கர்ஜத் தாலுகா, ராய்கட் மாவட்டம்
கர்ஜத் தாலுகா (Karjat taluka) (மராத்தி: कर्जत तालुका) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாகாகளில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் கர்ஜத் நகரம் ஆகும். கர்ஜத் தாலுகா கர்ஜத் மற்றும் மத்திரன் என இரண்டு நகராட்சிகளும், ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 176 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2] மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவும், 44,451 வீடுகளையும் கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,12,051 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 107,870 மற்றும் 104,181 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 966. பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 25216 - 12% ஆகும். சராசரி எழுத்தறிவு 80.65%. ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 11,507 மற்றும் 50,756 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.75%, இசுலாமியர்கள் 5.68%, பௌத்தர்கள் 5.33%, சமணர்கள் 0.57%, கிறித்துவர்கள் 0.32% மற்றும் பிறர் 0.36% ஆக உள்ளனர்.[3] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia