கருமுட்டை வெளிப்பாடு
கருமுட்டை வெளிப்பாடு அல்லது சூல்முட்டை வெளிப்பாடு என்பது சூலகத்தில் இருந்து சூல் முட்டைகளை விடுவிப்பதாகும். மனிதர்களில், சூலக நுண்ணறைகள் சிதைந்து இரண்டாம் நிலைக் கருவணுச் செல்களை வெளியிடும் போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.[1] கருமுட்டை வெளிப்பட்ட பின்னர், மதவிடாய்ச் சுழற்சியின் மஞ்சள் சடலக் கட்டத்தில், கரு முட்டையானது விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட வேன்டும். மேலும், கருவுற்ற புறணி ( கருப்பையகம் ) தடிமனாக மாறினால் தான் கருவுற்ற முட்டையைப் பெற முடியும். கருத்தரித்தல் எதுவும் ஏற்படவில்லை என்றால், மாதவிடாய் காலத்தில் கருப்பை புறணி அல்லது கருப்பைச் சுவர் திறந்து இரத்தம் சிந்தப்படும். ![]() ![]() மனிதர்களில், கருப்பை நுண்ணறை பெருக்கும் கட்டத்திற்கு பிறகு, மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் கருமுட்டை வெளிப்பாடு ஏற்படுகிறது. கருமுட்டை வெளிப்பாட்டின் நாட்கள் (28 நாள் சுழற்சியின் தோராயமாக 10 முதல் 18 வரை), இனப்பெருக்கத்திற்கு மிகவும் ஏற்ற கால கட்டமாகும்.[2][3][4][5] கடந்த மாதவிடாய் நாளின் (எல்.எம்.பி) ஆரம்பம் முதல் கருமுட்டை வெளிப்படும் காலம் வரை சராசரியாக 14.6 [6] நாட்கள் ஆகும், ஆனால் இது பெண்ணுக்குப் பெண்ணும் , மாதவிடாய் சுழற்சிகளுக்கும் இடையில் கணிசமாக மாறுபாடுவதாக உள்ளது, ஒட்டுமொத்தமாக 95% 8.2 முதல் 20.5 நாட்கள்வரை கணிப்பு இடைவெளி அமைகிறது. கருமுட்டை வெளிப்பாட்டின் செயல்முறை மூளையின் ஹைபோதாலமஸால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் பிட்யூட்டரி சுரப்பியின் முன்புற மடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வெளியீடு, லுடினைசிங் இயக்குநீர் மற்றும் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது.[7] மாதவிடாய் சுழற்சியின் முன்கூட்டிய கால கட்டத்தில், குமுலஸ் விரிவாக்கம் எனப்படும் கருப்பை நுண்ணறை பெருக்கும் கட்டத்தில் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்படும், இது கருமுட்டை தூண்டும் இயக்குநீரால் தூண்டப்படுகிறது. இது முடிந்த பின்னர், குறி எனப்படும் ஒரு துளை கருப்பை நுண்னறையில் உருவாகும். இரண்டாம் நிலை கருவணு முட்டை இந்த துளை மூலம் நுண்ணறைவிட்டு வெளியேறும். பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளியாகும் கருமுட்டை தூண்டும் இயக்குநீர், லுடினைசிங் இயக்குநீர் ஆகியவற்றின் அளவு அதிகரிப்பதன் மூலம் கருமுட்டை வெளிப்பாடு தூண்டப்படுகிறது. மஞ்சட்சடல (கருமுட்டை வெளிப்பட்ட பின்னான நிலை) கட்டத்தின் போது, இரண்டாம் நிலைக் கருவணு பாலோப்பியன் குழாய்கள் வழியாக கருப்பையை நோக்கிப் பயணிக்கும்.இந்த நேரத்தில் ஒரு விந்து மூலம் கருக்கட்டல் நிகழ்ந்திருந்தால், கருவுற்ற இரண்டாம் நிலைக் கருவணு அல்லது சினை முட்டை 6-12 நாட்களுக்குப் பிறகும் அங்கு உள்வைக்கப்படும்..[8] கருப்பை நுண்ணறைக் கட்டம்கருப்பை நுண்ணறைக் கட்டம் அல்லது கருப்பை நுண்ணறைப் பெருக்கக் கட்டம் என்பது மாதவிடாய் சுழற்சியின் கட்டமாகும், இச்சமயத்தின் பொழுது கருப்பை நுண்ணறைகள் முதிர்ச்சியடையும். கருப்பை நுண்ணறைக் கட்டம் மாதவிடாய்த் தொடக்கம் முதல் கருமுட்டை வெளிப்பாட்டின் தொடக்கம் வரை நீடிக்கும்.[9][10] கருமுட்டை வெளிப்பாடு வெற்றிகரமாக இருக்க, சூல்முட்டையின் உள்படலம் மற்றும் குமுலஸ் ஓபரஸ் கிரானுலோசா செல்கள் எனப்படும் கருப்பை நுண்ணறைச் செல்களும் கருமுட்டையை ஆதரிக்க வேண்டும். பின்னர் திரள் செல்களின் பெருக்கம் என்றழைக்கப்படும் மியூசிபிகேஷன் மற்றும் பெருக்கமானது இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும். மியூசிஃபிகேஷன் என்பது ஒரு ஹைலூரோனிக் அமிலத்தின் சுரப்பு ஆகும், இது திரள் செல்களின் பிணைப்பைச் சிதறடித்து கருமுட்டையைச் சுற்றியுள்ள ஒட்டும் பிணை வினைப்பொருளாகச் சேகரிக்கிறது. இந்தப் பிணைப்பு கருமுட்டை வெளிப்பட்ட பின்னர் கருமுட்டையுடன் இருக்க வேண்டியது, கருத்தரிக்க மிகவும் அவசியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.[11][12] திரள் அணுக்களின் எண்ணின் அதிகரிப்பானது, கருப்பை நுண்ணறைத் திரவத்தின் அளவின் கனிசமான அதிகரிப்புக்குக் காரணமாகிறது, இது நுண்ணறை 20 மி.மீ விட்டத்துக்கும் அதிகமாக இருக்கும். கருப்பையின் மேற்பரப்பில் வீக்கம் என்றழைக்கப்படும் கொப்புளத்தை இது உருவாக்குகிறது. மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia