கலாபவன்
கலாபவன் (மலையாளம் : കലാഭവന്, "கலை வீடு" என்று பொருள்) அல்லது கொச்சி கலாபவன் என்பது நிகழ்த்துகலை கற்பிக்கும் ஒரு பயிற்சிப் பள்ளி ஆகும். இது கேரளத்தின் கொச்சியில் செயற்படுகிறது.[1][2] கலாபவன் குறிப்பிடத்தக்க, அறியப்பட்ட பலகுரல் அல்லது விகடக் கலையின் கலைக்குழுவாகும். கேரள மாநிலத்தின் முதல் பலகுரல் கலைக்குழுவாக இக்குழு கருதப்படுகிறது. கேரள மாநிலத்தில் இக்குழு பிரபலமானது. கலாபவன் ஒரு நடிப்பு மையமாகவும் செயற்படுகிறது. இங்குப் பலகுரல் தொடங்கி கராத்தே, யோகா, பரதநாட்டியம், மோகினியாட்டம் எனப் பல கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. பல நடிகர்கள், இயக்குநர்கள் போன்றோரைக் கலாபவன் மலையாளத் திரையுலகுக்கு அளித்துள்ளது. இக்குழு செப்டம்பர் 3, 1969 அன்று நிறுவப்பட்டது,[3] இதைத் தொடக்கியவர் பாதிரியார் ஏபல் என்பவராவார்.[4] கலாபவன் தொடக்கத்தில் கிறித்துவ மதப் பாடல்களை உருவாக்கும் பணியிலும், இசைக்குழுவாகவும் செயற்பட்டது. பின்னர் அவர்கள் திரைப்படப் பாடல்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தனர்.[5] நிகழ்ச்சிகளுக்கு இடையில் தனிப்பட்ட கலைஞர்களின் பலகுரல் நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர், பல்குரல் நிகழ்ச்சிக்காகத் தனியாக ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது. கலாபவனில் தொழின்முறைப் பலகுரல் கலைஞர்கள் 6 பேர் கொண்ட குழு ஆரம்பிக்கப்பட்டது. 2015இல் சவுதி அரேபியாவின் ஷார்ஜாவில் கலாபவன் மையம் தொடங்கப்பட்டது. (கலாபவன் ஷார்ஜா) முன்னாள் மாணவர்கள்
மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia