கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன் (ஆங்கிலம்: Karate R. Thiagarajan) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் கராத்தே பயிற்சியாளராவார். இவர் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார்.
அரசியல் வாழ்க்கைபெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி உறுப்பினராகத் தேர்வானார். நகரத்தந்தை பதவியிலிருந்து மு. க. ஸ்டாலின் விலகிய பின்னர் 2002 முதல் 2005 வரை பொறுப்பு நகரத்தந்தையாகப் பதவி வகித்தார்.[4][5] 2001 இல் கருணாநிதி கைதிற்குக் காரணமான மேம்பாலங்கள் கட்டுமான புகாருக்குப் பின்னணியாக இருந்தவர்.[6] 2005 இல் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆறு மாதக்கால தலைமறைவிற்குப் பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.[7][8] தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 27 ஜூன் 2019 இல் நீக்கப்பட்டார்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia