காங் ஊ குய்
காங் ஊ குய் என்பது மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் உள்ள ஊசியான் நகருக்கு அண்மையில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும்மேற்கத்திய ஒரு வெண்கலப் பாத்திரம். மேற்கத்திய சூ காலப்பகுதிக்கு உரியதாகக் கருதப்படும் இந்தப் பண்டைக்காலச் சீனத் தொல்பொருள் அதிலுள்ள நீண்ட சாசனத்துக்காகப் பெயர்பெற்றது. இது 1977 இலிருந்து பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆசியச் சேகரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது.[1] இது முதன்முதலால என்ன சூழலில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், இதிலுள்ள சாசனத்திலிருந்து இக்கிண்ணம் தற்கால ஊசியான் நகருக்கு அண்மையில் உள்ள வெய் என்னுமிடத்தில் வைக்கப்பட்டு இருந்ததாகத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். புரூக் செவெல் கொடையின் உதவியுடன் பிரித்தானிய் அருக்காட்சியகம் இதை வாங்குமுன், இதன் உரிமையாளர்களுள் பிரித்தானிய இராசதந்திரியான டுகாட் மால்கம் என்பவரும் ஒருவர்.[1] மேற்கோள்கள்இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia