கருண் நாயர்
கருண் கலாதரன் நாயர் (Karun Kaladharan Nair (பிறப்பு: டிசம்பர் 6, 1991) இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் அவ்வப்போது வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளராகவும் உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியிலும் விளையாடியுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணிகளுக்காக விளையாடி வருகிறார். 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் 303 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் தனது முதல் தொடரில் முந்நூறு ஓட்டங்கள் அடித்த மூன்றாவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[1] உள்ளூர்ப் போட்டிகள்கருண் நாயர் 2013- 2014 ஆம் ஆண்டுகளுக்கான ரஞ்சிக் கோப்பையில் கருநாடக அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரை கருநாடக அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று நூறுகளை இவர் அடித்தார். இதில் இரண்டு நூறுகள் நாக் அவுட் போட்டிகளில் அடித்தது ஆகும். பின் 2014 -2015 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோபையிலும் இவர் விளையாடினார். இதில் 10 போட்டிகளில் விளையாடி 709 ஓட்டங்களை எடுத்தார். தமிழ்நாடு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 328 ஓட்டங்கள் அடித்து அணி கோப்பை வெல்வதற்கு உதவியாக இருந்தார். மேலும் ரஞ்சிக் கோப்பைகளில் மூன்றுநூறுகள் அடித்த இரண்டாவது வீரர் மற்றும் இறுதிப் போட்டியில் நூறுகள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் ரஞ்சிக் கோப்பைகளில் இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச போட்டிகள்தேர்வுத் துடுப்பாட்டம்நவம்பர் 26, 2016 ஆம் ஆண்டில் சண்டிகரில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியில் இவர் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.[2] இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில்நடைபெற்ற இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் 303* ஓட்டங்கள் எடுத்தார்.[3][4] இவரின் மூன்றாவது ஆட்டப் பகுதியிலேயே முந்நூறுகள் அடித்தார். இதன்மூலம் விரைவாக முந்நூறுகள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் வீரேந்தர் சேவாக்கிற்கு பின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முந்நூறுகள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[5] மேலும் தனது முதல் தொடரில் தான் அடித்த முதல் நூறு ஓட்டங்களை முந்நூறு ஓட்டங்களாக மாற்றிய மூன்றாவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக பாப் சிம்ப்சன் மற்றும் சோபர்ஸ் ஆகியோர் இந்தச் சாதனைகளைப் புரிந்தனர்.[6] இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கருண் நாயர் தேர்வானார்.[7] சூன் 11, 2016 இல் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கருண் நாயர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் கே. எல். ராகுலுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்கினார். இந்தப் போட்டியில் 173 ஓட்டங்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 பந்துகளை சந்தித்த இவர் 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.[8] சான்றுகள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia