கரி ஆனந்தசங்கரி

கரி ஆனந்தசங்கரி
Gary Anandasangaree
நீதி அமைச்சர்,
கனடாவின் சட்டமா அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 14, 2025
பிரதமர்மார்க் கார்னி
முன்னையவர்ஆரிஃப் விரானி
முடிக்குரியோர்-பூர்வகுடியினர் உறவுகள், வடக்கு விவகாரங்ளுக்கான அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 20, 2024
பிரதமர்மார்க் கார்னி
ஜஸ்டின் துரூடோ
கனேடிய வடக்கு பொருளாதார மேம்பாட்டு முகமைக்குப் பொறுப்பான அமைச்சர்
பதவியில்
திசம்பர் 20, 2024 – மார்ச் 14, 2025
பிரதமர்ஜஸ்டின் துரூடோ
முடிக்குரியோர்-பூர்வகுடியினர் உறவுகள்
பதவியில்
சூலை 26, 2023 – திசம்பர் 20, 2024
பிரதமர்ஜஸ்டின் துரூடோ
கனடா நாடாளுமன்றத்தின் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 19, 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சத்தியசங்கரி ஆனந்தசங்கரி

அக்டோபர் 14 1973
யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம்கனடியர்
அரசியல் கட்சிலிபரல்
பெற்றோர்வீரசிங்கம் ஆனந்தசங்கரி
வாழிடம்மார்க்கம், ஒண்டாரியோ, கனடா[1]
முன்னாள் மாணவர்
தொழில்வழக்கறிஞர்

கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) என அழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சி உறுப்பினரும், மனித உரிமை வழக்கறிஞரும், கனடிய அமைச்சரும் ஆவார். இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[2] 2023 சூலை 26 முதல் இவர் முடிக்குரியோர்-பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சராகவும்,[3] 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.[4]

கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ. ஆனந்தசங்கரியின் இரண்டாவது மகன் ஆவார். இலங்கையில் பிறந்த இவர் தனது 10வது அகவையில் 1983 இல் தனது தாயாருடன் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார்.[5] ரொறன்ரோவில் உள்ள ஓஸ்குட் ஹால் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்று 2006 இல் பட்டம் பெற்றார். பின்னர் ரொறன்ரோவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[5] கனடிய லிபரல் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாதக் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.

குடும்பம்

கரி ஆனந்தசங்கரி ஹரிணி சிவலிங்கம் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பைரவி, சகானா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.[6]

விருதுகள்

கரி ஆனந்தசங்கரி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வைர விழா மற்றும் பொன் விழா விருதுகளைப் பெற்றிருக்கிறார்.[6]

மேற்கோள்கள்

  1. "Official Voting Results". Elections Canada. Archived from the original on April 24, 2020. Retrieved January 23, 2021.
  2. "Gary Anandasangaree wins Scarborough-Rouge Park for Liberals in landslide victory". 20 அக்டோபர் 2015. Retrieved 21 அக்டோபர் 2015.
  3. "Prime Minister announces changes to the Ministry". Prime Minister of Canada (in ஆங்கிலம்). 2023-07-26. Retrieved 2023-07-26.
  4. "Gary Anandasangaree appointed Canada's Minister of Justice". Tamil Guardian. 2025-03-14. Retrieved 2025-03-18.
  5. 5.0 5.1 டி. பி. எஸ். ஜெயராஜ் (20 அக்டோபர் 2015). "TULF Leader Sangaree's Lawyer son Gary Anandasangaree elected to Canadian Parliament as the Liberal Party MP of Scarborough – Rouge Park". Archived from the original on 2015-10-21. Retrieved 20 அக்டோபர் 2015.
  6. 6.0 6.1 "SCARBOROUGH AREA LIBERAL MPs & CANDIDATES ENDORSE JOHN TORY". 20 செப்டெம்பர் 2014. Archived from the original on 2015-08-30. Retrieved 21 அக்டோபர் 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya