100 பொருட்களில் உலக வரலாறு![]() 100 பொருள்களில் உலக வரலாறு (A History of the World in 100 Objects) என்பது, பிபிசி ரேடியோ 4, பிரித்தானிய அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து செயற்படுத்திய ஒரு திட்டம். இத்திட்டத்தில் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நீல் மக்கிரெகர் எழுதி வழங்கிய 100 பகுதிகளைக் கொண்ட ஒரு வானொலித் தொடர் நிகழ்ச்சியும் அடங்கும். ரேடியோ 4ல் ஒலிபரப்பான இந்த 15 நிமிட தொடர் நிகழ்ச்சியில், உலக வரலாற்றை விளக்குவதற்காக பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள கலை, தொழிற்துறை, தொழில்நுட்பம், படைக்கலங்கள் போன்றவை அடங்கிய 100 பொருட்களைப் பயன்படுத்தினர். நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இத்திட்டம், முதலாவது நிகழ்ச்சியை 18 சனவரி 2010ல் தொடங்கி 20 வாரங்கள் ஒலிபரப்பியது. "100 பொருள்களில் உலக வரலாறு" (A History of the World in 100 Objects என்னும் பெயர்கொண்ட துணை நூலொன்றும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது. இதையும் நீல் மக்கிரெகரே எழுதியிருந்தார். உள்ளடக்கம்![]() ஒரு முக்கியமான திட்டம் என விபரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடர், உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் பெறப்பட்டனவும், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளனவுமான 100 பொருட்களின் ஊடாகச் சொல்லப்பட்ட மனித குலத்தின் வரலாறு எனப்பட்டது. இந்த நிகழ்ச்சித் தொடரின் தொடக்கத்தில் மக்கிரெகர் அதனைப் பின்வருமாறு அறிமுகப்படுத்தினார்.
பொருட்கள்நாம் மனிதர் ஆனது (கிமு 2,000,000 – 9,000)"நம்மை மனிதராக வரையறுத்த மிகப் பழைய பொருட்களை நீல் மக்கிரெகர் வெளிப்படுத்தினார்."[2] முதல் ஒலிபரப்பு வாரம் 18 சனவரி 2010ல் தொடங்கியது. பனிக்கட்டிக் காலத்தின் பின்: உணவும் பாலுணர்வும் (கிமு 9,000 – 3,000)"வேளாண்மை தொடங்கியதற்கான காரணம் என்ன? அக்காலத்தவர் விட்டுச் சென்ற பொருட்களில் பதிலுக்கான தடயங்கள் உள்ளன."[2] 25 சனவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
முதல் நகரங்களும் நாடுகளும் (கிமு 4,000 – 2,000)"மக்கள் ஊர்களிலிருந்து நகரங்களுக்குச் சென்றபோது நடந்தது என்ன? ஐந்து தொல்பொருட்கள் கூறும் கதை."[2] 1 பெப்பிரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
அறிவியல், இலக்கியம் என்பவற்றின் தொடக்கம் (கிமு 1500 – 700)"4,000 ஆண்டுகளுக்கு முன், சமூகங்கள், தொன்மங்கள், கணிதம், நினைவுச் சின்னங்கள் என்பவற்றினூடாகத் தம்மை வெளிப்படுத்தத் தொடங்கின."[2] 8 பெப்பிரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
பழைய உலகம், புதிய ஆதிக்க சக்திகள் (கிமு 1100–300)"உலகின் பல பாகங்களில் புதிய ஆட்சிகள் தமது மேலாண்மையை நிலைநாட்டுவதற்காகப் புதிய பொருட்களை உருவாக்கினர்."[2] 15 பெப்பிரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
கான்பியூசியசு காலத்து உலகம் (கிமு 500–300)"சான்றோர்களின் எழுத்துக்களைப் போல மறைந்திருக்கும் உண்மைகளை அலங்காரப் பட்டைகளும், குவளைகளும் எமக்குக் கூற முடியுமா?"[2] 22 பெப்பிரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
பேரரசுகளைக் கட்டியெழுப்பியோர் (கிமு 300 – கிபி 1)"பொருட்களூடாக உலக வரலாறு கூறுவதை நீல் மக்கிரெகர் தொடர்கிறார். இவ்வாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிகப்பெரிய ஆட்சியாளர்களைப் பற்றிக் கூறுகிறார்"[3] 17 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
பண்டைக்காலக் கேளிக்கைகள், தற்கால வாசனைப் பொருட்கள் (கிபி 1 – 600)"2000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் எவ்வாறு இம்பம் துய்த்தனர் என்பது குறித்து நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 24 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
உலக சமயங்களின் எழுச்சி (கிபி 200 – 600)"பல பெரும் சமயங்கள் தொடர்பான படிமங்கள் எப்பொழுது, எவ்வாறு புழக்கத்துக்கு வந்தன என்பது குறித்து நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 31 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
பட்டுச் சாலையும் அதற்கு அப்பாலும் (கிபி 400 – 700)"பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ஐந்து பொருட்கள், பண்டங்களும் எண்ணக்கருக்களும் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லப்படுவது தொடர்பான கதைகளைக் கூறுகின்றன."[2] 7 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
அரண்மனைக்குள்: அரசவை இரகசியங்கள் (கிபி 700 – 950)"1200 ஆண்டுகளுக்கு முன் ஆளும் உயர்குடியினரின் வாழ்க்கை குறித்த விபரங்களைத் தருகிறார்."[2] 14 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
யாத்திரிகர், படையெடுப்பாளர், வணிகர் ஆகியோர் (கிபி 900 – 1300)"1000 ஆண்டுகளுக்கு முன் வணிகம், போர், சமயம் என்பன பொருட்களை இடத்துக்கிடம் கொண்டு சென்ற விதம்."[2] 21 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
தகுதிக் குறியீடுகள் (கிபி 1200–1400)"தகுதிசார் இயல்புகளைக் கொண்டனவும், உற்பத்தி செய்வதற்குக் கூடிய திறமை தேவை உள்ளவையுமான பொருட்கள் பற்றி நீல் மக்கிரெகர் ஆய்வு செய்கிறார்."[2] 28 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
Meeting the gods (AD 1200–1400)"பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நம்பிக்கையாளர் எவ்வாறு கடவுளருக்கு அருகில் கொண்டுவரப்பட்டனர் என்பதைக் காட்டுகின்றன."[2] 05 யூலை 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
நவீன உலகுக்கான மாறுநிலைக் காலம் (கிபி 1375–1550)"நவீன காலகட்டத்துக்கு மாறும் நிலையில் உலகின் பெரிய பேரரசுகள் பற்றி நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 13 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
முதல் உலகப் பொருளாதாரம் (கிபி 1450–1600)"1450 இலிருந்து 1600 வரையான காலப்பகுதியில் பயணம், வணிகம், நாடுகளைக் கைப்பற்றல் என்பவற்றின் தாக்கங்கள் குறித்து மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 20 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. பொறுதியும் பொறுதியின்மையும் (கிபி 1550–1700)"16ம் 17ம் நூற்றாண்டுகளில் பெரிய சமயங்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்தன என்பது குறித்து நீல் மக்கிரெகர் கூறுகிறார்."[2] 27 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
புத்தாய்வுப் பயணங்களும், சுரண்டலும், அறிவொளியும் (கிபி 1680–1820)"வெவ்வேறு உலகங்கள் மோதும்போது ஏற்படக்கூடிய தப்பபிப்பிராயங்கள் குறித்து மக்கிரெகர் பேசுகிறார்."[2] 4 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
பேரளவு உற்பத்தியும், பேரளவு தூண்டுதலும் (கிபி 1780–1914)"எவ்வாறு தொழில்மயமாக்கம், மக்கள் அரசியல், பேரரசு நோக்கம் என்பன உலகை மாற்றின என்பது குறித்து."[2] 11 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
நமது உலகம் (கிபி 1914–2010)"அண்மைக்காலத்துப் பாலியல், அரசியல், பொருளாதார வரலாற்றின் அம்சங்கள் பற்றி நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 18 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia