கரீம்கஞ்சு
கரீம்கஞ்ச் (Karimganj ) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது வங்காளதேசத்தின் வடகிழக்கு எல்லைப்புறத்தில் அமைந்த இந்திய ஊராகும். இது கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 27 வார்டுகளும், 12,234 வீடுகளும் கொண்ட கரீம்கஞ்ச் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 56,854 ஆகும். அதில் 28,473 ஆண்கள் மற்றும் 28,381 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4946 (8.70%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 977 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.58% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 86.57%, முஸ்லீம்கள் 12.06%ன்ன் மற்றும் பிறர் 1.36% ஆகவுள்ளனர்.[2][3][4] கரீம்கஞ்ச் தொடருந்து ஒரு வழிப்பாதையில், டீசல் இயந்திரத்தால் இயக்கப்படும் தொடருந்துகள் கொண்டது. கரீம்கஞ்ச் தொடருந்து நிலையத்திலிருந்து அகர்தலா, சில்சார், பாதர்பூர், துல்லப்செரா, மைசாசென் போன்ற நகரகளுக்கு பயணியர் வண்டிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. [5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia