கயல் (திரைப்படம்)
கயல் (ⓘ) என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கிய இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர்களான சந்திரன், ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். 2014 திசம்பர் 24 அன்று வெளியான இத்திரைப்படம் 2004 ஆவது ஆண்டில் நடந்த ஆழிப்பேரலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1][2] நடிகர்கள்வெளியீடுஇத்திரைப்படம் 24, திசம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது. ஒலிப்பதிவு
டி. இமான் இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. பிரபு சாலமனின் முந்தைய வெற்றித் திரைப்படங்களான மைனா, கும்கி திரைப்படங்களுக்கும் இவரே இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் 2014 நவம்பர் 13 அன்று சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டன. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சிவ கார்த்திகேயன், ஆர்யா, அமலா பால், அஞ்சலி ஆகியோர் பங்கேற்றனர்.[3] பிரபு சாலமன் - டி. இமான் கூட்டணி மீண்டும் ஒருமுறை தமது வெற்றியை நிரூபித்து உள்ளது என பிகைன்ட்வுட்ஸ் பாராட்டியது.[4] அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் யுகபாரதி.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia