கிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் [10]; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம்.[11]
மொகாலியில் ஏப்ரல் 2009 இல் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய சேவாக் வெறும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சரியாக செயல்படாததால் அடுத்த 20 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது.[17]
இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலிரண்டு பருவங்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார். ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார்.
இருபது20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் சச்சின் (48) முதலிடத்திலும், கங்குலி (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சேவாக் சதமடித்துள்ள 15 ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் 2011 திசம்பர் 8 அன்று 219 ஓட்டங்கள் எடுத்த சேவாக் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்ததில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். இப்பட்டியலில் ரோகித் சர்மா (264) முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா (209), சச்சின் டெண்டுல்கர் (200) முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் குறைவான பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர்களில் 2001 ஆம் ஆண்டில் கென்யாவுக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் கடந்த சேவாக் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை ராகுல் திராவிட், கபில் தேவ், மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.
2011 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார்.
சர்வதேச தேர்வுப் போட்டிகள்
தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 250 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (207 பந்துகள்)
தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 300 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (278 பந்துகள்)
தேர்வுப் போட்டிகளில் ஒருநாளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில், இலங்கை அணிக்கு எதிராக 284 ஓட்டங்கள் எடுத்த சேவாக் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு போட்டிகளில் ஆறு முறை இருநூறு ஓட்டங்களை கடந்துள்ள இந்தியர்களாவர்.
ஆறு முறை இருநூறு ஓட்டங்கள் எடுத்துள்ள சேவாக், தனது முதல் மூன்று இருநூறுகளையும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அடித்து சாதனை படைத்தார்.
தேர்வு போட்டிகளில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 2004 ஆவது ஆண்டில் 309 ஓட்டங்களைப் பெற்ற சேவாக் தேர்வு போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். மார்ச் 2008 அன்று சென்னையில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 319 ஓட்டங்களை பெற்று தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தார்.
சர்வதேச தேர்வு போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இருநூறு ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.
துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வு போட்டிகளில் இரண்டு முச்சதம், மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.