கரீம்கஞ்சு மாவட்டம்
கரீம்கஞ்சு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் கரீம்கஞ்ச் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 1809 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]இம்மாவட்டத்தின் பெயரை ஸ்ரீ பூமி மாவட்டம் என்று பெயர் மாற்றப்படும் என 19 நவம்பர் 2024 அன்று அசாம் முதல்வர் அறிவித்தார். [2][3] பொருளாதாரம்![]() இந்த மாவட்டத்தில் உழவுத் தொழிலே பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: கரீம்கஞ்சு, பதர்பூர், நிலம்பசார், பாதேர்கண்டி, ராமகிருஷ்ண நகர் போக்குவரத்துஇந்த மாவட்டத்தில் ரயில், சாலைவழிப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கரீம்கஞ்சு நகரில் ரயில் நிலையம் உள்ளது. கரீம்கஞ்சு நகரில் இருந்து குவகாத்திக்கு பேருந்துகள் செல்கின்றன. ஏனைய வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,217,002 மக்கள் வசித்தனர். [4] சதுர கிலோமீட்டருக்குள் 673 மக்கள் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [4] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [4] இங்கு வசிப்பவர்களில் 79.72% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4] முஸ்லீம்களும் இந்துக்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்புரி மொழியிலும் பேசுகின்றனர். மெய்தெய், குக்கி, திரிப்புரி, காசி ஆகிய பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia