கபு, கருநாடகம்
கபு (Kapu) கௌப் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கருநாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது தேசிய நெடுஞ்சாலை 17க்கு அருகில் உடுப்பிக்கும் மங்களூருக்கும் இடையில் உள்ளது. இங்கிருந்து ஒரு சாலை மஞ்சக்கல், சிரவா போன்ற இடங்களுக்கு செல்கிறது. இது கிருட்டிணர் கோயிலுக்கு புகழ் பெற்ற நகரமான உடுப்பிக்கு தெற்கே 13 கி.மீ தொலைவிலும், கருநாடகாவின் முக்கிய துறைமுக நகரமான மங்களூருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது கலங்கரை விளக்கமும் மூன்று மாரியம்மன் கோயில்களும், திப்பு சுல்தான் கட்டிய கோட்டைக்கும் புகழ் பெற்றது. கபுவை உடுப்பி மாவட்டத்தின் வட்டத்தில் ஒன்றாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கபு ஆங்கிலேயர்களால் கௌப் என அழைக்கப்பட்டது. அரேபிய கடலின் கரையில் ஒரு கடற்கரையும் ஒரு கலங்கரை விளக்கமும் இங்குள்ளது. இந்த இடத்தில் பல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. உடுப்பியில் உள்ள மென்மையான மால்பே கடற்கரையுடன் ஒப்பிடும்போது இங்கு கடல் மிகவும் கடுமையானதாகவும், அச்சுறுத்துவதாகவும் காணப்படுகிறது. பல்கலைக்கழக நகரமான மணிப்பாலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள இது மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு இடமாகும். கபு கலங்கரை விளக்கம்கபு கலங்கரை விளக்கம் 1901 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாலுமிகளுக்கு வழிகாட்டுகிறது. மேலும், ஆபத்தான பாறைகள் இருப்பதை எச்சரிக்கிறது. இது அடித்தளத்திலிருந்து 27.12 மீட்டர் உயரம் கொண்டது. பார்வையாளர்களுக்கு கலங்கரை விளக்கம் காலை 5:30 மணி முதல் காலை 6:30 மணி வரையிலும், மாலையில் 4:30 மணியிலிருந்து சூரியன் மறையும் வரையும் திறந்திருக்கும். ரூ .10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தளவாடங்கள்கபு [2] உடுப்பியிலிருந்து13 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. உடுப்பியில் இருந்து கபுவை அடைய கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஆகும். உடுப்பியிலிருந்து ஏராளமான பேருந்துகள் கபுவிற்கு செல்கின்றன. பெங்களூரிலிருந்து மங்களூருக்கு பேருந்தில் சென்று கபுவை அடையலாம். பின்னர் மங்களூரிலிருந்து உடுப்பிக்கு பேருந்தில் செல்லலாம். கபு கடற்கரைக்குச் செல்ல சிறந்த நேரம் சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம். இது பகலில் மிகவும் சூடாகிறது. மழைக்காலங்களில் பார்வையிட்டால் நல்லது. காலையில், கடற்கரை பொதுவாக காலியாக உள்ளது. எனவே பார்வையிட விரும்பத்தக்கது. குறிப்பிடத்தக்க நபர்கள்புகைப்படத் தொகுப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia