கலாசா துர் அருங்காட்சியகம்
கலசா துர் அருங்காட்சியகம் (Kalasha Dur Museum) பாம்புரேட் அருங்காட்சியகம் [1] என்றும் அழைக்கப்படும் இதுபாக்கித்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், சித்ரால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 2001 இல் தொடங்கி 2005 இல் நிறைவடைந்தன. கலாசா மக்களின் பாரம்பரியம் மற்றும் பரந்த இந்து குஷ் பகுதியின் மரபுகள் ஆகியவற்றிலிருந்து இனரீதியான ஆர்வமுள்ள சுமார் 1300 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2] வரலாறுபம்புரேட் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம், கலாசா துர் (கலாசா மக்களின் வீடு அல்லது கலாசாவுக்கான கலாச்சார மையம்) என்றும் அழைக்கப்படுகிறது. கலாசா துர் என்பது சேகரிக்கப்பட்ட ஏராளமான பொருட்களைக் காண்பிக்கக்கூடிய இடமாகும். இவற்றில் பெரும்பாலானவை கிரேக்கத்தை தளமாகக் கொண்ட "கிரேக்கத் தன்னார்வலர்கள்" என்று அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (அரசு சாரா அமைப்பு) உறுப்பினர்களால் சேகரிக்கப்பட்டன. அவர்கள் 1995 முதல் கலாசா துர் பள்ளத்தாக்குகளில் பணிபுரிந்து வந்தனர்.[3][4][5][6][7][8] இனவியல் சேகரிப்புஇதன் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டது; தரை தளத்தில் கலாசா கலாச்சாரத்தின் இனவியல் சேகரிப்பு மற்றும் பரந்த இந்து குஷ் பகுதியைச் சார்ந்த பொருட்கள் உள்ளது. மற்றொரு தளத்தில் பள்ளத்தாக்கில் எழுதப்பட்ட புத்தகங்களின் நூலகத்துடன் கலாசா கலாச்சார பள்ளி உள்ளது. மேலும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் தொழில்முறை பயிற்சிக்கான ஒரு மண்டபமும் உள்ளது. "கிரேக்கத் தன்னார்வல" உறுப்பினர்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான சேகரிப்புகளுக்கு பொறுப்பாளிகள் ஆவர். பாரம்பரிய பொருட்களை வாங்குவதற்காக அல்லது நவீன பொருட்களுடன் பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இவர்கள் கலாசா பள்ளத்தாக்குகளுக்கு வருவார்கள். "கிரேக்க தன்னார்வலர்களின்" உறுப்பினர்கள் புதிய கலாசா தலைமுறை தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய பொருட்களை ஒருபோதும் பார்க்க இயலாமல் போய்விடக்கூடாது என்றக் காரணத்தால், இவர்கள் பொருட்கள், உடைகள் மற்றும் பிற வழக்கமான பொருட்களை வாங்கத் தொடங்கினர். இவர்களின் முதல் நோக்கம் இந்த பொருள்கள் அனைத்தையும் ஒரு இன அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதாகும். எனவே எதிர்கால தலைமுறையினர் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். பின்னர், அருங்காட்சியகம் கட்டப்பட்டபோது சேகரிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கலாசா மக்கள் மற்றும் கலாசா பள்ளத்தாக்குகளில் வசிப்பவர்கள் தங்கள் அருங்காட்சியகத்திற்கு வழங்கிய பல பொருட்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. இந்து குஷின் குடியேற்றங்களை விட்டு வெளியேறிய பாரம்பரிய பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களையும் இந்த அருங்காட்சியகம் பெசாவர் மற்றும் சித்ராலின் பழங்கால கடைகளிலிருந்து வாங்கியது.[3] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia