபெஸ்டிவல் 2010 நிகழ்ச்சியில் தலைமை இசை ஆற்றி இரண்டு நாட்கள் கழித்து லீட்ஸ் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் நிறைவு இசையை வழங்கும்.[65] அடுத்த ஆல்பம்1999 ஆம் ஆண்டு எம்டிவியில் குர்ட் லோடருக்கு அளித்த தொலைபேசி வழி பேட்டியில், தானும் புதிய குழுவினரும் ஒரு இரட்டை ஆல்பத்திற்கு போதுமான விஷயங்களை பதிவு செய்திருப்பதாய் தெரிவித்தார். பிப்ரவரி 2006 இல் ரோலிங் ஸ்டோன் உடனான ஒரு வழக்கமான பேட்டியில், இந்த படைப்புகளில் 32 பாடல்களை குழு பதிவு செய்திருப்பதாய் கூறினார். 2008 டிசம்பரில் பல்வேறு ரசிகர் செய்திப் பலகைகளில் தோன்றி வருங்கால ஆல்பத்திற்கு யோசித்து வரும் பல்வேறு பெயர்களைப் பட்டியலிட்ட அவர், ஒரு பாடல் முன்னாள் குழு சகாவான இஸி ஸ்ட்ராட்லினால் இணைந்து எழுதப்படவிருப்பதாகவும் தெரிவித்தார். இசை பாணிகன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவினரின் இசை பங்க் ராக், ப்ளூஸ்-ராக், ஹெவி மெட்டல் மற்றும் செவ்வியல் ராக் அன் ரோல் ஆகியவற்றின் கலவை ஆகும்.[4][13] 1990களில், இந்த குழு தந்தி இசைக் கருவிகளை (ரோஸ் அல்லது ரீட் இசைப்பார், சுற்றுப்பயணங்களில் டெடி ஆண்ட்ரீடிஸ் உடனிசைப்பார்) குழுவில் சேர்த்தனர். யூஸ் யுவர் இல்லுஷன் சுற்றுப்பயணத்தின் ஏறக்குறைய பாதி சமயத்தில் மேடையில் ஒரு கொம்பு இசையையும் சேர்த்துக் கொண்டனர்.[13] சைனீஸ் டெமாக்ரசி காட்சிப் பதிவுகளில் ரீட் இருந்தார், குழு தங்களது புதிய பாடல்கள் சிலவற்றில் தொகுப்புற்ற கொம்பு இசைகளை பயன்படுத்தியிருந்தது என்ற போதிலும், 2000 ஆவது ஆண்டு முதலான சுற்றுப்பயணங்களில் காற்று இசைக்கருவிகள் சேர்க்கப்படவில்லை. பின்லாந்து குழுவான ஹனோய் ராக்ஸ் இக்குழுவின் இசைக்கும் பிம்பத்திற்கும் ஒரு பெரும் பாதிப்பை உருவாக்கியிருந்தது (பாடகர் மைக்கேல் மன்ரோவும் ரோஸும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பாடியுள்ளனர்).[13] குவீன்,[66] AC/DC,[5] தி ரோலிங் ஸ்டோன்ஸ்,[4] மற்றும் ரோஸ் டாட்டூ[5] ஆகிய குழுக்கள் தங்களது குழுவுக்கு பெரும் முன்மாதிரியாக அமைந்தன என்றும், அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் ஆல்ப ஒலிக்கான பாதிப்பு AC/DC, லெட் ஸெபெலின், ஏரோஸ்மித், தி நியூயார்க் டோல்ஸ் மற்றும் ஹனோய் ராக்ஸ்[67] ஆகிய குழுக்களில் இருந்து வந்தது என்றும் ரோஸ் கூறினார். விமர்சனமும் அங்கீகாரமும்துறையில் உள்ளே வந்த எட்டு மாதங்களுக்குள்ளாகவே கன்ஸ் அன்’ ரோஸஸ் ஒரு பெரும் நிறுவனத்துடன் ஒப்பந்தமானது என்பதோடு எம்டிவியின் பிந்தைய ஒளிபரப்பு நேரங்களைப் பிடித்து தேசிய விற்பனை வரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்தது. அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் தான் எல்லா காலத்தில் அதிகமாக விற்பனையான அறிமுக ஆல்பம் ஆகும்.[4] இசைத்துறையில் இவர்களது சக குழுக்கள் பல சமயங்களில் இவர்கள் குறித்து பெருமை பொங்க பேசியுள்ளனர். கன்ஸ் அன்’ ரோஸஸ் ”அடுத்த ரோலிங் ஸ்டோன்” என்று ஊஸி ஓஸ்போர்ன் தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டில் Q பத்திரிகை “நீங்கள் மரணிப்பதற்கு முன் காண வேண்டிய 50 இசைக்குழுக்கள்” பட்டியலில் கன்ஸ் அன்’ ரோஸஸ் பெயரைக் குறிப்பிட்டிருந்தது. விஎச்1 தொலைக்காட்சி வலைப்பின்னல் கன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவுக்கு “ஹார்டு ராக் வகையின் 100 மாபெரும் கலைஞர்கள்” சிறப்பு பட்டியலில் ஒன்பதாவது இடம் அளித்தது. அத்துடன் “தலைமை 50 இசைக்குழுக்கள்” வரிசையில் 11வது இடத்தையும் அளித்தது. ரோலிங் ஸ்டோன் இதழின் “அனைத்து காலத்திலுமான 500 மாபெரும் ஆல்பங்கள்” சிறப்பிதழ் வரிசையில் அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் இடம்பிடித்தது. 2004 ஆம் ஆண்டில் ரோலிங் ஸ்டோன் பத்திரிகை தனது “அனைத்து காலத்திற்குமான 100 மாபெரும் கலைஞர்கள்” பட்டியலில் கன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவிற்கு 92வது இடம் அளித்திருந்தது. ”வெல்கம் டூ தி ஜங்கிள்” பாடல் விஎச்1 சானலால் “சிறந்த ஹார்டு ராக் பாடல்” என தெரிவு செய்யப்பட்டது.[68] இந்த குழு விமர்சனங்களுக்கும் தப்பவில்லை.[3][4] குழுவின் சில உறுப்பினர்கள் ஆல்கஹால் மற்றும் மருந்து பழக்கத்திற்கு அடிமையானது, மற்றும் சார்லஸ் மேன்ஷன் டி-சர்ட்டுகளின் மீதான ஆக்ஸிலின் மோகம் ஆகியவை எல்லாம் ஊடகங்கள் கன்ஸ் அன்’ ரோஸஸ் குழுவை இளம் ரசிகர்களிடம் மோசமான உதாரணமாகவும் மற்றும் எதிர்மறை விளைவாகவும் சித்தரிக்க வகை செய்தன. ஆல்பங்களை வெளியிட இக்குழு எடுத்துக் கொண்ட நெடிய காலங்களும் கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்ததாய் இருந்தது (குழுவின் இரண்டாவது ஆல்பமான GN'R லைஸ் உண்மையில் ஒரு EP மற்றும் பழைய EP ஆகிய இரண்டின் தொகுப்பு ஆகும், அபெடைட் ஃபாட் டிஸ்ட்ரக்ஷன் ஆல்பத்தின் அடுத்ததாய் வருவதற்கு இதற்கு 1987 முதல் 1991 வரை காலம் பிடித்தது. சைனீஸ் டெமாக்ரசி யை வெளியிட இக்குழுவிற்கு 15 ஆண்டுகள் பிடித்தது). குழுவின் ஸ்தாபக உறுப்பினர்களில் மற்றவர்கள் விலகிய பின் முன்னணி கலைஞரான ஆக்ஸில் ரோஸ் விமர்சனம் சர்ச்சை இரண்டுக்கும் ஆதாரவளமாக ஆனார்.[3][4] தொடர்ந்து நழுவும் அவரது குணம் (உதாரணத்திற்கு அவர் 1994 ஆம் ஆண்டு முதல் செய்தியாளர் சந்திப்பு எதனையும் நடத்தவில்லை) அவர் இருதுருவ நோயால் அவதிப்படுவதாகக் கூறும் பல கதைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.[4] ஆரம்ப குழு பிரிந்ததற்கும், ஆரம்ப உறுப்பினர்கள் பிரிந்த பிறகும் இவர் தொடர்ந்து குழுவை நடத்துவதற்கும் இசை விமர்சகர்கள் இவர் மீது விமர்சனக் கணைகளைத் தொடுக்கின்றனர். குழு உறுப்பினர்கள் தொடர்ந்து மாற்றப்படுவது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவரது முன்கோப நடத்தையும் மற்றும் மிகச் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற அவரது குணமும் தான் தனிநபர் மோதல்களுக்கும் ஆல்பங்களுக்கு இடையிலான நெடிய இடைவெளிகளுக்கும் காரணமாய் அவர்கள் விமர்சித்தனர். இசைக்குழு உறுப்பினர்கள்
இசைசரிதம்
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்குறிப்புகள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia