காக்கியெமொன் யானைகள்

காக்கியெமொன் யானைகள்
அருங்காட்சியகத்தில் காட்சியில்
செய்பொருள்போசலின்
அளவுஉயரம்: 35.5 சமீ
அகலம்: 44 சமீ
நீளம்: 14.5 சமீ
உருவாக்கம்1660-1690 எடோ காலம்
இடம்அரித்தா, சப்பான்
தற்போதைய இடம்அறை 92-94, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
அடையாளம்766883
பதிவு1980,0325.1-2

காக்கியமொன் யானைகள் என்பது, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு சப்பானிய களிமண்ணால் செய்த யானை உருவங்களைக் குறிக்கும். இவ்விணை யானைகள், சப்பானில் முதன்முதலாக எனாமலிட்ட வெண்களிப் பாண்டங்களை உருவாக்கிய காக்கியமொன் மட்பாண்டத் தொழிலகம் ஒன்றினால் செய்யப்பட்டது.[1] இது தொடக்ககால ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியால் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1660க்கும் 1690க்கும் இடையில் செய்யப்பட்டதாக நம்பப்படும் இவ்வுருவங்கள் "காக்கியமொன்" எனப்படும் கலைப்பாணியைச் சேர்ந்தவை. இவை, ஆசிய யானைகள் சப்பானில் காணப்படாதிருந்த ஒருகாலத்தில், சப்பானியத் தீவான கியுசுவில் சாகா பகுதியில் உள்ள அரித்தா என்னும் இடத்துக்கு அண்மையில் செய்யப்பட்டது.[2]

இவ்வுருவங்கள் ஆசிய யானைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. டியூரரின் காண்டாமிருகத்தைப் போல் கிடைக்கக்கூடிய ஓரளவு தகவல்களை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஆகும். இதை உருவாக்கிய கலைஞன் யானையை எப்போதும் பார்த்திருக்கவில்லை. ஆனால், புத்தமத மூலங்களில் கிடைத்த வரைபடங்களைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கக்கூடும். இவை அக்காலத்தில் சப்பானில் புதிய தொழில்நுட்பமாக இருந்த எனாமலிட்ட போசலினினால் செய்யப்பட்டவை. ஒவ்வொரு யானையும் 35.5 சமீ உயரமும், 44 சமீ நீளமும், 14.4 சமீ அகலமும் கொண்டது.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya