கல்முனைப் படுகொலைகள்
கல்முனைப் படுகொலைகள் (Kalmunai massacre) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 சூன் மாதத்தில் இடம்பெற்றன. இலங்கைத் தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீதான இப்படுகொலைகள் முன்னதாக இலங்கைக் காவல்துறையினர் மீது இடம்பெற்ற படுகொலைகளுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. சுமார் 250 பொதுமக்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.[2][3][4] 160 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.[5][6] பொதுமக்கள் படுகொலை1990 சூன் 11 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் காவல்துறையினரைப் படுகொலை செய்ததை அடுத்து, கல்முனை நகர் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதன் காரணமாக, விடுதலைப் புலிகள் கல்முனை நகரில் இருந்து வெளியேறினர். இதனை அடுத்து பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல் 1990 சூன் 20 இல் ஆரம்பமானது.[2] இலங்கைத் தரைப்படையினர் கல்முனை வாடி வீட்டு சந்தியில் நிலைகொண்டு, தமிழ்ப் பொதுமக்களைக் கடத்தினர் என்றும், பின்னர் அவர்கள் அனைவரையும் முசுலிம்களுக்கு சொந்தமான கடைகளுக்குப் பின்னால் வைத்து எரியூட்டட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை சரிவரத் தெரியாவிட்டாலும், சுமார் 160 பேர் கொல்லப்பட்டனர் என உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.[5] ஆனாலும், 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.[2][3] மேலும் தாக்குதல்கள்1990 சூன் 27 இல், 75 பொதுமக்கள் இலங்கைத் தரைப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேரின் தலையற்ற உடல்கள் கல்முனைக் கடற்கரையில் கரையொதுங்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. மொத்தமாக 7,000 பேர் வரை 1990 சூன் மாதத்தில் கொல்லப்பட்டனர் என அவ்வமைப்பு தெரிவித்தது.[3] மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia