டிசுக்கோக்சு
டிசுக்கோக்சு (Discogs, டிஸ்கோகிராபி என்பதன் சுருக்கம்) ஒலிப்பதிவுகளின் தகவல்களைக் குறித்த வலைத்தளமும் கூட்டவழி மூலம் பெறும் தரவுத்தளமும் ஆகும். இது வணிகமயமாக்கப்பட்டவை, மேலுயர்த்து வெளியீடுகள், வெளியிடப்படாத பாடல்கள், நிறுவனங்கள் வெளியிடாதவை என அனைத்து வகைகளையும் உள்ளிட்ட ஒலிப்பதிவுகளின் தகவல்களை ஒன்றுசேர்க்கிறது. டிசுக்கோக்சு வழங்கிகள், தற்போது discogs.com என்ற ஆள்களப் பெயரில் இயங்குகின்றது; இதன் உரிமையாளர் சிங்க் மீடியா நிறுவனமாகும். இவை ஐக்கிய அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரில் அமைந்துள்ளன. இந்த வலைத்தளம் அனைத்து வகை, அனைத்து வடிவ வெளியீடுகளையும் பட்டியல்படுத்துகிறது என்றாலும் மின்னணு இசை வெளியீடுகளின் தரவுத்தளமாக பெரிதும் அறியப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் வினைல் தட்டுக்களில் பதியப்பட்ட இசை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. டிசுக்கோக்சு தற்போது 9 மில்லியனுக்கும் கூடுதலான வெளியீடுகள், 5 மில்லியனுக்கும் கூடுதலான கலைஞர்கள், ஒரு மில்லியனுக்கும் கூடிய இசைநிறுவனங்கள் குறித தகவல்களை கிட்டத்தட்ட 400,000 பயனர்களின் கணக்குகள் மூலம் சேகரித்துள்ளது. [3][4] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia