கருங்காலிகருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன.
பயன்பாடுகள்இந்தக் கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலிப் பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகைகள் கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்ட பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றைய பலகைகள் பெறுவதில்லை. [1] உலகின் விலைமதிப்புள்ள மரங்களில் ஒன்றாக ஆப்பிரிக்க கருமரம் (African blackwood), சந்தன மரம், செந்தந்த மரம் (pink ivory), அகில் மரம் ஆகியவற்றின் வரிசையில் கருங்காலி திகழ்கிறது.[2][3] காட்சியகம்
இலங்கையில்இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் மிகவும் அரிதான அல்லது அழிந்துவரும் மரங்களில் இதுவும் ஒன்றாகும்.
|
Portal di Ensiklopedia Dunia