காகேசியன் செப்பர்டு நாய்
காக்கேசியன் செப்பர்டு நாய் (Caucasian Shepherd Dog) என்பது காக்கேசியா பிரதேச நாடுகளான ஜார்ஜியா, ஆர்மீனியா, அசர்பைஜான், மற்றும் தெற்கு உருசியா பகுதிகளில் உள்ள காக்கேசிய மலைகள் மற்றும் ஸ்டெப்பி புல்வெளிகளில் மேயும் கால்நடைகளை பாதுகாப்பதற்காக வளர்க்கப்படும் உள்ளூர் நாய் இனம் ஆகும். மேலும் பண்புகள்காக்கேசியன் செப்பர்டு நாய் பொதுவாக 45 முதல் 70 கிலோ வரை (99–154 பவுண்டு) எடையுள்ளதாக இருக்கும். பெண் நாய்களின் உயரம் 67–70 செ.மீ (26–28 அங்குலம்) வரையும், ஆண் நாய்கள் 72–75 செ.மீ (28–30 அங்குலம்) உயரம் கொண்டிருக்கும். 2020ஆம் ஆண்டில் இதன் ஆயுட்காலம் 10–11 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டது. பயன்பாடுமுன்னர் காக்கேசியன் செப்பர்டு நாய்களை காவல் நாய்களாகவும், கரடி வேட்டை நாய்களாகவும் பணியாற்றியது. தற்போது இந்நாய்கள் உருசியாவில் சிறைக் காவல் நாய்களாக வேலை செய்கிறது.[1] கட்டுப்பாடுகள்காக்கேசியன் செப்பர்டு இன நாய்களை டென்மார்க்கில் தடைசெய்யப்பட்டுள்ளது[2].மேலும் உருசியாவில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.[3] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia