கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர் நூல்)செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி பலராலும் போற்றிப் பயிலபட்டுவருகிறது. கலிங்கத்துப் பரணி என்னும் பெயரில் ஒட்டக்கூத்தர் பாடிய பரணிநூல் ஒன்றும் உண்டு. செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் வடகலிங்க மன்னன் அனந்தவன்மனை வென்ற திறத்தைப் பாடுகிறது. ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்ற திறத்தைப் பாடுகிறது. இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. தொடர்புமுதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் அவன் மகன் விக்கிரமன் தன் தந்தையின் சார்பில் வேங்கி நாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்துவந்தான். அக்காலத்தில் தென்கலிங்க வீமனை வென்றதை ஒட்டக்கூத்தர் பாடிய நூலே முதலாவது கலிங்கத்துப் பரணி. கருணாகரத் தொண்டைமான் வடகலிங்கத்தை வென்றதைச் செயங்கொண்டார் பாடிய நூல் இரண்டாவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் இயற்றிய பரணி சொல்நயம், பொருள்நயம் மிக்கு விளங்கியமையால் முதல் பரணி வழக்கொழிந்து போயிற்று. ஒட்டக்கூத்தர் பாடிய பரணி பற்றிய குறிப்புகள்
ஒட்டக்கூத்தர் பரணியின் பாடல்கள்சிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார், இந்திரவிழாவில் பலியிடுதலைக் குறிப்பிடும்போது மூன்று பாடல்களை மேற்கோளாகத் தருகிறார். அவை இங்குத் தரப்படுகின்றன. இந்த மூன்றில் 2-ஆம் பாடல் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் உள்ளது. மற்றைய இரண்டும் எந்த நூலிலும் காணப்படவில்லை. எனவே இவை ஒட்டக்கூத்தர் பாடிய பரணியின் பாடல் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
மோடி முன்தலையை வைப்பரே மூடி
ஆடி நின்று புதுத் திலதம்
அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ
கொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்குமாலோ
மண்ணின் ஆள் அற அறுத்த தங்கள் தலை
விண்ணின் ஆகிய தன் யாகசாலை தொறும்
கருவிநூல்
கருவிநூல்
|
Portal di Ensiklopedia Dunia